என் மலர்
குழந்தை பராமரிப்பு
ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர்.
குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்னைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்னை ஏற்படலாம்.
ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.
குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள். தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.
குழந்தையின் கழுத்தில், கைகளில் ரப்பர் நிப்பிளை கட்டிவிட கூடாது. தவறுதலாக குழந்தைக்கு திடீர் அடைப்பு ஏற்பட்டு விடலாம். இதனால் குழந்தைக்கு ஆபத்தான பாதிப்பு கூட ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும்.
சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும். பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.
லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்கப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

புதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நீங்கள் முன்னதாகவே குழந்தைகளை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம்.
புதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நிறைய குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது தங்கள் பெற்றோரிகளிடம் இருந்து முதல் முறையாக நீண்ட நேரம் தள்ளி இருப்பார்கள். அதுமட்டுமல்லாது பள்ளியில் சுற்றிலும் அந்நியர்கள் உடன் இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கையாள உங்கள் குழந்தையை மனதளவில் பள்ளிக்கு தாயார் படுத்துவது மிக முக்கியமானது.
பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம். இவையெல்லாம் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவை. பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார வேண்டி வரும். இதையெல்லாம் குழந்தைக்கு பரிச்சயப்பட சில காலம் ஆகும் எனினும், நீங்கள் முன்னதாகவே அவர்களை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம்.
1 உங்கள் மகன் / மகளுக்கு இன்று முதல் புதிய அட்டவணை ஆரம்பிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அவர்கள் நேரத்துக்கு எழுந்து / உறங்க வேண்டும் என்றும், தினமும் சில மணிநேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .
2 பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் ஆசிரியரை பார்க்கவும்.
3 பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
4 முடிந்தால், உங்கள் குழந்தையை சக வகுப்பு மாணவன் / மாணவியுடன் சந்திக்க வையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு பள்ளி துவங்கும் பொழுது ஒரு தோழன் அல்லது தோழி கிடைத்திருப்பர்.
5 உங்கள் குழந்தை இதற்கு முன் பால்வாடி பள்ளியில் படித்திருந்தால், தங்கள் பெற்றோரிடம் இருந்து அதிக நேரம் தள்ளி இருப்பது அவர்களுக்கு கடினமாக இருக்காது.
6 பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
7 உங்கள் குழந்தையை சுயமாக நடந்துகொள்ள ஊக்குவியுங்கள், அதனால் அவர்களுக்கு பள்ளியில் உதவி தேவைப்படாது. உதாரணத்திற்கு, உதவியின்றி கழிப்பறையை உபயோகிக்க கற்றுக்கொடுத்தல், பாட்டில் இருந்து தண்ணீர் குடிக்க கற்றுக்கொடுத்தல் மற்றும் தங்கள் உடைமைகளை பாதுகாக்க கற்றுக்கொடுத்தல்.
8 யாரவது அவர்களின் பெயரை அழைக்கும் போது எவ்வாறு புரிந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். ஆசிரியரிடமும் மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றுகொடுங்கள்.
9 கடைசியாக, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிங்கள். அவர்களுக்கு அது மோசமாக நாளாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்துங்கள். பள்ளிக்கு செல்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எடுத்து சொல்லுங்கள்.

பச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருசில செய்கைகள் மூலம் தாயார் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தலாம்.
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு அதனை பராமரிப்பது சவாலான விஷயமாக இருக்கும். குழந்தை அவ்வப்போது அழுது கொண்டே இருக்கும். அது எதற்காக அழுகிறது என்பதை சட்டென்று யூகிக்கவும் முடியாது. பெரும்பாலும் குழந்தைகள் பசிக்காக அழும். சிறுநீர் கழித்து உடல் ஈரப்பதமாக இருந்தாலும் அழும். தூக்கம் வருவதற்காகவும் அழும். பச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருசில செய்கைகள் மூலம் தாயார் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தலாம்.
பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு தாயின் அருகாமை மிக முக்கியம். தாயின் குரல் குழந்தைக்கு நம்பிக்கையை கொடுத்து அமைதிப்படுத்தும். பெரும்பாலான தாய்மார்கள் இதனை கவனத்தில் கொள்வதில்லை. பொம்மையையோ, கிலுக்கு போன்ற ஏதாவதொரு விளையாட்டு பொருளையோ காண்பித்து அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பார்கள். அவற்றின் சத்தம் குழந்தையை மிரளவைக்கும். தாயின் குரல்தான் குழந்தைக்கு பரீட்சயமானது. அதனால் தாலாட்டு பாடலாம். வேறு ஏதாவது பாடலும் பாடலாம். பாட்டு தாயின் குரலில் வெளிப்பட வேண்டும். தாயின் குரல் குழந்தைக்கு அருகாமையையும், ஆறுதலையும் கொடுக்கும். அழுகையையும் நிறுத்த உதவும்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் மடியில் எடுத்து வைத்து முன்னும், பின்னும் அசைக்கலாம். வயிற்றுடன் அரவணைத்து மென்மையாக வருடலாம். அது குழந்தைக்கு கருவறைக்குள் இருந்ததை நினைவூட்டுவதாக அமையும்.
கைவிசிறியை கொண்டு வீசியபடி குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்கலாம். குழந்தையின் கைகளை பற்றிக்கொண்டு முன்னும், பின்னும் அசைத்து குஷிப்படுத்தலாம். அதுவும் குழந்தையை அமைதிப்படுத்தும்.
தொடர்ந்து படுத்த நிலையிலேயே இருப்பது குழந்தைக்கு அசவு கரியத்தை ஏற்படுத்தும். சலிப்பையும் உண்டாக்கும். அதனாலும் அழுது கொண்டிருக்கும். குழந்தையை எடுத்து தோளில் போட்டு சிறிது நேரம் அங்கும், இங்கும் நடமாடலாம். நகரும் தொட்டிலாக இருந்தால் அங்கும் இங்கும் நகர்த்தி உலா வரச்செய்யலாம்.
குழந்தையின் உடல் முழுவதும் போர்வையை சுற்றி தூங்க வைக்கலாம். அது கருவறைக்குள் இருந்தது போன்ற உணர்வை குழந்தைக்கு ஏற் படுத்தும். கதகதப்பான சூழலையும் ஏற்படுத்தி கொடுக்கும். ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிவகை செய்யும்.

உலகளாவிய பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் குவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 117 நாடுகளின் உலகளாவிய பசி குறியீடு 2019 பட்டியலில் (ஜி.ஹெச்.ஐ.) இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான சீனா (25-வது இடம்), இலங்கை (66), மியான்மர் (69), நேபாளம் (73), வங்காளதேசம் (88) மற்றும் 94-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.
ஜி.ஹெச்.ஐ. பட்டியலில் இந்தியா பெற்ற இடம், போதுமான உணவின்மை, தரம் குறைந்த உணவு, குழந்தைகள் வளர்ப்பில் போதுமான அக்கறை செலுத்தப்படாத தன்மை, சுகாதாரமற்ற சூழல்கள் போன்றவற்றை சுட்டுகிறது.
உலகில் இரண்டாவது பெரிய உணவு உற்பத்தி நாடான இந்தியாவில்தான் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட மக்களின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவதாக இருப்பதாக ஜி.ஹெச்.ஐ. அறிக்கை கூறுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகிய நான்கு குறிகாட்டிகளின் அடிப்படையில் ஜி.ஹெச்.ஐ. கணிக்கப்படுகிறது.
இந்தியாவின் தர வரிசை எண் 102-க்கு பதிலாக 91 ஆக இருக்க வேண்டும் என்று கூறி நிதி ஆயோக்கின் துணைத்தலைவரான ராஜிவ் குமார் தலைமையிலான குழு ஒன்று ஜி.ஹெச்.ஐ. தரவரிசை 2019-ஐ உடனடியாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பின் (சி.என்.என்.எஸ். 2016-18) ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு தர வரிசை எண்களை ஒப்பிட்டால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஜி.ஹெச்.ஐ. அறிக்கை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கு இணையான முறையில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.
2018-ல் 132 உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இருந்தது. 2017-ல் இதை உருவாக்கும் வழிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களினால் 119 உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் இருந்தது.
உதாரணமாக 2016-18 காலகட்டத்தின் சராசரி மதிப்பை கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை ஜி.ஹெச்.ஐ. கணக்கிட்டுள்ளது; 2014-18-ஐ கொண்டு குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றை கணக்கிட்டுள்ளது.
2017 ஆய்வுகளை கொண்டு ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணம் (உலக வங்கி, எப்.ஏ.ஒ., டபிள்யு.ஹெச்.ஒ. மற்றும் யுனிசெப்) பற்றி கணக்கிட்டுள்ளது. சி.என்.என்.எஸ். (2016-18) தான் மிக சமீபத்தில் செய்யப்பட்ட கணக்கெடுப்பாகும்.
