search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    முருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரம்

    திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
    திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

    ச - செல்வம்
    ர - கல்வி
    வ - முக்தி
    ண - பகை வெல்லல்
    ப - காலம் கடந்த நிலை
    வ - ஆரோக்கியம்
     
    முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.
     
    சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெறவேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர  வேண்டும் என வரம் பெற்றான்.
    Next Story
    ×