என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
    நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத சஷ்டி பூஜை நேற்று நடந்தது.

    இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.

    மேலும் அருகே உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பூஜைகள் நடைபெற்றது.
    மே மாதம் 18-ம் தேதியில் இருந்து மே மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    18-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

    19-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
     
    20-ம் தேதி வியாழக்கிழமை :

    * வளர்பிறை அஷ்டமி
    * கொடிய நகசு
    * சந்திராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்

    21-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * ஸ்ரீ வாசவி ஜெயந்தி
    * கன்னிகா பரமேஸ்வரி பூஜை
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

    22-ம் தேதி சனிக்கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி

    23-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சுபமுகூர்த்தம்
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி

    24-ம் தேதி திங்கள் கிழமை  :

    * பிரதோஷம்
    * சுபமுகூர்த்தம்
    * சந்திராஷ்டமம் - ரேவதி
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    நாளை காலை 7.55 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை மிதுன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன சேவை, 19-ந் தேதி காலை சிறிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 20-ந்தேதி காலை சிம்ம வாகன சேவை,

    இரவு முத்துப்பந்தல் வாகன சேவை, 21-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை, 22-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன சேவை, இரவு கருடா சேவை, 23-ந்தேதி காலை அனுமன் வாகன சேவை, மாலை வசந்தோற்சவம், இரவு யானை வாகன சேவை, 24-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 25-ந்தேதி பாகி தேர், இரவு குதிரை வாகன சேவை, 26-ந்தேதி மதியம் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    வடலூரில் வள்ளலார் ஞானசபையில் பக்தர்கள் வசதிக்காக இன்று இரவு வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான யுடியூப் சேனலில் ஜோதி தரிசனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
    வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி கோ.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ஞானசபையில் மாதந்தோறும் ஜோதி தரிசனம் நடைபெறும். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் வைகாசி மாத ஜோதி தரிசனத்தின்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    மேலும் பக்தர்கள் வசதிக்காக இன்று இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான யுடியூப் சேனலில் ஜோதி தரிசனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே பக்தர்கள் https://www.youtube.com/channel/UCE ijozGGHgOZFISkQAOB93A -ல் நேரலையாக காணலாம்.

    இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான சர்வமங்கள மோகன குஜாம்பிகா சமேத கைலாச நாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

    கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் இருந்துவந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.

    பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டுபிடிக்க முடிந்தது. மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.

    அதன்பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.

    கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது. மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.

    இவர்களுடன் கைலாசநாதர் சமய சேவா பொதுநல மன்றமும், கோனேரிராஜபுரம் கிராமவாசிகளும் இணைந்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் 2019-ம் ஆண்டு மே 10-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.

    கைலாசநாத பெருமான், சர்வமங்கள மோகன குஜாம்பிகை, விநாயகர், திருச்செந்தூர் செந்தில்வேலன், நர்த்தன விநாயகர், ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், நாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. தினசரி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். புற்றுக்கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.

    ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் புற்று கோவிலுக்கு திரண்டு வந்து விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சிறப்பு வழிபாடு பூஜைகளை கோனேரிராஜபுரம் சம்பத்குமார் பட்டாச்சாரியார் செய்து வருகிறார். தினசரி நடைபெறும் இரண்டு கால நித்திய படி பூஜைகளை கோனேரிராஜபுரம் லட்சுமி நாராயண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.

    சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர். அதுவே புற்று கோவிலாகும். சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக்கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கோவில் அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் பஸ் வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் டவுன் பஸ்சில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி கைலாசநாதர் கோவிலை சென்றடையலாம்.
    களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி தேரோட்ட திருவிழாவு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றம், 23-ந் தேதி நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. அதுபோல களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று தொடங்க இருந்த வைகாசி தேரோட்ட திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றி திருவிழா மண்டகப்படிதாரர்களுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    1. ஓம் அருள்வேல் போற்றி
    2. ஓம் அபயவேல் போற்றி
    3. ஓம் அழகுவேல் போற்றி
    4. ஓம் அரிய வேல் போற்றி
    5. ஓம் அயில் வேல் போற்றி
    6. ஓம் அனைய வேல் போற்றி
    7. ஓம் அன்பு வேல் போற்றி
    8. ஓம் அற்புத வேல் போற்றி
    9. ஓம் அடக்கும் வேல் போற்றி
    10. ஓம் அந்தக எதிர்வேல் போற்றி