இது ஒரு மூன்றாவது நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் பிறப்பில் இருந்து 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சிறார்களின் ஊட்டச்சத்து அளவுகளை பற்றி செய்யப்பட்ட கணக்கெடுப்பாகும்.
1.1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை பற்றிய ஆய்வுகள் மாநில அளவில் சேகரிக்கப்பட்டன. வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை வெகு வேகமாக ஆண்டுக்கு 1.8 சதவீதம் குறைந்துள்ளதாக சி.என்.என்.எஸ் ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
இது இதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு விகிதமாகும். வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை 38.4 சதவீதத்தில் (2015-16) இருந்து 34.7 சதவீதமாக குறைந்துள்ளது.

உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை 21 சதவீதத்தில் இருந்து 17.3 சதவீதமாக குறைந்துள்ளது. எடை குறைவாக உள்ள குழந்தைகளின் விகிதம் 35.7 சதவீதத்தில் இருந்து 33.4 சதவீதமாக குறைந்துள்ளது.
2017-18-ல் தொடங்கி 2019-20-க்குள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை வெகுவாக குறைக்க தமிழக அரசு ஒரு அதிகபட்ச இலக்கை நிர்ணயித்துள்ளது.
“ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய நான்கு வழிமுறைகள் உள்ளன. குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை, ரத்த சோகை மற்றும் எடை குறைவு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பல்வகை ஊட்டச்சத்து திட்டத்தை டி.என்.ஐ.என்.பி. (தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டம்) முதன் முதலில் 1990-களில் தொடங்கிய மாநிலம் தமிழகம் தான். பின்னர் இது மத்திய அரசின் ஐ.சி.டி.எஸ். (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்) திட்டத்துடன் இணைக்கப்பட்டது” என்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் செயலாளர் எஸ்.மதுமதி கூறுகிறார்.
“திட உணவு பழக்கத்திற்கு மாறத்தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் வழங்கினோம். இது சில சமயங்களில் மோடக் (உருண்டை) அல்லது லட்டு வடிவத்தில் அளிக்கப்பட்டது. இதை தாய் மற்றும் சேய் இருவரும் உண்ண முடியும். அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று தாய்மார்கள் இவற்றை உட்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் போதுமான அளவுக்கு சத்தான உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய முடியும். குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை பொது வினியோக திட்டம் உறுதி செய்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக ஒரு முழுமையான 1000 நாட்கள் ஊட்டசத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து அளிப்பதில் நாம் மிகச்சிறப்பாக செயல்படுகிறோம்” என்கிறார் மதுமதி.
ஜெ.பி.ஏ.எல் (பொருளியல் துறையில் 2019 நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டப்லோ ஆகியோரின்) அமைப்பை ஆய்வுகளை செய்யவும், தரவுகள் சேகரிப்பை பலப்படுத்தவும் தமிழகம் அமர்த்தியுள்ளது.
“இந்த திட்டங்களில் செலவுகளுக்கேற்ற பலன்கள் ஏற்படுகிறதா? என்பதை கண்டறிய 5 மாவட்டங்களில் பெரிய அளவில் சீரற்ற சோதனை மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உதாரணமாக ஒரு முதல் ஆய்வில் அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆரம்ப கால குழந்தைப்பருவ ஊட்டச்சத்து மற்றும் கல்வி சேவைகள் அளிப்பில் உள்ள போதாமைகளை கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் தகவலறிந்த யோசனைகள் உருவாக்கப்பட்டு அங்கன்வாடி ஊழியர்களை ஊக்கப்படுத்தும் செயல்திட்டங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கூடுதல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்குதல் போன்றவை மூலம் ஐ.சி.டி.எஸ். திட்டத்தை பலப்படுத்த உதவியுள்ளது” என்கிறார் ஜே.பி.ஏ.எல். தெற்கு ஆசியாவின் திட்ட இயக்குனரான அபர்ணா கிருஷ்ணன்.
இந்த இலக்குகளை அடைய 2019-20-ல் ரூ.2,236.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் மத்திய அரசு அளிக்கும். தமிழகத்தின் முயற்சிகளுக்கு ‘போஷன் அபியன்’ பரிசு முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
திறன் கட்டமைப்பு, குவிதல். நடத்தை மாறுதல்கள் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றில் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஐ.சி.டி.எஸ்.இன் பயன்பாட்டு மென்பொருளை செயல்படுத்தியதில் இரண்டாம் பரிசை வென்றுள்ளது. ஐ.சி.டி.எஸ் தகவல்களை தினமும் பதிவேற்றம் செய்ய சுமார் 54,000 ஸ்மார்ட்போன்கள் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு வினியோகப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதில் முக்கியமாக கிராமப்புறங்களில் தனித்துவமான சவால்கள் உள்ளன.
