search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bathe"

    • கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது.
    • இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, நாமக்கல், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது. இதனால் கொல்லிமலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.

    இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வனச்சர கர் சுப்பராயன் கூறுகையில், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் 200 அடி உயரத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தடை மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றார்.

    ×