    11. ஓம் அகராந்தக வேல் போற்றி
    12. ஓம் ஆளும் வேல் போற்றி
    13. ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    14. ஓம் இனிய வேல் போற்றி
    15. ஒம் இரங்கு வேல் போற்றி
    16. ஓம் இலை வேல் போற்றி
    17. ஓம் இறை வேல் போற்றி
    18. ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    19. ஓம் ஈடிலா வேல் போற்றி
    20. ஓம் உக்கிர வேல் போற்றி

    21. ஓம் உய்க்கும் வேல் போற்றி
    22. ஓம் எழில் வேல் போற்றி
    23. ஓம் எளிய வேல் போற்றி
    24. ஓம் எரி வேல் போற்றி
    25. ஓம் எதிர் வேல் போற்றி
    26. ஓம் ஒளிர் வேல் போற்றி
    27. ஓம் ஒப்பில் வேல் போற்றி
    28. ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    29. ஓம் ஓங்கார வேல் போற்றி
    30. ஓம் கதிர் வேல் போற்றி

    31. ஓம் கனக வேல் போற்றி
    32. ஓம் கருணை வேல் போற்றி
    33. ஓம் கந்தன் வேல் போற்றி
    34. ஓம் கற்பக வேல் போற்றி
    35. ஓம் கம்பீர வேல் போற்றி
    36. ஓம் கூர் வேல் போற்றி
    37. ஓம் கூத்தன் வேல் போற்றி
    38. ஓம் கொடு வேல் போற்றி
    39. ஓம் கொற்ற வேல் போற்றி
    40. ஓம் சமர் வேல் போற்றி

    41. ஓம் சம்கார வேல் போற்றி
    42. ஓம் சக்தி வேல் போற்றி
    43. ஓம் சதுர் வேல் போற்றி
    44. ஓம் சங்கரன் வேல் போற்றி
    45. ஓம் சண்முக வேல் போற்றி
    46. ஓம் சமரில் வேல் போற்றி
    47. ஓம் சர்வ சக்திவேல் போற்றி
    48. ஓம் சின வேல் போற்றி
    49. ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி
    50. ஓம் சித்ர வேல் போற்றி

    51. ஓம் சீறும் வேல் போற்றி
    52. ஓம் சிங்காரன் வேல் போற்றி
    53. ஓம் சுரர் வேல் போற்றி
    54. ஓம் சுடர் வேல் போற்றி
    55. ஓம் சுழல்வேல் போற்றி
    56. ஓம் சூர வேல் போற்றி
    57. ஒம் ஞான வேல் போற்றி
    58. ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    59. ஓம் தனி வேல் போற்றி
    60. ஓம் தாரை வேல் போற்றி

    61. ஓம் திருவேல் போற்றி
    62. ஓம் திகழ் வேல் போற்றி
    63. ஓம் தீர வேல் போற்றி
    64. ஓம் தீதழி வேல் போற்றி
    65. ஓம் துணை வேல் போற்றி
    66. ஓம் துளைக்கும் வேல் போற்றி
    67. ஓம் நல்வேல் போற்றி
    68. ஓம் நீள் வேல் போற்றி
    69. ஓம் நுண் வேல் போற்றி
    70. ஓம் நெடு வேல் போற்றி

    71. ஓம் பரு வேல் போற்றி
    72. ஓம் பரன் வேல் போற்றி
    73. ஓம் படை வேல் போற்றி
    74. ஓம் பக்தர் வேல் போற்றி
    75. ஓம் புகழ் வேல் போற்றி
    76. ஓம் புகல் வேல் போற்றி
    77. ஓம் புஷ்ப வேல் போற்றி
    78. ஓம் புனித வேல் போற்றி
    79. ஓம் புண்ய வேல் போற்றி
    80. ஒம் பூஜ்ய வேல் போற்றி

    81. ஓம் பெரு வேல் போற்றி
    82. ஓம் பிரம்ம வேல் போற்றி
    83. ஓம் பொருவேல் போற்றி
    84. ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    85. ஓம் மந்திர வேல் போற்றி
    86. ஓம் மலநாசக வேல் போற்றி
    87. ஓம் முனை வேல் போற்றி
    88. ஓம் முரன் வேல் போற்றி
    89. ஓம் முருகன் வேல் போற்றி
    90. ஓம் முக்தி திரு வேல் போற்றி

    91. ஓம் ரத்தின வேல் போற்றி
    92. ஓம் ராஜ வேல் போற்றி
    93. ஓம் ருத்திர வேல் போற்றி
    94. ஓம் ருணமோசன வேல் போற்றி
    95. ஓம் வடிவேல் போற்றி
    96. ஓம் வஜ்ர வேல் போற்றி
    97. ஓம் வல் வேல் போற்றி
    98. ஓம் வளர்வேல் போற்றி
    99. ஓம் வழிவிடு வேல் போற்றி
    100. ஓம் வரமருள் வேல் போற்றி