கஞ்சி, திணை போன்ற பாரம்பரிய உணவுகளில் இருந்து பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கும், பச்சை காய்கறிகளுக்கு பதிலாக சிப்ஸ், வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், பன்கள், பர்கர், பீட்சா, நூடூல்ஸ் மற்றும் இதர பேக் செய்யப்பட்ட உணவுகள் போன்ற ஜங்க் உணவுகளுக்கு மாறி விட்டனர்.

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப்படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.
* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.
* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.
* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும். ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.
* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.
* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.
* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.
* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.
* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.
* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.

தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

'சர்க்கரை சேர்க்கப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பரிந்துரை செய்கிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும். அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகளவிலான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக கூறுகிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த பேராசிரியர் மேரி பியூட்ர்ல்.
"பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் அதிகளவு இனிப்பு பொருட்களுடன், தேவைக்கு அதிகமான ஆற்றலை கொடுக்கும் மூலப் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. பழங்களில் பெறப்படும் சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதாவது, இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்" என்று அவர் கூறுகிறார்.
இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது.
"தக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் வேறுபட்ட சுவைகளை முயற்சி செய்வதற்கு குழந்தைகள் தயாராகவே இருக்கிறார்கள். புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும்" என்று பேராசிரியர் பியூட்ர்ல் மேலும் கூறுகிறார்.
அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறும் அவர், "ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது" என்று அவர் மேலும் எச்சரிக்கிறார்.

Cerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது.
Cerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது. இந்த வாதம் ஏற்பட்டால், உடற்செயல்கள் பாதிக்கப்படும்; மேலும் பேசுவது, அன்றாட செயல்கள் செய்வது என அனைத்தும் பாதிக்கப்படும்.
1. பெருமூளை வாதம் ஏற்பட்டால், அது மூளை பிரச்சனைகளை பக்கவாதமாக மாற்றி விடுகிறது. இது தசைகளின் பலத்தை குறைத்து, அதன் இயக்கத்தை முடக்கிவிடுகிறது. இவை மூளையின் எந்த பாகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைகிறது. உதாரணமாக, செரிப்பல்லம் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளியின் எழுதும் திறன் பாதிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விடும். பெருமூளை வாதம் என்பது அனைத்து வகை அறிகுறிகளையும் கொண்டு, ஏற்படும்.
2. இந்த நோய் ஏற்பட்டால் அனைத்து விளைவுகளும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஏற்படும். பெருமூளை வாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் விஷயங்கள் குறித்து படித்தறிவோம்..
கர்ப்பகாலம்...
கர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து அறியலாம்..
அ.) கதிரியக்கத்திற்கு கரு உள்ளாவது
ஆ.) கர்ப்பகாலத்தில் நோய்த் தொற்று ஏற்படுவது
இ.) ஹைபோக்சியா
பிரசவத்திற்கு பின்..
குழந்தை பிறக்கையில் பெருமூளை வாதம் ஏற்படலாம். இதற்கு காரணமாகும் விஷயங்கள்..
அ.) குழந்தை பிறக்கையில் மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவது
ஆ.) குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவது
இ.) ஹைபோக்சியா
மாற்றங்கள்..
சில நேரங்களில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களும் பெருமூளை வாதத்தை ஏற்படுத்துகின்றன.
3. பெருமூளை வாதம் மிக தீவிரமடையாது; ஏற்பட்ட நிலையிலேயே இருக்கும்.
4. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அடிவயிற்று பிரச்சனைகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
5. அறிகுறிகள்:
1. தசைகளில் வலி
2. மெல்லுதல், விழுங்குதலின் போது வலித்தல்
3. தூக்கமின்மை
4. பார்த்தல், கேட்டலில் பிரச்சனை
இந்த நோயை குணப்படுத்த இயலாது; சரியான சிகிச்சை, ஊக்கம் மூலம் குழந்தைகளை இந்த நோயை எதிர்த்து போராடி வாழச் செய்யலாம்..!

டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.
இப்போதையை தலைமுறையினர் குழந்தைகள் அசுத்தம் செய்துவிடுவார்களோ எனும் பயத்தால் குழந்தையை தூக்குவதே கிடையாது. இதை தவிர்க்க அவர்களுக்கு கிடைத்த புதிய வழி டயபர்களை உபயோகிப்பது. இவற்றை அகற்றி அப்புறபடுத்துவது எளிதான ஒன்று என கருதுவதால் இவற்றை உபயோகிறார்கள். ஆனால் டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.
1 ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
2 பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.
3 டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
4 குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபயோகித்து தூக்கி எறிய கூடிய டயபர்கள், சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.
5 குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
6 தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
7 உபயோகித்து தூக்கி ஏறிய கூடிய டயபர்களில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால், இவை எளிதில் மாக்குவதில்லை. இவை சுற்று சூழலை பாதிக்க கூடியவை. இதனால் பெரியவர்களையும் இவை பாதிக்கின்றன.
8 இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும் உள்ளது.
இவை விலை அதிகமாக இருந்தாலும், விளம்பரங்களால் பெற்றோர்கள் ஈர்க்கப்பட்டு எளிதில் அப்புற படுத்திவிடலாம் என உபயோகிக்க துவங்கி விடுகிறார்கள். இதற்கென அவர்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு குழந்தைகளுக்கு வாங்கி உபயோகிக்கிறார்கள். இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு துணிகளை பயன்படுத்துவது சிறந்தது. உங்களுக்கு வேலை அதிகம் என்று நினைத்தால், இவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

தத்தித் தத்தி நடை பயிலும் சிங்காரச் சிறுமிகள் சிலிப்பூட்டும் நகைகளை அணிந்து கைகளையும் கால்களையும் அழகிய தத்தை மொழி பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம் தான்.

நகைக்கடைகளில் நுழைந்தால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கென்று நகைப்பிரிவுகள் இருக்கின்றன.
முன்பெல்லாம் குழந்தைகளுக்குக் காது குத்தும் பொழுது ஒற்றைக்கல் கம்மல், ஸ்டார் கம்மல் வெள்ளரி விதைத் தொங்கல் இவற்றைத்தான் குத்துவார்கள். இப்பொழுது அப்படியில்லை, சிறிய பாலி மாடல் கம்மல், சிறிய பூனை, நாய்க்குட்டி, வண்ணத்துப் பூச்சிகளில் ஒற்றைக்கால் பதித்தது போலவும், சிறிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திர வடிவங்களிலும் கம்மல்கள் வந்திருக்கின்றன.
ஒரே சிறிய ஒற்றை முத்துடன் மிகச்சிறிய கற்கள் பதித்த கம்மல், மீன் கம்மல், மெல்லிய கொக்கியில் கனமில்லாத டிசைன்களுடன் தொங்கல்கள், இதய வடிவக் கம்மல்கள், வைரக்கற்கள் பதித்த வித்தியாசமான வடிவங்களில் வரும் சிறு கம்மல்கள் என அனைத்தும் அத்தனை அழகாக உள்ளன. டிசைனர் கம்மல்களில் குட்டி வாத்தின் கண்கள் மற்றும் உடலில் சிறிய கற்கள் பதித்தது போன்று இருப்பது, கேக் வடிவக் கம்மல், காளான் வடிவக் கம்மல், ஆமை வடிவக் கம்மல் போன்றவை பார்ப்பதற்குப் புதுமையாகவும், அழகாகவும் வந்துள்ளன. இந்தக் கம்மல்களில் வண்ண இனாமல் மற்றும் கற்கள் பதித்திருப்பது பார்க்க அற்புதமாக உள்ளது.
குழந்தைகள் அணியும் கை வளையல்களில் பெரும்பாலும் பிளெயின் காப்புகளே இருந்தன. இப்பொழுது பல்வேறு சுற்றுகளுடன் வரும் அட்ஜஸ் டபிள் வளையல்கள், ஒரே சுற்று டிசைனர் காப்பு, கருப்பு மணி பதித்த வளையல்கள், ரூபி பதித்த சின்னஞ்சிறு டிசைனர் வளையல்கள், அழகிய செயின் வடிவ பிரேஷ்லெட்டுகள், வளையல் வடிவ பிரேஷ்லெட்டுகள், வொயிட் கோல்டு வளையல்கள் என எத்தனையோ டிசைன்கள் உள்ளன.
இப்பொழுது குழந்தைகள் அணியும் பிரேஷ்லெட்டானது அவர்களது கைவிரலில் அணியும் மோதிரத்துடன் இணைந்து வந்துள்ளன. இதனால் மோதிரம் அல்லது பிரேஷ்லெட்டானது கழன்றாலும் அவை தொலைந்து போக வாய்ப்பில்லை. பிரேஷ்லெட்டுகளிலும் காதணிகளில் வருவது போலவே டிசைனர் பொம்மைகள் தொங்குவது போலும், பதித்தது போலும் வருகின்றன. அவற்றில் எனாமல் பூசப்பட்டு வருபவை கண்களைக் கவரும் விதமாக உள்ளன.
கற்கள் பதித்த அழகிய மோதிரம் அதற்கு செட்டாக அதே வடிவத்துடன் பிரேஷ்லெட் இவை இரண்டையும் இணைக்கும் மெல்லிய தங்கச் செயின், குழந்தையின் பிஞ்சுக் கைகளில் அணிந்திருக்கும் இவ்வகை நகைகள் ஆயிரம் கதைகளைக் கூறும். அவர்களின் அழகான கையசைவிற்கு இந்த நகைகள் மேலும் அழகு சேர்க்கின்றன.
கொலுசு போடாத பெண் குழந்தைகளைப் பார்ப்பதே அரிது எனலாம். கொலுசுகளில் அதிகச் சலங்கைகள் வைத்தவை, ஆங்காங்கே சலங்கை வைத்தவை, தண்டை, கருப்பு நிறக் கயிற்றில் வெள்ளிக் குண்டுகள் கோர்த்த கொலுசு, கருப்பு மணி கோர்த்த வெள்ளிக் கொலுசு, டிசைனர் கொலுசுகள் என எத்தனையோ வகைகள் உள்ளன.
சில வீடுகளில் குழந்தைகளுக்குத் தங்கம் மற்றும் நவரத்தினக் கொலுசுகளையும் அணிந்து அழகு பார்க்கிறார்கள். குழந்தைகளின் சலங்கை ஒலி அவர்கள் எங்கு தவழ்ந்து செல்கிறார்கள்? எங்கு நடந்து செல்கிறார்கள்? விழித்திருக்கிறார்களா? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
பிஞ்சு விரல்களில் அணியும் மோதிரங்களில் இத்தனை வகைகளா? என ஆச்சரியம் தோன்றுகின்றது. ஒற்றைக்கல் மோதிரம், வெள்ளை, சிவப்புக் கல் மோதிரம், தட்டையான தங்க மோதிரம், டிசைனர் மோதிரங்கள், வைர மோதிரம் என ஒவ்வொன்றிலும் ஏராளமான டிசைன்கள் உள்ளன.
குழந்தைகளின் நகைகளில் டிசைனர் ஆபரணங்கள் அருமை என்று சொல்லலாம். காதுக் கம்மல், செயின் டாலர், பிரேஷ்லெட், மோதிரம், கால் கொலுசு அனைத்திலும் ஒரே டிசைன்கள் இருக்கும் டிசைனர் நகை செட்டுகளைப் பார்க்கும் பொழுது குழந்தைகளுக்கு நகைகள் வாங்கும் வேலை எளிதாகின்றது.
அழகிய நெக்லஸ்கள், செயின்கள், ஹாரங்கள், சோக்கர்கள், வங்கிகள், ஒட்டியாணங்கள், மாட்டல்கள், சுட்டிகள், கால் கொலுசுகள் ஆகிய அனைத்துமே குட்டிப் பெண் குழந்தைகளுக்கென்றே அற்புதமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.
இதுபோன்ற நகைகளானது குழந்தைகள் அணிந்து கொள்ள வசதியாகவும், எடை குறைவாகவும் வந்திருக்கின்றன. தாய், மகள் இருவரும் ஜோடியாக அணிந்து கொள்வது போலவும் நகைகள் வந்திருக்கின்றன.
பெண் குழந்தைகள் நகைகளை அணிந்து புத்தாடை உடுத்தி அங்கும் இங்கும் நடக்கின்ற அதை ரசிக்கக் கண் கோடி வேண்டும். குழந்தைகளுக்கு நகைகளை அணிவிக்கும்போது அவை குழந்தைகளுக்கு உறுத்தாமல் சவுகரியமாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்து பின்னர் அணிவிக்க வேண்டும்.

குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.
குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், அவர்களுக்கு சரியான திட உணவை கொடுக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.
குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாத காலம் வரை தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பால் மட்டும் கொடுப்பதே சிறந்தது. 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு திட உணவுகளை பழக்கப்படுத்துவது முக்கியமான ஒன்று. இது உங்கள் குழந்தையின் விருப்பத்தை சார்ந்தே இருக்க வேண்டும். குழந்தை விரும்பி உண்ணும் திட உணவுகளை கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் முன், என்ன உணவுகளை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். திட உணவை கொடுக்க துவங்கும் போது, மென்மையான காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிது சிறிதாக கொடுக்க துவங்குங்கள்.
குழந்தைக்கு அந்த உணவின் சுவை பிடிக்கும் வரை அவர்கள் சாப்பிடுவது கடினம் தான். உணவின் சுவையை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். குழந்தையின் உணவில் இனிப்பை சேர்த்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி உண்வார்கள். பால் அல்லது தண்ணீரில் பிஸ்கெட்டை உறவைத்து கொடுக்கலாம்.
திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் முன், பழங்களை மசித்து அதன் சுவையை குழந்தைக்கு பழக்கப்படுத்துவது சிறந்தது. பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். குழந்தைகளுக்கு பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை கொடுக்கும் முன், மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. சில உணவுகள் குழந்தைகளுக்கு ஓவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் இது பரிந்துரைக்க படுகிறது. குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் சுவையான உணவுகளை வெவ்வேறு வண்ணங்களில் கொடுப்பது, அவர்களின் கவனத்தை உணவின் பக்கம் திருப்பும்.
காய்கறிகள் மற்றும் இறைச்சி குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலிமைப்படுத்தவும் உதவுகின்றன. இரும்பு சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை பட்டியலிட்டு கொள்வது இதற்கு உதவும். இறைச்சியில் நிறைந்திருக்கும் புரதம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காய்கறிகளும், இறைச்சியும் வெவ்வேறாக இருந்தாலும், குழந்தைகள் உடலின் வெவ்வேறு பாகங்கள் வளர்ச்சியடைய உதவுகின்றன.
குழந்தையின் உணவு அட்டவணையில் மறக்காமல் பால் பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள். பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் பாலில் நிறைந்திருக்கும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் வலிமையான பற்களின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தை பருவத்திலேயே அவர்களின் எலும்பு மண்டலம் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். குழந்தையின் வளர்ச்சி உங்களை சார்ந்திருப்பதால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி கொடுங்கள்.

என்னதான் பச்சிளம் குழந்தையை சுத்தப்படுத்துவது அவசியம் என்றாலும், சரியான முறையில் அதை செய்கிறோமா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் சுத்தப்படுவது என்பது மிக அவசியமான ஒன்றாகும். என்னதான் குழந்தையை சுத்தப்படுத்துவது அவசியம் என்றாலும், சரியான முறையில் அதை செய்கிறோமா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
1 குழந்தை பிறந்தவுடன் அதன் பெற்றோர் அதை குளிக்க வைத்து சுத்தப்படுத்திவிடுவார்கள். அதை செய்யும் முன் உங்கள் குழந்தையை கவனியுங்கள், மெழுகு போன்ற வெண்மையான ஒரு பொருள் உங்கள் குழந்தையின் மேல் இருந்தால், அது உங்கள் குழந்தையின் சருமத்திற்கு நன்மை பயக்கும். இதை மனதில் கொண்டு, உங்கள் குழந்தையின் முதல் குளியலை 6 மணி நேரம் தாமதப்படுத்துங்கள். இந்த மெழுகு போன்ற பொருள் உங்கள் குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு 2 மணி நேரத்திற்கு இயற்கையான பாதுகாப்பு கவசமாக அமையும்.
2 உங்கள் குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் நீங்கள் அதை துணி கொண்டு மூடி வைத்திருப்பீர்கள். இரவு நேரங்களில் தொடர்ந்து குழந்தையை குளிக்க வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை குழந்தையை இரவில் குளிக்க வைக்கலாம். அதுவே உங்கள் குழந்தையை புத்துணர்வுடனும், சுத்தமாகவும் வைக்க போதுமானது. குழந்தையின் நாப்கின்களை மீறியும் அசுத்தப்படும் போது, குளிக்க வைப்பது அவசியமாகும்.
