என் மலர்
குழந்தை பராமரிப்பு
முடி வெட்டிக்கொள்வது பற்றிய பயம் கொள்ளும் குழந்தைகளின் பயத்தை போக்க உதவும் வழிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் சற்று வளர்ந்த பின், முதன் முறையாக முடி வெட்டும் பொழுது, அச்செயல் குறித்து பயம் கொள்வர்; குழந்தைகளில் சிலர் வேண்டுமானால் பயமின்றி முடி வெட்டிக் கொள்ள முற்படுவர். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் முடி வெட்டிக்கொள்ள பயம் கொள்வதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது; அப்படி முடி வெட்டிக்கொள்வது பற்றிய பயம் கொள்ளும் குழந்தைகளின் பயத்தை போக்க உதவும் வழிகள் பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..!
1. முடி வெட்டிக்கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைகளை முதலில் அமைதிப்படுத்தி, அதை எதற்காக குழந்தை செய்ய வேண்டும், முடி வெட்டும் பொழுது என்ன நடக்கும், எப்படி வெட்டுவர், அதில் பயம் கொள்ள ஒன்றுமில்லை என்று எடுத்துக்கூறி குழந்தையை அமைதிப்படுத்துங்கள்..!
2. முடி வெட்டிக்கொண்டிருக்கும் போது விளையாட்டுத்தனத்தை காட்டினால், என்ன நிகழும் என்பதை ஒரு அன்பு கலந்த எச்சரிக்கையாக குழந்தைகளுக்கு தெரிவித்து விடுங்கள்..! அது அவர்களை அமைதியாக உட்காரச் செய்யும்.
3. குழந்தைகள் முடி வெட்டும் போது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும், அவர்களை அமைதிப்படுத்தி, விளையாட்டுக்காட்டி முடி வெட்டும் நபர் உள்ள சரியான, உங்கள் குழந்தைக்கு பொருத்தமான கடையை தேர்வு செய்யுங்கள். அது குழந்தையின் பயத்தை போக்க பெரிதும் உதவும்.
4. குழந்தைகள் அழுதால், அவர்களுக்கு எந்த விளையாட்டுப்பொருளை அளித்தால், அமைதியாக இருப்பார்களோ அல்லது எந்த சாக்லெட்டை குடுத்தால், அமைதியடைவார்களோ அவற்றை எல்லாம் உடன் எடுத்துச் செல்லுங்கள். மேலும் குழந்தைகளிடத்தில் அமைதியாக முடி வெட்டிக்கொண்டால், அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வதாக, பிடித்ததை வாங்கி கொடுப்பதாக கூறி குழந்தையை தாஜா செய்ய முயலுங்கள்..!
5. நீங்கள் முடி வெட்டிக் கொள்ளும் இடத்திலேயே, குழந்தையையும் உங்களுடன் சேர்ந்து முடி வெட்டிக்கொள்ள செய்யுங்கள்; பெற்றோரான உங்களுடன் சேர்ந்து ஒரு செயலை செய்யும் பொழுது, குழந்தைக்கு ஏற்படும் பயம் குறையும். குழந்தை சந்தோஷத்துடன் உங்களோடு பேசி, விளையாடிக் கொண்டே முடி வெட்டிக்கொள்ள முன்வரும்.

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, நற்பண்புகளை வளர்க்கக்கூடிய கதைகளை பெற்றோர்கள் கூற வேண்டும்.இது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.
நமது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பான பணிகளை சத்தமின்றி செய்திருக்கின்றன. அதில் ஒன்று குழந்தைகள் பராமரிப்பு. அதன்மூலம் எதிர்கால இந்தியாவுக்கு நல்ல இளைஞர்களை தர வேண்டும் என்ற அக்கறை அவர்களிடம் இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் வேலைகளை பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தின் மூத்த குடிமக்களான தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகளுக்கு நீதிகதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். அந்தக் கதைகளில் ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் போன்ற நூல்களில் சொல்லப்பட்ட நீதிபோதனைகளை கதைகளைப் போல சொன்னார்கள். சுவாமி விவேகானந்தருக்கு அவரது சின்னவயதில், அன்னை புவனேஸ்வரி மகனுக்கு உணவூட்டும் போதும், மடியில் தலைவைத்து படுக்கும் போதும் ராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் தெய்வீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்.
சத்ரபதி வீரசிவாஜியின் குழந்தை பருவத்தில் இருந்தே அவருடைய தாயார் ஜீஜிபாய் ராமாயணத்தில் உள்ள வீரசாகசங்களையும், மகாபாரதத்தில் உள்ள போர்களக் காட்சிகளையும் கதைகளைப் போல சொல்லி, தமது மகன் சிவாஜி வீர தீரம்மிக்க இளைஞனாக உருவாக்கினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அவரது தாத்தா மோதிலால்நேருவும், அவரது பாட்டியும் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் தேச விடுதலைக்கான போராட்ட நிகழ்வுகள் கலந்திருந்தன. அருமை மகளுக்கு கதைச்சொல்லி, தெளிவும், துணிவும் ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாட்டுக்காக சிறையில் இருந்த காலம். சிறைசாலையிலிருந்துக் கொண்டே மகளுக்கு உலகம்தோன்றிய கதை, மனிதநாகரிகம், நாடுகள், மொழிகள், உயிரினங்களின் கதை, இலக்கியம், அரசியல் என்று கடிதங்கள் மூலம் உலக ஞானம் ஊட்டினார் ஜவஹர்லால்நேரு.