    101. ஓம் விளையாடும் வேல் போற்றி
    102. ஓம் வினைபொடி வேல் போற்றி
    103. ஓம் வீரவேல் போற்றி
    104. ஓம் விசித்திர வேல் போற்றி
    105. ஓம் வெல் வேல் போற்றி
    106. ஓம் வெற்றி வேல் போற்றி
    107. ஓம் ஜய வேல் போற்றி
    108. ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி…

    வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
    ஒவ்வொரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். அந்த வகையில் எந்த வகையான பிரச்சனைகளுக்கு எந்த கோவிலுக்கு சென்றால் பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும், வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.

    செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும், பித்ரு சாபங்களும் விலகும்.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்குகிறது.

    கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடுகிறது.

    லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தினால் சிறுநீரக நோய்கள் நீங்குகிறது.

    திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண்நோய்கள் தீரும்.

    சென்னை மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.

    திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்து வந்தால் கனவில் பாம்பு தொல்லை வராது.

    வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும், தையல்நாயகியையும் வழிபட்டு ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.

    திருச்சி கன்டோன்ட்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால்பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் பூசிக் கொள்ள, திருமணத் தடை நீங்கும்.

    திருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

    லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

    திருச்சி துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்துவகை வாத நோய்களும் நீங்கும்.

    ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

    எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சியார்கோயில் கல்கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.

    மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.

    சாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில் வெற்றி பெறலாம்.
    ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது
    “கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்” (I believe in Jesus Christ, God’s only Son, our Lord) என திருத்தூதர்களின் ஏற்கையின் 2ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    இயேசு

    ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் வழங்கப்பட்ட மீட்பரைக் குறித்த வாக்குறுதிகளை, ரோமில் அகுஸ்து சீசரும், பாலஸ்தீனில் ஏரோது அரசனும் ஆடசி செய்த காலத்தில் கடவுள் நிறைவேற்றினார். ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது: “ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத்தேயு 1:21). “நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திருத்தூதர் பணிகள் 4:12) என்று திருத்தூதர் பேதுரு பறைசாற்றினார்.

    கிறிஸ்து

    கிரேக்க மொழியில் ‘கிறிஸ்து’ என்பதும் எபிரேய மொழியில் ‘மெசியா’ என்பதும், “அருள்பொழிவு பெற்றவர்” எனப் பொருள்படும். மீட்பளிக்கும் தமது பணிக்காக இயேசு கடவுளால் திருநிலைப்படுத்தப் பெற்று, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டதால் ‘கிறிஸ்து’ என அழைக்கப்படுகிறார். உலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்ட இவரே இஸ்ரயேல் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மேசியா. இயேசுவும் ‘மெசியா’ எனும் சிறப்பு பெயரை ஏற்றுக்கொண்டார்; அத்தோடு அதன் பொருளையும் தெளிவாக்கினார். “அவர் விண்ணத்தில் இருந்து இறங்கி வந்தவர்” (யோவான் 3:13); “பலருடைய மீட்புக்கு ஈடாக” (மத்தேயு 20:28) தம் உயிரை சிலுவையில் பலியாக்கி உயிர்த்தெழுந்தவர். ‘கிறிஸ்தவர்’ எனும் நமது பெயர் ‘கிறிஸ்து’ எனும் பெயரிலிருந்தே வருகிறது.

    இறைமகன்

    இயேசு தன்னிகரற்ற, நிறைவான முறையில் இறைமகனாக இருக்கிறார். அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், “கடவுளின் ஒரே மகனுமாகிய” (1யோவான் 4:9) அவர், “தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவராக” உள்ளார். இயேசுவின் திருமுழுக்கு மற்றும் உருமாற்ற நிகழ்வுகளில் தந்தையின் குரலொலி, “அன்பார்ந்த மகன்” என்று அவரை வெளிப்படுத்தியது. “தந்தையை அறிந்துள்ள” (மத்தேயு 11:27) மகன் என்று இயேசு தம்மை வெளிப்படுத்தினார்; அதன் வழியாக தந்தையாகிய கடவுளோடு தனிப்பட்ட மற்றும் நிலையான விதத்தில் தாம் உறவு கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். “தந்தையின் ஒரே மகன்” (யோவான் 1:14) என்னும் நிலையில் இயேசுவின் மாட்சியைக் கண்ட திருத்தூதர்கள், அவரை “வாழும் கடவுளின் மகன்” (மத்தேயு 16:16) என்று அறிக்கையிட்டார்கள்.

