என் மலர்
குழந்தை பராமரிப்பு
மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. குழந்தைகள் மண் சாப்பிடுவதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.
குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட் செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை, சந்தோஷம், பயம், தாழ்வு மனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறை கூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.
மாசுபாடு காரணமாக குழந்தைகளின் மூளையின் செயல்திறன், நினைவாற்றல், கற்றல்திறனுக்கு பங்கம் ஏற்பட்டு விடும்.
காற்று மாசுபாடு பிரச்சினை டெல்லியை மட்டும் உலுக்கவில்லை. இந்தியாவிற்கே தலையாய பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது.
அதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுவின் அளவை மதிப்பிட செயற்கைக்கோள் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெற்காசிய நாடுகளில் 1 கோடியே 22 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஆப்பிரிக்க நகரங்களும் தப்பவில்லை.
ஏற்கனவே காற்று மாசு காரணமாக ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாச நோய் பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போது குழந்தைகளின் மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘மாசுபாடு காரணமாக குழந்தைகளின் மூளையின் செயல்திறன், நினைவாற்றல், கற்றல்திறனுக்கு பங்கம் ஏற்பட்டு விடும். மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் போனால் வரும் ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்றும் யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தைகள் பிரயாணம் செய்யும்போது காற்றை வடி கட்டுவதற்கு ஏதுவாக ‘மாஸ்க்’ அணிந்து பயணிப்பது நல்லது.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம்.
* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.
* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை தாக்கும் சில நோய்களும் அதற்கு வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை பார்க்கலாம்.
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசி இலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத்தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
குழந்தைகள் போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவை திணிக்கிறார்கள். இது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது.
குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கிறார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்... போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவை குழந்தைக்கு திணிக்கிறார்கள். இது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்கிரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும்? அதற்காக மாலை நேர ஸ்நாக்ஸ் வேண்டாம் என்பதில்லை உணவுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு போதுமானது என்பதே தெரிவதில்லை. தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சினை உண்டாகிறது. குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும்.
வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைக்கு வெளியில் இருந்து உணவு அல்லது குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தரும் உணவை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
விரல் சூப்பும் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்தலாம் அல்லது நிறைய கூடுதல் அன்பு செலுத்தி, பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.
குழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.
மூன்று வயது வரை, இப்பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால், குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும்.
ஐந்து, ஆறு வயதில் இப்பழக்கம் இருந்தாலும், மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிவர். இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே, விரல் சூப்பும் பழக்கம் மாறும்.
நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும். விரல் சூப்பும் குழந்தையிடம், அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய சிரமத்தை எடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு விபரம் தெரிந்த உடன், விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாய படுத்துவதோ அல்லது அவர்களை துன்புறுத்துவதோ கூடாது.
அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்தலாம் அல்லது நிறைய கூடுதல் அன்பு செலுத்தி, பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம். எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால், விரல் சூப்பும் பழக்கத்தை மறந்து விடுவர்.
குழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.
குழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது.
ஒரு குழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளின் திறமையை, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். உங்கள் குழந்தைகளுக்கிடையே உள்ள திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால், உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.
குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு, உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளை தவிர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமை, மற்றவர்களின் குழந்தைக்கு இல்லாமல் இருக்கும். அதை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைகளின் செயல், சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் இருக்க வேண்டும்.
படிக்கும் போது, எல்லோருமே தவறு செய்வது இயல்பு. தவறை, மென்மையாக திருத்த வேண்டியது முக்கிய கடமை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே தவிர, உங்களின் கருத்துக்களை ஏற்க, ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது.

அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து, அவசரப்பட்டு, அவர்களை திட்டக்கூடாது. இது, குழந்தைகளிடையே தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். இதுபோன்ற சமயத்தில், பொறுமையாக இருந்து, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது, சுற்றுலா அழைத்து செல்வதும், இயல்பாக விளையாட விடுவதும், அவர்களுக்கு பிடித்துப் போகும். குழந்தைகளை, அவர்களின் சொந்த
தவறான வழியில் செல்லாமல் இருக்க, கொஞ்சம் கடிவாளமும் இருக்க வேண்டும்.
அவசரப்பட்டு சொல்லுகின்ற ஒரு வார்த்தை, மனம் நோகச் செய்யும். வார்த்தைகளை எப்போதும் சரியாக கையாள வேண்டும். நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளிடம் கூடுதல் நேரம் செலவழித்தால், தங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விடுவர். இது, எதிர்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தை அழுது அடம்பிடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான விஷயம். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும். பெற்றோர் மீது நம்பிக்கை இழக்கவும் வைத்துவிடும். ‘நீ அழுது அடம்பிடித்தாலும் நீ விரும்பியது எதுவும் நடக்காது’ என்று கூறி குழந்தைகளுடன் விவாதம் செய்யவும் கூடாது. அவர்களுடைய செயல் தவறானது என்பதை புரிய வைக்க முயற்சித்தாலும் அதனை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள்.