கொலம்பஸ் சிறுவனாக இருந்த போது, அவனது உறவினர் ஒருவர் மாலுமியாக இருந்தார். அவர் கடல்பயணம் சென்று வந்து, கற்பனை கலந்து அலைகடலில் வீர தீர சாகசம் புரிந்து, பலநாடுகளுக்கு, கடல் மார்க்கமாக சென்று வந்ததாக கதை, கதையாக சொல்வார். அதைக்கேட்டு நம்ப தொடங்கிய சிறுவன் கொலம்பஸ், தமது எதிர்கால லட்சியமாக கடல்பயணம் செய்யவேண்டும், பலநாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சின்ன வயதிலேயே கொலம்பஸ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
சிறுவர்களுக்கு சொல்வதற்கு விதவிதமான நிறைய கதைகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புத்திசாலிகள் கதை, கஞ்சர்கள் கதை, பேய்கள் கதை, வேடிக்கைக் கதைகள், மூடர்கள் கதை, பழமொழி கதைகள், பறவைகள் கதை, பேராசைக்காரர் கதை, விந்தைக் கதைகள், அறிவுக் கதைகள், முட்டாள்கள் கதை, மந்திரக்கதைகள், தந்திரக்கதைகள், மிருகக்கதைகள், ஊர் கதைகள், விகடக் கதைகள், வேதக்கதைகள், புராணக் கதைகள், பிரயாணக்கதைகள், தெய்வக் கதைகள், நீதிக் கதைகள், நொடிக் கதைகள், புதிர்க் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லா கதைகள், ஈசாப்கதைகள், ஜென் கதைகள்,
பீர்பால் கதைகள் என்று நாளைய தலைமுறைக்கு, குழந்தைகளுக்கு சொல்வதற்கென்று அருமையான, அழகான, தன்னம்பிக்கை, துணிச்சல், நற்பண்பு, வெற்றிக்கான வழியை, வாழும் கலையை உணர்த்தும் பல அற்புத கதைகள் இருக்கின்றன. ஆனால் கதைச் சொல்லிகளைத் தான் பார்க்க முடியவில்லை. முன்பு வீடுகளில் பெரியவர்கள், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று இருந்தார்கள். இன்று தனிக்குடித்தன சமூகத்தில் அவை கதைகளாகி விட்டன. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, நற்பண்புகளை வளர்க்கக்கூடிய கதைகளை பெற்றோர்கள் கூற வேண்டும். இது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.
சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்)

அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது.
அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது. பவுடரில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசம் தொடர்பான பிரச்னைகளையும், ஆபத்தான நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். பவுடரின் துகள்கள் எளிதாக சுவாசம் வழியாக, நுரையீரலைச் சென்று சேர்ந்துவிடும். சுவாசப் பாதையால், அந்த பவுடர் துகள்கள் உள்ளே போவதைத் தடுக்க முடியாது. குறைமாதக் குழந்தைகள், பிறவி இதயக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குறைந்த அளவு பவுடர் கூட நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம்.
அதனால் குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக படவுர் பயன்படுத்த வேண்டும். குழந்தையின் உடலில் நேரடியாக பவுடரைக் கொட்டாமல், பெற்றோர் தங்கள் கைகளில் தட்டி, அதைக் குழந்தைகளுக்குப் போடலாம். குழந்தைகள் தாங்களாகவே பவுடர் போடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பவுடர் டப்பாவை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்கெனவே போட்ட பவுடரை துடைத்து எடுக்காமல், மேலும் மேலும் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும்.
குழந்தைக்கு ஒவ்வொருமுறையும், டயாப்பர் (Diaper) மாற்றும்போது ஏற்கெனவே பூசியிருக்கும் பவுடரைத் துடைத்து எடுத்துவிடவும். குழந்தையின் தோல் மடிப்புகளில் இருக்கும் பவுடரை, நன்றாகத் துடைத்து எடுக்கவும். பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பொதுவாக ஒவ்வாமை குறைவான (Hypo Allergenic) அல்லது ஆர்கானிக் முறையில் தயாரித்த பவுடர்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
* குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடர் போட வேண்டாம். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் தரமான பவுடரைப் போடலாம்.
* தரமான பவுடரைப் பார்த்து வாங்குங்கள். மருத்துவர் ஏதேனும் பவுடரைப் பரிந்துதைத்தால் அதையே குழந்தைக்கு போடலாம்.

குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. பச்சிளம் குழந்தையை தினமும் குளிக்க வைப்பது நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளைக் குளிப்பாட்ட பெரியவர்களைத் தேடுவது, வயதான பாட்டிகளைத் தேடுவது எனப் பெரிய சவாலே நடக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. எப்படி எனத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலை சுலபமாகி விடும்.
* குழந்தையைத் தினமும் குளிப்பாட்டுவது நல்லது.
* வயிற்றில் இருக்கும்போது நீரில் இருந்த குழந்தை கொஞ்சம் பூசினாற் போலத் தெரியும். ஆனால், பிரசவத்துக்கு பின் உடல் வற்றும்.
* எடை குறைவதுடன் சருமத்தில் உள்ள தோல் உரிந்து வறண்டு போகும்.
* சருமம் அழகாக மாற, குழந்தையை ஆரோக்கியமாக இருக்க தினமும் குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெயும் தண்ணீரும் குழந்தைக்கு மிகவும் தேவை. ஆதலால் குளியலும் எண்ணெய் குளியலும் குழந்தைக்கு மிக அவசியம்.
* மிகவும் குளிர்ந்த இடத்தில், குளிர் பிரதேசங்களில் இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தையைக் குளிக்க வைக்கலாம்.
குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி?
* எண்ணெயை இளஞ்சூடாக சூடுப்படுத்திக் கொள்ளவும்.
* முதலில் குழந்தைக்கு தேவையானவற்றை எண்ணெய், சோப், பேபி ஷாம்பு, துண்டு, நீங்கள் உட்கார மனை போன்ற நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்களோ அதையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு பக்கெட்டில் வெந்நீர், இன்னொரு பக்கெட்டில் இளஞ்சூடான தண்ணீர்; உங்களின் கை சூடு பொறுக்கும் அளவு.
* எல்லாப் பொருட்களும் கை எட்டும் தூரத்தில் சீராக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* இப்போது கால்களை நீட்டிக் கொள்ள வேண்டும். குழந்தையை நிமிர்த்தி கால்களில் விட்டுக் கொள்ள வேண்டும். குழந்தையின் தலையை கிளிப் மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
* குழந்தையின் முகம், மார்பு பகுதி, வயிறு, கால்கள் ஆகிய இடங்களில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
* மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி கழுத்தில் எண்ணெயைத் தடவ வேண்டும்.
* குழந்தையின் உடலிலும் எண்ணெய், உங்கள் கைகளிலும் எண்ணெய் என்பதால் குழந்தையை மிக கவனமாக எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து படுக்க வைத்துக் கொள்ளுங்கள்.
* முன்பு போலவே, கால்களால் குழந்தையின் தலையை கிளிப் போல பிடித்துக் கொள்ள வேண்டும்.
* குழந்தையின் தலை, பின் கழுத்து, முதுகு, பின்னங்கால்கள் ஆகியவற்றில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
* எண்ணெய் தடவும்போதே மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.
* குழந்தை கவிழ்ந்து படுத்தபடி இருக்கும்போதே, குழந்தையின் தலையில் இளஞ்சூடான நீரை ஊற்ற வேண்டும்.
* குழந்தை கவிழ்ந்து இருப்பதால் முகத்தில் நீர் விழாது. எனினும் கவனமாக நீர் ஊற்ற வேண்டும்.
* இப்போது பேபி ஷாம்பு போட்டு முடியை அலசலாம். உடம்புக்கு பேபி சோப் போடலாம். தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள்.
* குழந்தையை திருப்பி, முகம், கை, கால்கள், உடம்புக்கு சோப் போட்டு அலசி விடுங்கள்.
* கண்களில் சோப், ஷாம்பு, தண்ணீர் போகாமல் கவனமாக குழந்தையை கையாள வேண்டும்.
* தொடை இடுக்கு, கை இடுக்கு, அக்குள் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்துவது நல்லது.
* குளிக்க வைத்தப் பின் குழந்தையை துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள்.
* கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் நன்றாகத் துடைக்க வேண்டும்.

குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவேதான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
மனிதனின் தேவைகளில் உணவு, குடிநீர், இவைகளுக்கு அடுத்த பெரிய தேவை, பாதுகாப்பு என்றார் உளவியல் அறிஞர், ஆபிரகாம் மேஸ்லோ. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இவரது தேவை படிக்கட்டுகள் எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறது.
பெரியவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவேதான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பொறுப்பை பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும், கவனக்குறைவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது நடுக்காட்டுப்பட்டி நிகழ்வு நமக்கு உணர்த்தியது. நாடே சோகத்தில் ஆழ்ந்த நிலையும், தீபாவளி கொண்டாட முடியாத நிலையும் இதனால் ஏற்பட்டது.
