search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உணவுப்பழக்கம்"

    குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும்.
    குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.

    பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.

    முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.

    புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி.

    பொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு.



    ‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.

    வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும்.

    எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..

    நம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வர வேண்டும். ‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும்.

    உடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில் தான் தயாராகின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம்.

    குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்துவிடுவது... இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.



    உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம் தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள். கல்லூரி பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

    சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமாக வாழலாம்.
    ×