என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    திருமலையின் தெய்வம் வேங்கடமுடையானின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் தீரும்.
    எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான். சனிக்கிழமைகளில் இந்த துதியை பாராயணம் செய்தால் வினைகள் தீரும்.

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
    அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
     படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே

    பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
    விஜயதசமியான இன்று சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
    விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
    ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
    யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
    ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா

    பொருள் :


    அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன். 
    தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம்.
    அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
    ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
    நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
    துர் ஸ்வப்பன சாந்தயே.
    கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜை அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
    ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
    யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
    ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா

    பொருள்:

    அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.
    1. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே  போற்றி
    2. ஓம் ஸ்ரீ ஞான அகிலாண்ட நாயகியே போற்றி
    3. ஓம் ஸ்ரீ ஞான அருமையின் வரம்பே  போற்றி
    4. ஓம் ஸ்ரீ ஞான அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
    5. ஓம் ஸ்ரீ ஞான அரசிளங் குமரியே  போற்றி
    6. ஓம் ஸ்ரீ ஞான அப்பர்ணி மருந்தே  போற்றி
    7. ஓம் ஸ்ரீ ஞான அமுத நாயகியே போற்றி
    8. ஓம் ஸ்ரீ ஞான அருந்தவ நாயகியே  போற்றி
    9. ஓம் ஸ்ரீ ஞான அருள்நிறை அம்மையே  போற்றி
    10. ஓம் ஸ்ரீ ஞான ஆலவாய்க் கரசியே போற்றி
    11. ஓம் ஸ்ரீ ஞான ஆறுமுகத்தின் அன்னையே  போற்றி
    12. ஓம் ஸ்ரீ ஞான ஆதியின் பாதியே  போற்றி
    13. ஓம் ஸ்ரீ ஞான ஆலால சுந்தரியே  போற்றி
    14. ஓம் ஸ்ரீ ஞான ஆனந்த வல்லியே  போற்றி
    15. ஓம் ஸ்ரீ ஞான இளவஞ்சிக் கொடியே  போற்றி
    16. ஓம் ஸ்ரீ ஞான இமயத் தரசியே  போற்றி
    17. ஓம் ஸ்ரீ ஞான இடபத்தோன் துணையே  போற்றி
    18. ஓம் ஸ்ரீ ஞான ஈசுவரியே  போற்றி
    19. ஓம் ஸ்ரீ ஞான உயிர் ஓவியமே  போற்றி
    20. ஓம் ஸ்ரீ ஞான ஊழ்வினை தீர்ப்பாய்  போற்றி
    21. ஓம் ஸ்ரீ ஞான எண் திசையும் வென்றாய்  போற்றி
    22. ஓம் ஸ்ரீ ஞான ஏகன் துணையே  போற்றி
    23. ஓம் ஸ்ரீ ஞான ஜங்கரன் அன்னையே  போற்றி
    24. ஓம் ஸ்ரீ ஞான ஐயம் தீர்ப்பாய்  போற்றி
    25. ஓம் ஸ்ரீ ஞான ஒப்பில்லா அமுதே  போற்றி
    26. ஓம் ஸ்ரீ ஞான ஓங்கார சுந்தரியே  போற்றி
    27. ஓம் ஸ்ரீ ஞான கற்றோருக்கு இனியோய்  போற்றி
    28. ஓம் ஸ்ரீ ஞான கல்லாக்கு எளியோய்  போற்றி
    29. ஓம் ஸ்ரீ ஞான கடம்பவன சுந்தரியே  போற்றி
    30. ஓம் ஸ்ரீ ஞான கல்யாண சுந்தரியே  போற்றி
    31. ஓம் ஸ்ரீ ஞான கனகமணிக் குன்றே  போற்றி
    32. ஓம் ஸ்ரீ ஞான கற்பின் அரசியே  போற்றி
    33. ஓம் ஸ்ரீ ஞான கருணை யூற்றே  போற்றி
    34. ஓம் ஸ்ரீ ஞான கல்விக்கு வித்தே  போற்றி
    35. ஓம் ஸ்ரீ ஞான கனகாம்பிகையே  போற்றி
    36. ஓம் ஸ்ரீ ஞான கதிரொளிச் சுடரே  போற்றி
    37. ஓம் ஸ்ரீ ஞான கற்கனை கடந்த கற்பகமே  போற்றி
    38. ஓம் ஸ்ரீ ஞான காட்சிக் கிளியோய்  போற்றி
    39. ஓம் ஸ்ரீ ஞான காலம் வென்ற கற்பகமே  போற்றி