பெற்றோரின் பொதுவான கவனக்குறைவு நமக்குத் தெரியாதது அல்ல. கிராம திருவிழாக்களில் குழந்தைகளை தவறவிட்டு விடுவார்கள். காவல் கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன பல குழந்தைகளை கண்டுபிடித்து திருப்பி ஒப்படைக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். ஓர் ஊரில் ஒரு குழந்தையை மகளிர் காவலர் தாயாரிடம் ஒப்படைத்தபோது அந்த குழந்தையை, ‘எங்கே தொலைந்து போனாய்?’ எனக் கூறி சரமாரியாக தாக்கினார் அந்த குழந்தையின் தாய். ஆனால் எல்லா பெற்றோரும் அப்படியல்ல, கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழும் பெற்றோர்தான் அதிகம். ஏன் சில பெற்றோர்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள்?
பெற்றோரை குறை சொல்ல முடியாது, அவர்களின் வாழ்க்கை முறை அப்படி! இது ஒரு கலாசார பிரச்சினை எனலாம்.இப்படிதான் வளர்ந்தோம், இதுதான் எனக்குத் தெரியும், எனவே இப்படிதான் நடந்து கொள்வோம் என்ற வகையில் பெற்றோரின் நடவடிக்கை இருக்கிறது. படித்தவர்களும் பெரியதாக மாறவில்லை. தலைக்கவசம் அணியச் சொல்கிறோம், எத்தனை பேர் அணிகிறார்கள்? இருக்கை பெல்ட் அணிய வற்புறுத்துகிறோம், எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள்?
கட்டுபாடில்லாத சுதந்திர வாழ்க்கை வாழ பழக்கமாகிவிட்டோம். கடமைகளை மறந்து உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்கிறோம். நமது பழக்கங்களும் அப்படியே இருக்கின்றன. பழக்கங்கள் சிலந்தி வலைகள், ஆனால் காலப்போக்கில் கம்பி வலை என்பது ஸ்பெயின் நாட்டு பழமொழி. கம்பி வலைகளான அலட்சிய பழக்கங்களை அறுத்தெறிந்து நல்ல பாதுகாப்பு பழக்கங்களை நாம் பழக வேண்டும். அதில் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியமான பழக்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.ஆழ்துளை கிணறு மீட்பு நடவடிக்கையை நேரலையில் பெற்றோர் பார்த்த வண்ணம் இருந்தபோதே, நீர் தொட்டியில் விழுந்து ஒரு குழந்தை இறந்திருக்கிறது.
இதுபோலத்தான் மாடி வீட்டிலிருந்து குழந்தை விழுவதும், இருசக்கர வாகனத்திலிருந்து குழந்தைகள் தவறி விழுவதும்.முன் காலங்களில் வீடுகளில், பெரிய அளவில் சமையல் நடக்கும். கொதிக்கும் பானையில் விழுந்து உயிர் போன குழந்தைகளும் உண்டு, பிழைத்துக் கொண்ட குழந்தைகளின் தோல் கருகி, உடல் உருக்குலைந்ததைப் பார்க்க முடியும். அது அந்த நபரின் தலைவிதி என்றே நம்பினார்கள். இன்று சிறிய குடும்பங்கள், பாதுகாப்பான சமையல் எரிவாயு அடுப்புகள், அதனால் அது போன்ற பரிதாப விபத்துகள் குறைந்தன. ஆனால் பாதாள மரண கிணறுகள் இன்று தோன்றிவிட்டன.நிலத்தடி நீர் குறைந்ததால் கண்மூடித்தனமாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுவிட்டன.
இதில் பல கிணறுகள் மூடியும்,சில மூடாமலும், சில சரியாக மூடாமலும் இருந்தன. தமிழ்நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் நடந்த 16 விபத்துகளில் இரண்டு குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. இந்திய அளவில் இதுவரை 59 நிகழ்வுகள் நடந்துள்ளன. இனியும் இது போன்ற சோக நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மிக நேர்த்தியாக எல்லா ஆழ்துளை கிணறுகளையும் மூடிய தமிழக அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அதை ஒரு புனிதப்போராகவே செய்து முடித்தனர் அரசு அதிகாரிகள்.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தவுடன் அங்கு முதலில் வருபவர் தீயணைப்புத் துறையினர்தான். சமீபத்தில் சங்கரன்கோவிலில் நடந்த ஒரு சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் வடிவமைத்த கருவியின் உதவியுடன் துளையில் விழுந்த சிறுவனை காப்பாற்றி விட்டனர். அந்த ‘மணிகண்டன்’ கருவிகளும், தீயணைப்பு துறையில் வாங்கப்பட்டது. ஆனால் நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் அக்கருவியை பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆழ்துளை வெறும் ஆறு அங்குல விட்டம் மட்டுமே கொண்டது. ஆறு அங்குல விட்டம் கொண்ட ஒரு துளையில் குழந்தை விழுமா என்று நாம் ஆச்சரியப்படக் கூடும். ஆனால் விழுந்திருக்கிறது. அப்படியும் ஒரு குறுகலான கருவியை மணிகண்டன் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சில மணி நேரத்தில் தயாரித்திருக்கிறார்.
இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் இந்த பணியில் கைத்தேர்ந்தவர்கள்தான் என்றாலும் சிறு குழந்தை வெகு ஆழத்தில் இறுக்கமாக மாட்டிக்கொண்டதால் உயிருடன் மீட்க முடியாமல் போனது. இணை கிணற்றின் துளை வழியாக உள்ளே சென்று சிறுவனை மீட்பது ஆபத்தானது. இருந்தும் 16 தீயணைப்பு வீரர்கள் அந்த பணியை செய்ய முன்வந்தார்கள். உயிரை விட கடமை பெரியது என்பது அவர்களது கொள்கை. ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பது தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நோக்கம்; அதை சரியாகவே நிரூபித்தனர் அந்த மாவீரர்கள்.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு வாகன விபத்துகளில் ஒரு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலகின் 2 சதவீதம் வாகனங்கள் மட்டும் இருக்கும் இந்தியாவில் உலகின் 11 சதவீதம் உயிரிழப்புகள் நடக்கிறது. அந்த அளவுக்கு கவனக்குறைவு மற்றும் அலட்சியம் நம்மிடம் உண்டு. தங்களது உயிரை பாதுகாக்கத் தவறியவர்களாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பில் எப்படி கவனம் செலுத்தப் போகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
குழந்தைகளை விட பெரிய செல்வம் வேறில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு விபத்துகள் எப்படியும் நேரலாம் என்பதை பெற்றோர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, எப்படியெல்லாம் அதை தடுக்க முடியுமோ அப்படியெல்லாம் தடுக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோரின் கவனம் அதிகம் தேவை.
2001-ம் ஆண்டு, சென்னை மண்ணடியில் 9 அங்குல ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தமிழ்மணி என்ற மூன்று வயது சிறுவனை மீட்கும் பணி, அப்போது இணை ஆணையராக இருந்த எனது (செ. சைலேந்திரபாபு) தலைமையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர். செ. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்,
காவல்துறை தலைமை இயக்குனர்

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளை கண்டிக்காமல் இருப்பதும். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்று பார்க்கலாம்.
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் கோபப்பட்டு கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
ஒரு வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக நல்ல முன்னேற்றம் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
மூன்று வயதிற்க்குட்ப்பட்டது ஓடியாடும் வயது. பெரும்பாலும் அவர்கள் பின்னால் ஓட முடியாமல், அவர்களை தடுக்க முடியாமல் பெற்றோர் கத்துவர், அது அவர்களை நல்வழிப்படுத்த என்று நீங்கள் சமாதானம் சொல்லிக் கொண்டால் தயவு செய்து அதிலிருந்து வெளியே வாருங்கள். குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஐந்து வயதிற்க்குட்ப்பட்ட குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.
கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்

பச்சிளம் குழந்தைகளின் செயல்பாடுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
குழந்தைகளின் செய்கை மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே குழந்தையின் அழகிய மொழிகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோருக்கே உண்டான தனிக்கலை. பச்சிளம் குழந்தைகளின் செயல்பாடுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
1 குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பையும், அருகாமையையும் தான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறார்கள். எனவே குழந்தைகள் அழும் போது அவர்களை தூக்கி கொஞ்சினால் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்திவிடுவார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உணவூட்டுதல், மசாஜ் அல்லது குளிக்க வைக்கவோ செய்யலாம்.
2 குழந்தையைத் தூக்கும்போது முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் ரிப்ளெக்ஸ்' திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது
3 குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும். எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தும்.
4 இளந்தாய்மார்கள் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.
5 குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தையின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும் குழந்தையின் இடுப்பு ஆடையை அடிக்கடி மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
6 குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் மிகவும் சிரமப்படுவார்கள். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது போன்ற தேவையற்ற செயல்களை தவிர்த்து, குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும். குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசை நேர்மறை பலனைத் தருகிறதாம்.

குழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்..
குழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல; மனிதர்களின் உடலுக்கு புரோட்டின், கால்சியம், விட்டமின் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகித அளவில் அவசியம் தேவை. மேலும் குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இச்சத்துக்கள் கட்டாயமாக தேவை. ஆகவே, மழலைகளுக்கு வாரத்தில் ஒரு நாளன்றோ, இல்லையேல் ஒரு நாளின் ஒரு வேளையிலோ அல்லது பல வேளைகளுக்கோ detox diet கொடுக்கும் போது, அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே, detox diet குழந்தைகளுக்கு வேண்டாம்; இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்..!
