search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க
    X
    இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க

    இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க

    குழந்தைகளுக்கு எது போன்ற பொம்மைகளை வேண்டும் என கேட்டறிந்தது, ஆபத்தில்லாத, பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது.
    குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென உடைகள் வாங்கும் போதே பல பெற்றோர்கள் சில விளையாட்டு பொருட்களையும் சேர்த்தே வாங்கி விடுகிறார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் குழந்தைகளுக்கு பல வகையான பொம்மைகளை வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் குழந்தையின் வயதிற்கேற்ற பொம்மைகளையும், சிலர் பாலினத்திற்கேற்ற பொம்மைகளையும் வாங்கி கொடுப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள் பற்றி பார்க்கலாம்.

    சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் குளோரைட் உள்ளிட்ட மோசமான இரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

    கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள் நீங்கள் கவனிக்காத நேரத்தில் அவற்றை விழுங்கி விடலாம். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரப்பர் பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத மென்மையான பந்துகளை வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது. குழந்தைகள் பேட்டரியை கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்கள் அழகாய் இருப்பதாய் விட பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். விளையாட்டுப் பொருளின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

    எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்கும் போது, இரு நபர் அல்லது குழுவாக சேர்ந்து விளையாடுவது போன்ற பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது. அவர்களது உடலில் அதிக வேலை கொடுக்காமல், அறிவிற்கு வேலை கொடுப்பது போன்ற விளையாட்டுகளை விளையாடுவது அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கும்.

    குழந்தைகளின் பாலினத்தை வைத்து அவர்களுக்கான பொம்மைகளை தீர்மானிக்காதீர்கள். அவர்களுக்கு எது போன்ற பொம்மைகளை வேண்டும் என கேட்டறிந்தது, ஆபத்தில்லாத, பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுப்பதோடு பெற்றோரின் கடமை முடிவதில்லை. அவர்களுடன் நேரம் செலவிடவும், விளையாடவும் வேண்டும்.
    Next Story
    ×