    40. ஓம் ஸ்ரீ ஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி
    41. ஓம் ஸ்ரீ ஞான முத்தரம்மா அம்பிகையே  போற்றி
    42. ஓம் ஸ்ரீ ஞான கிளியேந்திய கரத்தோய்  போற்றி
    43. ஓம் ஸ்ரீ ஞான குலச்சிறை காத்தோய்  போற்றி
    44. ஓம் ஸ்ரீ ஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    45. ஓம் ஸ்ரீ ஞான கூடற்கலாப மயிலே  போற்றி
    46. ஓம் ஸ்ரீ ஞான கோலப் பசுங்கிளியே  போற்றி
    47. ஓம் ஸ்ரீ ஞான சம்பந்தன ஞானத்தாயே  போற்றி
    48. ஓம் ஸ்ரீ ஞான சக்திவடிவே  போற்றி
    49. ஓம் ஸ்ரீ ஞான சங்கம் வளர்த்தாய்  போற்றி
    50. ஓம் ஸ்ரீ ஞான சிவகாம சுந்தரியே  போற்றி
    51. ஓம் ஸ்ரீ ஞான சித்தம் தெளிவிப்பாய்  போற்றி
    52. ஓம் ஸ்ரீ ஞான சிவயோக நாயகியே  போற்றி
    53. ஓம் ஸ்ரீ ஞான சிவானந்த வல்லியே  போற்றி
    54. ஓம் ஸ்ரீ ஞான சிங்கார வல்லியே  போற்றி
    55. ஓம் ஸ்ரீ ஞான செந்தமிழ் தாயே  போற்றி
    56. ஓம் ஸ்ரீ ஞான செல்வத்துக் கரசியே  போற்றி
    57. ஓம் ஸ்ரீ ஞான சேனைத் தலைவியே  போற்றி
    58. ஓம் ஸ்ரீ ஞான சொக்கர் நாயகியே  போற்றி
    59. ஓம் ஸ்ரீ ஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
    60. ஓம் ஸ்ரீ ஞான ஞானாம்பிகையே  போற்றி
    61. ஓம் ஸ்ரீ ஞான ஞானப் பூங்கோதையே  போற்றி
    62. ஓம் ஸ்ரீ ஞான தமிழர் குலச்சுடரே  போற்றி
    63. ஓம் ஸ்ரீ ஞான திருவுடையம்மையே  போற்றி
    64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய்  போற்றி
    65. ஓம் ஸ்ரீ ஞான திரிபுர சுந்தரியே  போற்றி
    66. ஓம் ஸ்ரீ ஞான திருநிலை நாயகியே  போற்றி
    67. ஓம் ஸ்ரீ ஞான தீந்தமிழ்ச் சுவையே  போற்றி
    68. ஓம் ஸ்ரீ ஞான தெவிட்டாத தெள்ளமுதே  போற்றி
    69. ஓம் ஸ்ரீ ஞான தென்னவன் செல்வியே  போற்றி
    70. ஓம் ஸ்ரீ ஞான தேன்மொழி யம்மையே  போற்றி
    71. ஓம் ஸ்ரீ ஞான தையல் நாயகியே  போற்றி
    72. ஓம் ஸ்ரீ ஞான நற்கனியின் சுவையே  போற்றி
    73. ஓம் ஸ்ரீ ஞான நற்றவத்தின் கொழந்தே  போற்றி
    74. ஓம் ஸ்ரீ ஞான நல்ல நாயகியே  போற்றி
    75. ஓம் ஸ்ரீ ஞான நீலாம்பிகையே  போற்றி
    76. ஓம் ஸ்ரீ ஞான நீதிக்கரசியே  போற்றி
    77. ஓம் ஸ்ரீ ஞான பக்தர்தம் திலகமே  போற்றி
    78. ஓம் ஸ்ரீ ஞான பழமறையின் குருந்தே  போற்றி
    79. ஓம் ஸ்ரீ ஞான பரமானந்த பெருக்கே  போற்றி
    80. ஓம் ஸ்ரீ ஞான பண்மைமைந்த பெருக்கே  போற்றி
    81. ஓம் ஸ்ரீ ஞான பவளவாய்க் கிளியே  போற்றி
    82. ஓம் ஸ்ரீ ஞான பசுபதி நாயகியே  போற்றி
    83. ஓம் ஸ்ரீ ஞான பாகம் பிரியா அம்மையே  போற்றி
    84. ஓம் ஸ்ரீ ஞான பாண்டிமா தேவியின் தேவி போற்றி
    85. ஓம் ஸ்ரீ ஞான பார்வதி அம்மையே  போற்றி
    86. ஓம் ஸ்ரீ ஞான பிறவிப்பிணி தீர்ப்பாய்  போற்றி
    87. ஓம் ஸ்ரீ ஞான பெரிய நாயகியே  போற்றி
    88. ஓம் ஸ்ரீ ஞான பொன்மயிலம்மையே  போற்றி
    89. ஓம் ஸ்ரீ ஞான பொற்கொடி அன்னையே  போற்றி
    90. ஓம் ஸ்ரீ ஞான மங்கள நாயகியே  போற்றி
    91. ஓம் ஸ்ரீ ஞான மழலைக் கிளியே  போற்றி
    92. ஓம் ஸ்ரீ ஞான மனோன்மயித் தாயே  போற்றி
    93. ஓம் ஸ்ரீ ஞான மண்சுமந்தோன்மாணிக்கமே போற்றி
    94. ஓம் ஸ்ரீ ஞான மாயோன் தங்கையே  போற்றி
    95. ஓம் ஸ்ரீ ஞான மாணிக்க வல்லியே  போற்றி
    96. ஓம் ஸ்ரீ ஞான மீனவர்கோன் மகளே  போற்றி
    97. ஓம் ஸ்ரீ ஞான மீனாட்சியம்மையே  போற்றி
    98. ஓம் ஸ்ரீ ஞான முழுஞானப் பெறுக்கே  போற்றி
    99. ஓம் ஸ்ரீ ஞான முக்கண் சுடர் விருந்தே  போற்றி
    100. ஓம் ஸ்ரீ ஞான யாழ்மொழி யம்மையே  போற்றி
    101. ஓம் ஸ்ரீ ஞான வடிவழ கம்மையே  போற்றி
    102. ஓம் ஸ்ரீ ஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
    103. ஓம் ஸ்ரீ ஞான வேதநாயகியே  போற்றி
    104. ஓம் ஸ்ரீ ஞான சௌந்தராம்பிகையே  போற்றி
    105. ஓம் ஸ்ரீ ஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
    106. ஓம் ஸ்ரீ ஞான அம்மையே அம்பிகையே  போற்றி
    107. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
    108. ஓம் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனே போற்றி போற்றி!