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை மற்றும் மதிய உணவுகளில் தினமும் ஏதேனும் ஒருவகைப் பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிட அளித்தாலே போதுமானது. மேலும், மாலையில் காய்கறி அல்லது மாமிச சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் பழங்களையும் அளிக்கலாம்.
குழந்தைகளின் எடையை குறைக்க, detox diet சரியான வழியல்ல. குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்கவும். மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பது மிகவும் நல்லது. பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் என்றாலே முகம் சுளிக்கும் மழலைகளுக்கு சிறு வயதிலேயே diet என்ற பெயரில் உணவுகளை ஒருவித கட்டாயத்துடன் சாப்பிட அளித்து, அவர்கள் உணவினையே முற்றிலும் வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.., பெற்றோர்களே!
குழந்தைகள் அணைத்து வகையான உணவுகளையும் உண்ணுமாறு செய்யுங்கள்; அதனால், அவர்கள் எடை கூடினாலும், விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் மூலம் உடல் எடை தானாகக் குறையும். மேலும் குழந்தைகள் வளர வளர அவர்களின் உயரத்திலும், உடல் எடையிலும் பல மாற்றங்கள் நிகழும்..!

குழந்தை இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தான் சொல்லித்தர வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தை இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தான் சொல்லித்தர வேண்டும். நமது அனுபவங்களை நமது குழந்தைக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழியில் வழிநடத்துவது அவசியம். அதற்காக குழந்தைக்கு எதிர்மறையான எண்ணங்களை திணிக்கக்கூடாது. இங்கு உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன என்று கொடுக்கப்பட்டுள்ளது.
உறவுகளை மேம்படுத்த ஒவ்வொருவரும் தன்னைத்தானே நேசிக்க வேண்டியது அவசியம். நமக்கு இருக்கும் தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டியது அவசியம். தன்னைப்பற்றி இழிவாக எண்ணம் கூடாது. இதனை குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது அவசியம்.
இந்த உலகம் மிகவும் அழகானது. அதை பார்த்து ரசிப்பது அவசியம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கொடுங்கள். பயணங்களை ஊக்குவிப்பதன் மூலம் அறிவு அதிகரிக்கும்.
நல்ல நண்பர்கள் பலரை வாழ்க்கையில் பெறுவது மிக அவசியமானது. உன் நண்பர்களை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல, நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை உங்கள் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கும். அதை நோக்கி பயணிப்பதே நமது கடமை. இதனை குழந்தைகளுக்கு தகுந்த வயதில் சொல்லித்தர வேண்டும். அவர்கள் வாழ்வில் குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ள பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் காதல்வயப்படுவது இயல்பு தான். அவர்களுக்கு உண்மையான காதல் உன்னை தேடி வரும் வரை காத்திரு. ஏதேனும் ஒரு காதலில் இணைந்துவிடாதே என்று சொல்லித்தர வேண்டும். வயது கோளாறில் வாழ்க்கையை தொலைப்பவர்கள் ஏராளம். எனவே இதை பற்றி குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசுவதில் தவறில்லை.

மாணவர்கள் மனோபாவங்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி, சீர்த்திருத்தி, நல்வழிப்படுத்தித் தகுதியுள்ளவர்களாக உருவாக்க எவ்விதமான முயற்சியும் பெரியதாக மேற்கொள்ளப்படவில்லை.
“நல்லதோர் வீணைச் செய்தே, அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ..” என்றான் பாரதி. இதே போல், கேட்பாரற்ற நிலையில்தான் இளைஞர்கள் உள்ளனர். “இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். சக்தி மிக்க அவர்களே நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் வல்லமை மிக்கவர்கள்” என்கிறோம். ஆனால், யதார்த்தத்தில், எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் பெருத்துள்ளனர். மாறாக, தனிமனித ஒழுக்கமோ, இனம், மொழி, நாட்டுப் பற்றோ, சமூக அக்கறையே சிறிதும் இல்லாதவர்கள். இவர்களின் மனோபாவங்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி, சீர்த்திருத்தி, நல்வழிப்படுத்தித் தகுதியுள்ளவர்களாக உருவாக்க எவ்விதமான முயற்சியும் பெரியதாக மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும், நீதி மன்றங்களிலும், சிறைச்சாலைகளிலும், கோடிக் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டு குற்றவாளி கூண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இவர்களுக்காக அரசாங்கம் பல கோடிகளைச் செலவுச் செய்கிறது.
18 வயதில் இருந்து 35 வயதுள்ளவர்களில் பெரும்பாலானோர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல வருடங்கள் படித்தவர்கள். ஆனாலும், மனசாட்சிக்கு விரோதமான குற்றங்களைச் செய்து விட்டு இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படியென்றால், தொடக்கக் கல்வியிலிருந்து பள்ளி ஆசிரியர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் சரியாக இவர்களுக்கு வழிகாட்டவில்லை என்பது உறுதியாகிறது.
