என் மலர்
ஆன்மிகம்

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
பெருமாள் கோவில்களில் நாளை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா?
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.
அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தது. இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை வருகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் நாளை காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில்உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறுகின்றன.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வாரத்தின் கடைசி நாட் களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி சில கட்டுப்பாடுகளுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Next Story