    திங்கள் ஈராம் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை
    எங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செல்லும் இடங்களெல்லாம்
    மங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்
    எங்கள் முத்தாரம்மையே! அகிலாண்ட நாயகியே போற்றி!!
    கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
    ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ (அட்சர) மந்திரம் ஹௌம் தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும் சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும். இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.

    கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

    மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

    ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

    கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

    துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

    விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

    தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

    மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ஆதிசங்கரர் அருளிய இத்துதியை பாராயணம் செய்து வந்தால் அதிகார பலத்தோடு, உயர்ந்த பதவி கிடைக்கும்.
    த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
    பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
    ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
    ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா.

    பொதுப் பொருள்: சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்திகளுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.
    இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.
    இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

    விஜய தசமி என்ற சொல்லுக்கு பத்தாவது நாள் கொண்டாடப்படும் வெற்றி என்பதே பொருளாகும். தசரா என்ற சொல்லும் இதே பொருளைக் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவாகவும், வங்காளம் மற்றும் வட இந்தியாவில் துர்கா உத்சவமாகவும் கொண்டாடப்படுகின்றது.

    தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமியானது அனுசரிக்கப்படுகின்றது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இப்புனிதத் திருநாளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

    வங்காளத்தில் துர்கையானவள் அரக்கன் மகிசாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனைக் கொன்ற பத்தாம் நாள் வெற்றியை மக்கள் விஜயதசமித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். உலக தர்மத்தைக் காக்க அரக்கனுடன் போரிட்டு வெற்றியை உலகிற்கு அர்ப்பணித்த துர்க்கையின் திருவுருவமானது ஊரின் பல பகுதிகளிலும் மண்டல்கள் அமைத்து காலை, மாலை பூஜை மற்றும் பஜன், தாண்டியா என்று ஊரே விழாக்கோலம் பூண்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

    ஒன்பது இரவுகளும் அன்னை துர்க்கையானவள் சைலபுத்திரி, ப்ரம்மச்சாரினி, சந்த்ரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, கால்ராத்ரி, மஹாகெளரி மற்றும் சித்திதாத்ரி ஆகிய ஒன்பது அவதாரங்களில் காட்சியளிக்கிறாள்.

