என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆண்டுதோறும் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாளாக உள்ளதால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அச்சமயம் கோவில்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறும்.

    முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் மற்றும் காரைக்குடி அருகே அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில், திருப்பத்தூர் அருகே கொங்கரத்தில் உள்ள வண்புகழ் நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படும். மேலும் அன்றைய தினங்களில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    இந்நிலையில் தற்போது கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் வாரந்தோறும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமாக உள்ளதால் திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திருக்கோஷ்டியூர் மற்றும் அரியக்குடி கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் வாரந்தோறும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. அந்த விதிமுறைகளையும் இன்றும் கடைப்பிடிக்கப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வீட்டில் இருந்தபடியே பெருமாளை நினைத்து வழிபாடு செய்து வணங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும்.
    “நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல, மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட பேரினம் ஏதாகிலும் உண்டா?“ நம் தந்தையாகிய கடவுள் மனித உயிர்கள் ஒவ்வொன்றையும் நேசிக்கின்றவர். அவர் எப்போதும் தன்னுடைய நெருங்கிய உறவில் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர். (இணைச்சட்டம் 4:7)

    இதனை, தொ.நூல் 2:15 வசனம் இவ்வாறு எடுத்துக்கூறுகிறது; மனித குலத்தை படைத்த கடவுள், அவர்களை ஏதோன் தோட்டத்தில் குடியிருக்க செய்தார். கடவுளோடு நெருக்கமான உறவில் வாழ வேண்டிய மனிதன் சாத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து, பாவம் செய்து கடவுளுக்கு தூரமாக போனான் (தொ.நூல் 3:9-10). பாவத்தினால் கடவுளை விட்டு தூரமாக போக வேண்டும், அவரிடம் நெருங்கி வரக்கூடாது என்ற உணர்வு மனிதனை இன்னும் வாட்டி வதைக்கிறது.

    இன்றைய காலசூழ்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீளமுடியாமல் தவிப்பது, ஆடம்பர வாழ்க்கையில் உண்மை ஆன்மிகத்தை தொலைத்திருப்பது, பணப்பேராசையால் வீழ்ந்து கிடப்பது, மனித சமூகத்தில் நீதி, நியாயங்களை கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது, இவைகள் யாவுமே கடவுளை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும் என்ற பாவ அடிமைத்தனத்தை காட்டுகிறது.

    எனவே, கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும். இயேசுவின் சிலுவைப்பாதைகளை தியானிக்க, தியானிக்க கடவுள் நம்மோடு கொண்டுள்ள நெருக்கமான உறவு புரியும். அதனால் தான் தவக்காலத்தில் ஜெபத்தில் ஈடுபடுவது தலையானது.

    மேலே கூறிய இணைச்சட்ட நூல் வசனம் என்பது, நம் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வசனம். தவக்காலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவர, கடவுளின் நெருக்கமான அன்புறவை அதிகமாக தியானிப்போம். இடைவிடாது ஜெபத்தில் நிலைத்திருப்போம். இறைவனோடு நெருக்கமான உறவில் வாழ ஆசைப்படுவோம்.

    அருட்திரு. வே.பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, ஆத்தூர்.

    தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே உள்ள திருவண்ணாமலையில் மலை மீது சீனிவாச பெருமாள் உள்ளது. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் லட்சக்கணக்கில் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். ஆனால் தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது.

    மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோ‌ஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று சனி பிரதோ‌ஷம், 20-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருவதை தடுக்க மலைக்கோவிலுக்கு செல்ல இன்று முதல் வருகிற 21-ந் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 20, மற்றும் 21-ந் தேதிகளில் பவுர்ணமியை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தர விடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம். எனகூறப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை போன்ற பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு வடக்கு, தெற்கு டோல்கேட் பகுதியிலும் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக கோவில் வளாகம், கடற்கரை போன்ற பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றது.
    புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அரங்கநாதர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

    அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்தது.

    காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். விரதமிருந்து வந்து அரங்கநாதரை வழிபட்டு செல்வார்கள்.

    இன்று காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோவில் முன்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அரங்கநாதர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்களை போலீசார் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் கோவில் வாசல் முன்பு நின்று பெருமாளை தரிசித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, உப்பு போன்றவற்றை அங்கிருந்த தாசர்களிடம் வழங்கி ஆசி பெற்றனர்.

    பக்தர்கள் தரிசனத்திற்கு தடை என்பதால் கோவில் முன்பு இருந்த ஏராளமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.

    பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் நடை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடந்தது.

    இங்கும் அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஊழியர்கள், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் பக்தர்கள் வாசலில் நின்று கோவிந்தா, கோவிந்தா கோ‌ஷம் எழுப்பி பெருமாளை தரிசித்து சென்றனர்.

    பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இங்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

    இதேபோல் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், சிட்கோ கணேசபுரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
    திருவனந்தபுரம் :

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இரு முடிகட்டுகளுடன் 18-ம் படி வழியாக ஏறி வந்து 15 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர். நேற்று வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் களபாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களப கலச ஊர்வலம் நடந்தது. 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக மாத பூஜையின் போது தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

    எனவே சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
    விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று சிவகாசியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

    இதுகுறித்து பக்தர் ஆறுமுகச்சாமி கூறியதாவது:- வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தநிலையில் தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நிலைமை இப்படி இருக்க மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்து இருப்பதால் புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பக்தர்களுக்கு ஏதாவது சிறப்பு சலுகை வழங்கி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக, அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி சாதாரணப் பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதித்து வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது, கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி அனைத்து வாகனச் சேவைகளும் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் ஏகாந்தமாக நடைபெறும்.

    எனினும், பிரம்மோற்சவ விழாவின்போது கோவிலில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதே நிலை இன்னும் சில காலம் தொடரும்.

    சமீப காலமாக இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதியில் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் இலவச தரிசன டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தற்போது தொழில் நுட்ப கோளாறால் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது கால தாமதம் ஆகிறது. அந்தத் தொழில்நுட்ப கோளாறு சரியானதும் மிக விரைவில் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்.
    ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    இந்த ஆண்டு புரட்டாசி மாதத்துக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 2, அக்டோபர் 9, அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமை வருகிறது. இந்த 5 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட தவறாதீர்கள்.

    ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.

    புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் வரவே வராது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து பெருமாளை வழிபடவேண்டும்.

    மாவிளக்கு என்பது திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும். அந்த மாவிளக்கில் ஏற்றப்படும் தீபம் ஏழுமலையானை குறிக்கும். எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழுமலையானே நம் வீட்டுக்கு வந்ததாக ஐதீகம் ஆகும்.

    மாவிளக்கு ஏற்றுவதோடு, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் புட்டாசி சனிக்கிழமையன்று வழிபாடுகள் செய்து அன்னதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடி வரும்.

    விருப்பம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மிகப்பெரிய படையல் போட்டு வழிபடலாம். பூஜை அறையில் குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

    அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தது. இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை வருகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை விசே‌ஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் நாளை காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசே‌ஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில்உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகளும் விசே‌ஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறுகின்றன.

    தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வாரத்தின் கடைசி நாட் களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எனவே கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி சில கட்டுப்பாடுகளுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர். 
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடா்ந்து பவித்ர பிரதிஷ்டை நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. அதில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கடப்பா மாவட்டம் ஜம்மாலமடுகு நரபுர வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலில் சதுஸ்தானார்ச்சனை, அக்னிபிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை யாகசாலையில் வைதிக காரிய கர்மங்கள் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதிக்கப்படவில்லை ஏகாந்தமாக நடந்தது.

    பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி முரளிதர், கோவில் ஆய்வாளர் முனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×