என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஸ்மார்ட்போனில் விளையாடும் குழந்தைகளை தாக்கும் கழுத்துவலி
Byமாலை மலர்1 Nov 2017 4:04 AM GMT (Updated: 1 Nov 2017 4:05 AM GMT)
குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும்.
ஸ்மார்ட்போன்கள் இப்போது குழந்தைகளின் கைகளில் சர்வ சாதாரணமாக தவழ தொடங்கி விட்டன. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்துவதற்காக பெற்றோரே கையில் போனை கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளை போனிலேயே மூழ்க வைப்பது மன நலத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ அல்லது விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்படும்.
குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் உபயோகிப்பதற்கு தடைபோட வேண்டும்.
அவர்கள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.
அது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது. போன் மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.

Next Story
×