    ஆண்டவர்

    விவிலியத்தில் ‘ஆண்டவர்’ எனும் பெயர் பொதுவாக, கடவுளின் அரசுரிமையைக் குறிக்கும். இயேசு இந்த சிறப்பு பெயரைத் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தமது இறை அரசுரிமையை இயற்கை, அலகை, பாவம், சாவு ஆகியவற்றின் மீது கொண்ட அதிகாரத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமது சொந்த உயிர்ப்பிலும் வெளிப்படுத்தினார். தொடக்க காலத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அறிக்கைகள், இறைத்தந்தைக்கே உரிய ஆற்றலும் மாண்பும் மாட்சியும் இயேசுவுக்கும் உரியதென பறைசாற்றின; ஆகவே கடவுள் “எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்” (பிலிப்பியர் 2:9) என்று அறிக்கையிட்டன. இயேசுவே உலகத்திற்கும் வரலாற்றுக்கும் ஆண்டவர். அவர் ஒருவருக்கே நம்மை முழுமையாகக் கையளிக்க வேண்டும்.
    பக்தர்கள் இன்றி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகாரவிழா நடைபெற்றது. இதனால் பஞ்சப்பிரகார விழாவை www.samayapuram mariyamman temple.org மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
    அம்மன்கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் ஆகும். இந்தகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சப்பிரகாரவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் மற்றும் வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாவுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. மேலும், கோவிலுக்குள்சென்று சாமியை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு அரசு தடைவிதித்து உள்ளது.

    இதனால் நேற்று பக்தர்கள் இன்றி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகாரவிழா நடைபெற்றது. இதனால் பஞ்சப்பிரகார விழாவை www.samayapuram mariyamman temple.org மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த விழாவையொட்டி ஒரு தங்க குடம், 25 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு வசந்த மண்டபத்திற்கு முன்பாக வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை உற்சவ அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
    ‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல்லாஹ்’ - ‘இறைவனுடைய மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    இறைவனுடன் இணைத்து கூறப்படும் ஒவ்வொரு பெயருக்கும், பொருளுக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு. சாதாரண ஒரு பொருள் இறைவனுடன் இணையும்போது, அதன் அந்தஸ்து உயர்ந்த இடத்தை அடைந்து விடுகிறது.

    உதாரணமாக ‘ரசூல்’ என்றால் ‘தூதர்’ என்று பொருள். இதுவே ‘ரசூலுல்லாஹ்’ - ‘இறைவனின் தூதர்’ என்று வரும்போது மற்ற தூதர்களை விடவும் இறைத்தூதருக்கு தனிச்சிறப்பு உண்டு.

    ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் இறைவனின் தன்மைகளான உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, விழித்திருப்பது, தனித்திருப்பது போன்ற உயர் இறைப்பண்புகள் இந்த மாதத்தில் பிரதிபலிக்கிறது.

    ‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்கே இருக்கிறது, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்; நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் குறிப்பிட்டதை நபி (ஸல்) கூறினார்கள்’ என்று நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அறிவித்துள்ளார்.

    ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் மற்ற மாதங்களை விட ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்படுகிறது; மற்ற மாதங்களை விடவும் வணக்க வழிபாடுகளில் சிறந்ததாக அமைந்துள்ளது; இதன் நாட்களும், இரவுகளும், பகல்களும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நொடியும் மற்ற மாதங்களை விட உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கிறது.

    ரமலானில் நோன்பாளிகளின் ஒவ்வொரு மூச்சும் இறைவனின் தஸ்பீஹ் (துதி பாடுவது) ஆகும். அவர்களின் அழகிய செயல்கள் நன்மைகளாகும். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி கொடுக்கப்படும்.

    இறைவன் ரமலானின் காலங்களையும், நேரங்களையும் அதன் மகத்துவம் கருதி மேன்மையாக வைத்துள்ளான். இந்த கால நேரங்களிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் பயனடைந்து கொள்ள வேண்டும்.

    இந்த காலத்தை பாக்கியமாக நினைத்து, தமது ஆயுளை பாக்கியம் நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்ள வேண்டும். சொல்லையும், செயலையும் இறைதிருப்தியுடன் செயல்படுத்த வேண்டும்.

    ‘காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர’ என்று திருக்குர்ஆன் (103:1-3) குறிப்பிடுகிறது.

    ‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.

    எனவே, இந்த ரமலானில் இறையச்சத்தையும், பேணுதலையும் வளர்த்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ×