search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள்
    X
    குழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள்

    குழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள்

    குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம்.
    குழந்தைகள் கருவிலிருக்கும் போதிலிருந்தே வாயில் கை வைக்க துவங்கிவிடுகின்றனர் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். அது குழந்தைகளுக்கு வசதியாக இருப்பதாக உணர்கிறார்கள். அது அவர்களை ஓய்வெடுப்பதாக உணர செய்கிறது. குழந்தைகள் ஓய்வெடுக்கும் போதும், பயப்படும் போது, சலிப்பாக அல்லது தூக்கமாக உணரும் போது கையை வாயில் வைப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது சிறந்தது. குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம்.

    1 வேப்பிலையை அரைத்து குழந்தையின் விரலில் தடவி விடவும். அதன் கசப்பு சுவையால் உங்கள் குழந்தைகள் வாயில் விரல் வைக்கமாட்டார்கள். அப்படியே வைத்தாலும் அது உங்கள் குழந்தையின் உடல் நலனை மேம்படுத்தும். கிருமிகளை அழிக்கும் மற்றும் கிருமிகளை குழந்தைகளிடம் வர விடாது.

    2 எலுமிச்சை புளிப்பு சுவை உடையது. இதை குழந்தை வாயில் விரல் வைக்கும் போதெல்லாம் விரலில் தடவவும். எலுமிச்சையில் உள்ள பாஸ்பரஸ் எனும் ரசாயன பொருள் நரம்பு மண்டலத்திற்கு வலிமை அளிக்க கூடியது. இது ஜீரண சக்தியை அதிகரித்து, பசியை அதிகப்படுத்தும்.

    3 அவர்கள் விரும்பும் உணவுப்பொருட்களை கையில் கொடுத்து உண்ண சொல்லலாம். அப்போது அவர்கள் கவனம் உணவு உண்பதில் இருக்கும். இதனால் அவர்கள் வாயில் கை வைப்பதை மறந்து விடுவார்கள்.

    4 குழந்தைகள் வாயில் கை வைக்கும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாட துவங்குங்கள். பந்துகளை விளையாட கொடுக்கும் போது அவர்கள் விளையாட துவங்கிவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்த பொம்மைகளையும் கையில் கொடுக்கலாம். கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் படங்கள் வரைய சொல்லலாம்.

    5 கிராம்பு எண்ணெயை உங்கள் குழந்தையின் விரலில் தடவுங்கள். இதன் சுவை அவர்கள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்வதோடு, புத்துணர்ச்சி காரணியாகவும் செயல்படுகிறது.

    6 குழந்தைகளுக்கு கையுறை அணிவிப்பதன் மூலமாக தவிர்க்க முடியும் அல்லது துணிகளை கூட குழந்தையின் விரல்களில் சுற்றி விடலாம். ஆனால் அவை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சுத்தமாக இல்லாவிடில் குழந்தைகளுக்கு பல நோய்களை பரப்பக்கூடும்.

    இயற்கையான வழிகளை குழந்தையின் உடல் நலனை மேம்படுத்தும் விதமாக முயற்சிக்கலாமே!
    Next Story
    ×