அந்த சமயத்தில் குழந்தை களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேச வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தை பற்றி பேசி, இயல்பு நிலைக்கு கொண்டு வர வழி காண வேண்டும்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. பிறர் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும். தன்னிடம் இருப்பதை மற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அது அடம்பிடிப்பதை தவிர்க்க உதவும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளிடம், ‘நீ அழாமல் சாப்பிட்டால் உனக்கு பிடித்தமான பிஸ்கட், சாக்லேட் வாங்கி தருவேன்’ என்று கூறினால், பிடிவாதத்தை தளர்த்துவார்கள். அப்போது அன்பாக பேசி, அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கூறி சாப்பிட வைக்கலாம். சாப்பிட்டதும் மறக்காமல் வாக்குறுதி அளித்த பொருளை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும். அதுபோல் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களை பாராட்டவும் வேண்டும். கூடவே பரிசு கொடுத்தும் ஊக்குவிக்கலாம். குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். அதனால், பெற்றோரே முழு கவனத்துடன் இருக்க வேண்டும். டெங்குக் காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கால்கள், கைகள் ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகள் விளையாட வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கொசுக் கடிக்காமல் இருக்க, திரவங்களைப் பூசி அனுப்பவும் (திரவங்கள் உயர்தரமானதாக இருக்க வேண்டும்)
குழந்தைகள் தேங்கிய நீரின் அருகே செல்வதைத் தவிர்க்க வைக்கவும்.
குழந்தைகள் அதிக அளவில் நீர் குடிக்க வைக்கவும். (எப்போதும் வெந்நீரை மட்டுமே குடிக்கச் செய்யவும்)
இவை தவிர, வீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் தேங்கும் விதத்தில் பொருள்களை வைக்காதீர்கள்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட குழந்தைகளுக்கு...
குழந்தைகளின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதத்தில், உணவுகளைக் கொடுக்க வேண்டும். இளநீர் குடிக்கச் செய்யலாம். கடைகளில் விற்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசலைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரித்த தயிர் மற்றும் மோரில் உப்பு சேர்த்து கொடுக்கலாம். வெந்நீர் குடிப்பதைவிடவும் இவை நல்லது. குளிர்ச்சியான உணவு வகைகளைத் தவிர்க்கவும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது.
குழந்தைகள் ஒருநாளில் வழக்கமாக 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பார்கள். அது தொடர வேண்டும். சிறுநீர் நிறத்தைக் கவனித்து மருத்துவரிடம் கூற வேண்டும்.
குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் எனபதை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விடட்டும்.
பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என சில தாய்மார்கள் கேட்கிறார்கள். பொதுவாக பார்முலா உணவுகளில் உப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுக்கள் போன்ற அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் என்பதால் பால் மட்டுமே போதுமானது. ஆனால் காய்ச்சலுடனோ அல்லது வெயில் காலமாகவோ இருந்தால் குழந்தைக்கு நாவறட்சி ஏற்படும். இந்த சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் கொடுப்பது நல்லது.
பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலசிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலசிக்கல் வரும். இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் புகட்டுவது நல்லது.
பெற்றோர் குழந்தைகளுக்கு சில பாதுகாப்பு முறைகளை சொல்லி தர வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும்.
என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.
நம் வீட்டின் அருகில் யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!
பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது தவறு… தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும்.
சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம். கைக்குழந்தைக்கு, பள்ளி செல்லும் குழந்தையைக் காட்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைக்கு அதிகளவு பாடத்தில் உதவி செய்ய வேண்டியிருக்கலாம். அதனால், எல்லா நேரங்களிலும் இரு குழந்தைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பெற்றோர் இதை எண்ணிக் குழப்பமோ, குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம்.
குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது, தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.
இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு எப்படிப் பேசுவது, பிரச்சனையை எவ்வாறு அணுகி சமாளிப்பது, விட்டுக்கொடுப்பது போன்ற குணங்களும், திறன்களும் வளரும்.

பெற்றோருக்குக் குழந்தைகளின் பொழுதுகளில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தள்ளியிருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்சனையில் குறுக்கிடும்போது, யார் பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம்கொள்ளாமல், அவா்களுக்கு என்ன வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும் நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.
சண்டைக்குப் பின்னரும், ‘அதற்கு நீதான் காரணம்’, ‘நான்தான் காரணம்’ என அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பழிபோடாமல், பிரச்சனையை ஒரேயடியாக முடித்துவிட்டு வெளிவரச் செய்ய வேண்டும். சண்டை அளவுக்கு மீறிவிட்டால், இருவரையும் சிலநேரம் பிரித்துவிட்டு, உணா்ச்சிகள் வடிந்த பின்னா் திரும்பவும் சந்திக்க வைப்பது நல்லது; இது அடிதடி, காயங்கள் ஏற்படாமல் தடுத்துவிடும்.
உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!