    புலி, சிங்கம், கழுதை மற்றும் காளை போன்ற விலங்குகளை வாகனமாகக் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றாள். நவராத்திரி, தசரா, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி என்ற பெயர்களில் இவ்விழா மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும், பத்தாம் நாள் துர்க்கையின் திருவுருவமானது தண்ணீரில் கரைக்கப்படுகின்றது.

    வட இந்தியாவில், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனைக் கொன்ற நாளின் வெற்றியை மக்கள் ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தசராவின் பத்தாவது நாள் கொண்டாட்டமாக ராம்லீலா அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம், ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகநாதன் ஆகிய மூன்று கொடும்பாவிகளை எரிக்கும் நிகழ்ச்சியுடன் தசரா நிறைவடைகின்றது.

    தமிழ்நாட்டில் நவராத்திரித் திருவிழாவது தனித்துவமாகக் கொண்டாடப் படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பொம்மைக் கொலுக்கள் வைத்தும், இன்னும் பல வீடுகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது.

    மஹாளய அமாவாசையன்று கலசம் வைத்து பொம்மைக் கொலுவைத் துவங்குகிறார்கள். 3, 5, 7, அல்லது 9, 11 என்று அவரவர் வசதிக்கேற்ப படிகள் அமைக்கப்பட்டு அதில் தெய்வங்கள், மகான்கள், முனிவர்கள், தசாவதாரம், அஷ்டலஷ்மி, செட்டியார், மரப்பாச்சி, விலங்குகள், மரம், செடி, கொடிகள் பொம்மைகளை வரிசையாக வைத்து காலை, மாலை பூஜை, பாடல்கள் என்று உறவினர்கள், தெரிந்தவர்களை அழைத்து தாம்பூலம் வழங்கி ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல், பலகாரங்களுடன் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் தைரியம் மற்றும் அருளைப் பெறுவதற்காகவும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியின் செழிப்பைப் பெறுவதற்காகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியிடமிருந்து கலை, கல்வி, அறிவு, ஞானத்தைப் பெறுவதற்காகவும் கொண்டாடப் படுவதா ஐதீகம்.

    கர்நாடக மாநிலத்தின் மைசூரில் கொண்டாடப்படும் தசராத் திருவிழாவைக் காண இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இவ்விழாவானது கர்நாடக மாநிலத்தின் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

    400 வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. மைசூரு அரண்மனை முழுவதும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டும், இசை மற்றும் நடனக் கச்சேரிகள் நடத்தப்பட்டும் ஊரே விழாக்கோலம் பூண்டு அற்புதமாகக் காட்சியளிக்கும்.

    பலவிதமான நகை, கைவினைப் பொருட்கள், துணி மணிகள் மற்றும் நாவிற்குச் சுவையான தின்பண்டங்களுடன் மிகப் பெரிய கண்காட்சிகளானது நடத்தப் படுகின்றது.

    யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் குதிரைகள் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து வீதிகளில் அழைத்து வரப்படும் அணிவகுப்பானது இவ்விழாவின் மிகச்சிறப்பு அம்சமாகக் கருதப்படுகின்றது. மேலும், விஜயசாமுண்டேஸ்வரி அன்னையை நன்கு அலங்கரித்து தங்க மண்டபத்தில் வைத்து யானையின் மேல் அமர்த்தி நடத்தப்படும் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பது மேலும் சிறப்பாகக் கருதப்படுகின்றது.

    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம்.
    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம்.
     
    கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
     
    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,  லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும்  அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க  வைப்பவளே! அருள்புரிவாயாக.
    திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
    திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

    ச - செல்வம்
    ர - கல்வி
    வ - முக்தி
    ண - பகை வெல்லல்
    ப - காலம் கடந்த நிலை
    வ - ஆரோக்கியம்
     
    முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.
     
    சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெறவேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர  வேண்டும் என வரம் பெற்றான்.
    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

    உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை


    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை


    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

    உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
    உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.

    தேகம் ஆரோக்கியத்துடன் இருந்து விட்டால் மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்யமுடியும். தவிர உடல் உழைப்புக்கு மட்டுமின்றி புத்தியின் யோசிப்பு தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.

    ஓம் நமோ பகவதே வாஹஸுதேவாய
    தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
    ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
    நாதாய மஹாவிஷ்ணவே நம
    ×