ஆரம்பப் பள்ளியிலிருந்தே, ஒவ்வொரு குழந்தையின் மீதும் மிகுந்த அக்கறையும், எதிர்காலத்தில் ஆர்வமும் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட்டிருந்தால் அவர்கள் சமூகத்திற்கெதிரானவர்களாக மாறியிருக்க மாட்டார்கள். பெருமளவில் இழப்பைத் தவிர்த்திருக்கலாம். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் பெருகிக் கொண்டிருக்கும் காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும், சிறைச்சாலைகளையும் கண்டிப்பாகக் குறைக்க முடியும்.
சமூகத்திற்கெதிரான செயல்களில் படித்த மாணவர்களும் ஈடுபடுகின்றனர். அப்படியென்றால், ஒருவன் மனசாட்சிக்கெதிராக, அடுத்தவர்களைத் துன்புறுத்தி, குறுக்கு வழியில் முன்னேற மிகக் கொடுமையான காரியங்களை நிகழ்த்துகின்றான், என்றால் கற்றக் கல்வி அவனைச் சிந்திக்கத் தூண்டவில்லை.
மருந்து, மாத்திரைகள் நோயைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், வீரியத்தை இழந்து விட்டன என்று பொருள். அதேபோல்தான் சிந்திக்கத் தூண்டாது கல்வி முறையும் காலாவதியாகி விட்ட மருந்து மாத்திரைகளைக் கண்ணாடி நிலைப் பேழைகளில் வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவார்கள். அதே போன்று, மாணவர்களைச் சிறிதும் சிந்திக்கவோ, மேம்படுத்தவோ வாய்ப்பில்லாத கல்வி முறையை வைத்துக் கொண்டு அடுத்தத் தலைமுறையினரை ஏமாற்றி வருகிறோம்.
அதே போல், மாணவர்களைச் சிந்தித்கத் தூண்டும் பயிற்சி முறைகள் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். உலகளவில் சாதித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கடந்து வந்த பாதைகள் சொற்பொழிவுகளாக மாணவர்களால் கேட்கப்பட வேண்டும். பயிற்சிகளும், சொற்பொழிவுகளும் உள்ளத்திலும், உடலிலும் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமைக் கொண்டவை.
பல அரசுப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்களே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், இடிந்த நிலையில் இருக்கும். மாணவர்கள் ஒரு பக்கம் படித்துக் கொண்டிருப்பர். அடுத்தப் பக்கமோ ஆடுகளும், மாடுகளும் மேய்ந்துக் கொண்டிருக்கும். உள்ளூர் மக்களோ பள்ளி வளாகத்திற்குள் குளித்துக் கொண்டிருப்பர். இத்தனைக்கும், அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் பலர் கட்டுமானப் பணிகளில் (கொத்தனார்) திறன் உள்ளவர்களாக இருப்பர்.
இவர்களின் மனித வளத்தைப் பயன்படுத்திப் பள்ளிச் சுவரைக் கட்டுவதற்கு முதல்வரோ, தலைமையாசிரியரோ ஏன் முயற்சிக்கக் கூடாது? மாணவர்களின் திறன்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்காக, உள்ளூர் மக்கள் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. மாணவர்களின் பொறுப்புணர்ச்சியும் மேலோங்கும். அதேபோல், பல அரசுப் பள்ளி மாணவர்களிடம் வண்ணம் (பெயிண்ட்டிங்) அடிக்கும் திறன் இருக்கும். அவர்களைப் பயன்படுத்திப் பள்ளிச் சுவர்களுக்கு வண்ணமடிக்க முயற்சிக்கலாம்.
எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்தால் காரியம் நிறைவேறாது. அரசு, உள்ளூர் மக்களின் நிதி, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களின் மனித வளம் முதலானவற்றை ஒருங்கிணைத்தால் பள்ளிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மாணவர்களைக் கொண்டே உருவாக்க முடியும். மாணவர்களிடம் பொதிந்துள்ள ஆற்றல்களை, திறன்களை, மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுகூட மனித வளத்திற்கு எதிரானது. தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் மட்டுமே வாளின் கூர்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும். மழுங்கிப் போன வாளால் பயனில்லை. அதேபோல் திறன்களில்லாதவர்கள் முழு மனிதர்கள் அல்லர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். பேச்சுப் போட்டிகள் பரிசுகளுக்காக மட்டுமல்ல. வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கக் கூடியது. மாணவர்களிடமுள்ள அறிவையும், தன்னம்பிக்கையும், ஆளுமைத் திறன்களையும் கண்டறிவதற்கான வாய்ப்பாக எண்ணிப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
ஆசிரியர்களின் பங்களிப்போடு சிறு சிறு முயற்சிகள் தொடக்கப் பள்ளியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டால், மாணவர்களின் மனித வளம் பாதுகாக்கப்படும். அடுத்த நொடியே கரைந்துப் போகின்ற வெற்று உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முட்டாள்தனமான சிந்தனை மாணவர்களிடம் இருக்காது. திரையரங்குகளும், மதுக்கடைகளும் மூடப்படும்.
அரசியல்வாதிகளுக்குப் பின்னால் கைகளில் கொடிகளோடு அணிவகுத்துச் செல்லும் முட்டாள்தனமான போக்கு இருக்காது. இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பார்கள். வெற்றுப் பேச்சுக்களும், வீண் முழக்கங்களும் இருக்காது. இந்திய அரசின் நிதியும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும். அதோடு, காவல் நிலையங்களையும், சிறைச்சாலைகளையும், நீதிமன்றங்களையும் மேம்படுத்தவோ, அதிகரிக்கவோ அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படாது.
இந்திய இளைஞர்களின் மனித வளத்தை அளவிட வேண்டுமென்றால் மூடியுள்ள சாராயக்கடைகளுக்கும், மதுக்கடைகளுக்கும், திரையரங்குகளுக்கும் முன்னால் ஆர்வத்தோடு காத்திருப்பவர்களைப் பார்த்தாலே புரியும். ஆனால், திறந்திருக்கும் நூலகங்களிலோ கூட்டமிருக்காது. இந்த இழி நிலை மாறாத வரை தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் விடிவுக் காலமில்லை.
மதுவின் கொடுமைகளைப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். மதுவால் குடல் சரிந்து ஒரே மகனைப் பறிகொடுத்த தாயின் வேதனைகள் காணொலிக் காட்சிகளாகப் பள்ளிகளில் ஒளிப்பரப்ப வேண்டும். ஆனால் செய்வதில்லை. காரணம், இந்த முறை, பாடத்திட்டத்தில் இல்லை. குடிகாரர்களைக் கதாநாயகர்களாகவும், வீரம் மிக்கவர்களாகவும், காதல் ரசனைக் கொண்டவர்களாகவும், தவறைத் தட்டிக் கேட்கும் தைரியம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கும் திரைப்படக் காட்சிகள் உள்ளவரை, இளைஞர்களின் மனித வளத்தைத் திசை மாற்றிச் சீர் செய்ய முடியாது.
அரிமதி இளம்பரிதி, எழுத்தாளர், புதுச்சேரி.

சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப்படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.
தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத்தான் ஏங்கும். தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்துகொள்கிறது. தாயின் அரவணைப்புக்குள் நிம்மதியாக தூங்கவும் விரும்புகிறது. அம்மா அருகில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அழத் தொடங்கிவிடுகிறது. தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ கிடைத்த பிறகே அமைதியாகிறது.
குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்க வைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா–பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது. ஆனால் நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.
இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். முதல் குழந்தை தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள் அன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.
தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யும் போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும். நாலு, ஐந்து வயதில் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும்.
அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு. 7–8 வயதாகும் போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத் தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது.
இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்ல விதமாய் பெற்றோரே எடுத்துச் சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.
அவர்களின் மனோ ரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.
இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும் வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.
சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.

குழந்தைகளுக்கு எது போன்ற பொம்மைகளை வேண்டும் என கேட்டறிந்தது, ஆபத்தில்லாத, பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது.
குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென உடைகள் வாங்கும் போதே பல பெற்றோர்கள் சில விளையாட்டு பொருட்களையும் சேர்த்தே வாங்கி விடுகிறார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் குழந்தைகளுக்கு பல வகையான பொம்மைகளை வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் குழந்தையின் வயதிற்கேற்ற பொம்மைகளையும், சிலர் பாலினத்திற்கேற்ற பொம்மைகளையும் வாங்கி கொடுப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள் பற்றி பார்க்கலாம்.
சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் குளோரைட் உள்ளிட்ட மோசமான இரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.
கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள் நீங்கள் கவனிக்காத நேரத்தில் அவற்றை விழுங்கி விடலாம். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரப்பர் பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத மென்மையான பந்துகளை வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது. குழந்தைகள் பேட்டரியை கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்கள் அழகாய் இருப்பதாய் விட பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். விளையாட்டுப் பொருளின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.
எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்கும் போது, இரு நபர் அல்லது குழுவாக சேர்ந்து விளையாடுவது போன்ற பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது. அவர்களது உடலில் அதிக வேலை கொடுக்காமல், அறிவிற்கு வேலை கொடுப்பது போன்ற விளையாட்டுகளை விளையாடுவது அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கும்.
குழந்தைகளின் பாலினத்தை வைத்து அவர்களுக்கான பொம்மைகளை தீர்மானிக்காதீர்கள். அவர்களுக்கு எது போன்ற பொம்மைகளை வேண்டும் என கேட்டறிந்தது, ஆபத்தில்லாத, பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுப்பதோடு பெற்றோரின் கடமை முடிவதில்லை. அவர்களுடன் நேரம் செலவிடவும், விளையாடவும் வேண்டும்.