3 அதிகப்படியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எளிமையாக மற்றும் மென்மையாக சுத்தப்படுத்துவதையே விரும்புகின்றனர். அவர்கள் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் போது, குழந்தைகளுக்கான குளியல் பொருள்கள், சுத்தப்படுத்தும் தயாரிப்புகள், மசாஜ் செய்ய உதவும் தயாரிப்புகள் போன்ற பல குழந்தைகளுக்கான தயாரிப்புகளால் கவரப்படுகின்றனர். இது போன்று பல தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கும் போது, அதில் இருக்கும் அதிகப்படியான இரசாயனத்தால் குழந்தையின் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும். அதுபோல் வேதனையை விலை கொடுத்து வாங்குவதை விட, ஏதும் செய்யாமல் இருப்பதே மேல்.
4 உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால், அதிக வெப்பமான நீரோ அல்லது குளிர்ச்சியான நீரோ அவர்களின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அது உங்கள் குழந்தைக்கு அரிப்பு போன்று அலர்ஜியை கூட ஏற்படுத்தலாம். எனவே உங்கள் குழந்தையை குளிக்க வைக்கும் நீர் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
5 எந்த ஒரு அனுபவம் உள்ள பெற்றோரும் சொல்வது, குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்து, தானாக விழும் வரை அதை கவனமாக கையாள வேண்டும் என்பதே. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைப்பின்படி, காய்ந்து போன பகுதியை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மற்ற பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதிலிருந்து ஏதும் சுரந்தால், துணியை தண்ணீரில் நனைத்து மெதுவாக துடைக்கலாம்.
பத்து மாதம் பல வலிகளை கடந்து குழந்தை பெற்று பேணி காக்கும் நாம் செய்யும் சிறு தவறு கூட குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுத்தப்படுத்தும் போதும், கையாளும் போதும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.

குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம்.
குழந்தைகள் கருவிலிருக்கும் போதிலிருந்தே வாயில் கை வைக்க துவங்கிவிடுகின்றனர் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். அது குழந்தைகளுக்கு வசதியாக இருப்பதாக உணர்கிறார்கள். அது அவர்களை ஓய்வெடுப்பதாக உணர செய்கிறது. குழந்தைகள் ஓய்வெடுக்கும் போதும், பயப்படும் போது, சலிப்பாக அல்லது தூக்கமாக உணரும் போது கையை வாயில் வைப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது சிறந்தது. குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம்.
1 வேப்பிலையை அரைத்து குழந்தையின் விரலில் தடவி விடவும். அதன் கசப்பு சுவையால் உங்கள் குழந்தைகள் வாயில் விரல் வைக்கமாட்டார்கள். அப்படியே வைத்தாலும் அது உங்கள் குழந்தையின் உடல் நலனை மேம்படுத்தும். கிருமிகளை அழிக்கும் மற்றும் கிருமிகளை குழந்தைகளிடம் வர விடாது.
2 எலுமிச்சை புளிப்பு சுவை உடையது. இதை குழந்தை வாயில் விரல் வைக்கும் போதெல்லாம் விரலில் தடவவும். எலுமிச்சையில் உள்ள பாஸ்பரஸ் எனும் ரசாயன பொருள் நரம்பு மண்டலத்திற்கு வலிமை அளிக்க கூடியது. இது ஜீரண சக்தியை அதிகரித்து, பசியை அதிகப்படுத்தும்.
3 அவர்கள் விரும்பும் உணவுப்பொருட்களை கையில் கொடுத்து உண்ண சொல்லலாம். அப்போது அவர்கள் கவனம் உணவு உண்பதில் இருக்கும். இதனால் அவர்கள் வாயில் கை வைப்பதை மறந்து விடுவார்கள்.
4 குழந்தைகள் வாயில் கை வைக்கும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாட துவங்குங்கள். பந்துகளை விளையாட கொடுக்கும் போது அவர்கள் விளையாட துவங்கிவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்த பொம்மைகளையும் கையில் கொடுக்கலாம். கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் படங்கள் வரைய சொல்லலாம்.
5 கிராம்பு எண்ணெயை உங்கள் குழந்தையின் விரலில் தடவுங்கள். இதன் சுவை அவர்கள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்வதோடு, புத்துணர்ச்சி காரணியாகவும் செயல்படுகிறது.
6 குழந்தைகளுக்கு கையுறை அணிவிப்பதன் மூலமாக தவிர்க்க முடியும் அல்லது துணிகளை கூட குழந்தையின் விரல்களில் சுற்றி விடலாம். ஆனால் அவை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சுத்தமாக இல்லாவிடில் குழந்தைகளுக்கு பல நோய்களை பரப்பக்கூடும்.
இயற்கையான வழிகளை குழந்தையின் உடல் நலனை மேம்படுத்தும் விதமாக முயற்சிக்கலாமே!