என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.
    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.

    பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
    மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
    ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
    கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:

    பொதுப் பொருள் :

    சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன.

    இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
    வேலை கிடைக்காதவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
    குரு தேவோ மஹேஸ்வரஹ
    குரு சாட்சாத் பரப்ரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

    குரவே ஸர்வ லோகாநாம்
    பிஷஜே பவ ரோகிணாம்
    நிதயே ஸர்வ வித்யாநாம்
    தட்சிணாமூர்த்தயே நமஹா.
    அப்ரமே த்வயாதீத நிர்மல ஞான மூர்த்தயே
    மநோ இராம் விதூராய தட்சிணாமூர்த்தயே நமஹா

    தட்சிணாமூர்த்தி காயத்ரீ மந்திரம்

    ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே
    த்யா நஸ்த்தாய தீமஹி!!
    அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம்.
    அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம்.

    ஓம் சரவணா பாவாய நமஹ
    ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
    தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
    ஓம் சுப்ரமண்யாய நமஹ
    குருவின் அருட்பார்வை பெற்றிட குரு திசை நடைபெறும் போதும் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றியை மனம் உருகி சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.
    குருவின் அருட்பார்வை பெற்றிட குரு திசை நடைபெறும்போது, குருவானவர் 6, 8, 12,ல் மறைந்திருந்தலும் குருபலம் குன்றி இருந்தாலும் ஸ்ரீ சத்குரு
    ராகவேந்திர ஸ்வாமிகளை வழிபடவேண்டும்.

    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி
    கிரக தோஷப் பாதிப்புகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி பரிகாரம் செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
    செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.

    சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.

    பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும். அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும். இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

    மந்திரம் :

    அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
    துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர்.
    பொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.

    ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்

    தேவதா கார்யஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    தேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம்
    வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    இரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற
    விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே,
    அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    பிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, நரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.

    க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாமபயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    கேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற
    பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    வேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    வேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.

    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
    பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவனுக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்களை காணலாம்.
    பஞ்சவக்த்ரம் மஹாபாஹூம் தஸபாஹூம் த்ரிலோசனம்
    பீஷணம் பாஸ்கரம் ருத்ரம் பிங்கப்ரூஸ்மஸ்ருமூர்தஜம்
    கட்க கேடக நாராச தநுஸ்ஸர கமண்டலூந்
    சக்திம் சூலம்ச பரஸூம் ப்ரஹ்மதண்டம் கராக்ரகைஹ
    பிப்ராணம் ஸ்படிகாத்ர்யாபம் நாகாபரணபூஷிதம்
    சர்வாஸ்த்ரேஸம் பசூபதிம் சர்வரக்ஷாகரம் ஸ்மரேத்.
    குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
    குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

    ராதேஸம் ராதிகாப்ராண
    வல்லபம் வல்லவீஸுதம்
    ராதேஸேவித பாதாப்ஜம்
    ராதா வக்ஷஸ்தலஸ்திதம்

    ராதானுகம் ராதிகேஷ்டம்
    ராதாபஹ்ருத மானஸம்
    ராதாதாரம் பவாதாரம்
    ஸர்வாதாரம் நமாமிதம்
    திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம் உண்டாகும்.
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    ''அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.''
    கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.
    நம்மில் பலருக்குக் கண்பார்வையில் சிற்சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.

    அந்த ஸ்லோகம் இதுதான்.

    லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
    மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா: |
    ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
    உன்மீலனேன தவ தேவி நிமீலனேன ||
    இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.

    தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது. காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும். நைவேதியமாக பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் படைப்பது நல்லது. கைமேல் பலன் தரும் இந்த ஸ்லோகத்தை 48 நாட்கள் சொல்வது சிறப்பு.

    மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
    பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
    வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
    ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
    இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
    யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
    ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
    தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

    இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள் இதன் பொருளைச் சொன்னாலே பலன் உண்டு.

    பொருள்: நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரனாகவும், தோழனாகவும் இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவனேதான். நமக்கு எஜமானனாகவும், எல்லாமுமாகவும் நரசிம்மனே விளங்குகிறான். பூலோகம், விண்ணுலகத்திலும் நரசிம்மனே அருள்புரிந்து கொண்டிருக்கிறான். நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே வீற்றிருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.
    இந்த மந்திரத்தை எந்த பெண் நம்பிக்கையுடன் உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு வாழ்வாள்.
    ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் காதலித்த சத்யவானுடன் தான் வாழ வேண்டுமென உறுதியாய் இருந்தாள் சாவித்திரி. ‘பதியே தெய்வம்’ என எண்ணும் உயர்ந்த பண்பாலும், பவித்திரமான மாங்கல்ய பலத்தாலும் தன் கணவனின் ஆயுளை நீடிக்கச் செய்யலாம் என்று உறுதியாக நம்பினாள் சாவித்திரி.

    சர்வ சக்தி வாய்ந்த முனிவர் அத்ரி மகரிஷி அவருடைய மனைவி அனுசூயா தேவி. தன் கணவனின் நலனுக்காக அனுசூயா தேவியை வேண்டினாள் சாவித்திரி. பெண்களுக்கெல்லாம் என்றும் மங்களத்தைத் தரக்கூடிய மாங்கல்ய மந்திரத்தைச் சாவித்திரிக்கு உபதேசித்தாள் அனுசூயா.

    “மங்களே மங்களாதாரே
    மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா”

    என்பதே அந்த மந்திரமாகும்.

    மனம் சுத்தியுடன் இந்த மந்திரத்தை ஜெபித்தால், சத்தியவான் நீண்ட ஆயுளைப் பெறுவான் என்ற நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தாள் சாவித்திரி.

    எந்தப் பெண், அன்னையாம் தேவியிடம் நம்பிக்கை கொண்டவளாக இந்த மந்திரத்தை உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு வாழ்வாள்.

    காரடையான் நோம்பினை மேற்கொண்டு சரடு மாற்றும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபிக்க வேண்டும். அன்னையின் பூரண நல்லாசி கிடைக்கும்.
    ×