என் மலர்
கிறித்தவம்
தூய ஆவி நமக்குள் நிரம்ப வேண்டுமெனில் நமக்குள்ளிருக்கும் கெட்ட ஆவி விலக வேண்டும். பகைமை, கோபம், வெறுப்பு, சுயநலம் போன்ற பேய்களை விலக்குவோம்.
இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு கெரசேனர் பகுதிக்குப் படகில் சென்றார். அந்தப் பயணத்தின் வழியில் தான் கொந்தளித்த கடலை ஒரு வார்த்தை சொல்லி அமைதியாக்கியிருந்தார் இயேசு. சீடர்கள் அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.
படகிலிருந்து இயேசுவும் சீடர்களும் இறங்கிய உடனேயே பேய் பிடித்த ஒருவன் கல்லறைகளுக்கு இடையேயிருந்து அவரை நோக்கி ஓடி வந்தான். கல்லறைகளே அவனுடைய இருப்பிடம். அவனை ஊர் மக்கள் அடிக்கடி சங்கிலிகளால் பிணைத்து மரங்களில் கட்டி வைப்பார்கள். ஆனால் அவன் அவற்றையெல்லாம் மிகவும் எளிதாக உடைத்தெறிந்துவிடுவான்.
சங்கிலிகள் எத்தனை கனமானதாக இருந்தாலும் அவனை அடக்க முடிவதில்லை. கூரான கற்களைக் கொண்டு தன்னுடைய உடலையே அவன் கீறிக் காயப் படுத்துவான். அதனால் அவனுடைய உடம்பு முழுவதும் காயங்களின் வடுக்களும், மாறாத புண்களும், வழியும் ரத்தமும் நிரந்தரமாகி விட்டன.
எத்தனையோ குருக்கள், மந்திரவாதிகள், மருத்துவர்கள் முயன்றும் அவனுடைய வியாதியைத் தீர்க்க முடிய வில்லை. யாராலும் அவனுக்குள் இருக்கும் ஆவியைத் துரத்த முடியவில்லை.
தன்னை நோக்கி ஓடிவரும் மனிதனை இயேசு கண்டார். அவனை உற்று நோக்கினார். மூச்சிரைக்க, உதடுகளின் ஓரம் உமிழ்நீர் வழிய இயேசுவுக்கு முன்னால் வந்து நின்றவன் கத்தினான்.
‘இயேசுவே... உமக்கு இங்கே என்ன வேலை. திரும்பிப் போய்விடும். என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ இயேசு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘இயேசுவே உமக்கும் எமக்கும் இடையே ஏன் தகராறு? என்னுடைய வழியில் நான் போய்க்கொண்டிருக்கிறேன். என்னைத் தடுக்க வேண்டாம்’ என்று மீண்டும் கத்தினான்
‘உன் பெயர் என்ன?’ இயேசு கேட்டார்.
‘இலேகியோன்’ பேய் பிடித்திருந்தவன் பதில் சொன்னான்.
இலேகியோன் என்பது ரோம அரசனின் கீழ் சுமார் அறுபதினாயிரம் வீரர்களை உள்ளடக்கிய மாபெரும் படை.
‘இலேகியோனா?’ இயேசு அவனை உற்றுப் பார்த்துக் கேட்டார்.
‘ஆம்... நாங்கள் பலர்’ அவன் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னான்.

‘நான் ஏற்கனவே உன்னை எச்சரித்திருக்கிறேனே. இன்னும் ஏன் மக்களைத் தொந்தரவு செய்கிறாய்?’ இயேசு குரலைக் கடுமையாக்கினார்.
‘இயேசுவே... நீர் கடவுளின் மகன் என்பதை நான் அறிவேன். என்னைத் துரத்த வேண்டாம்’ அவன் உறுமினான்.
‘உன்னை விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ இயேசு சொன்னார்.
‘அப்படியானால் அதோ அந்த பன்றிகளின் கூட்டத்தில் எம்மை அனுப்பிவிடும். எம்மை அழிக்க வேண்டாம்’ தீய ஆவி இரைச்சலாய்ப் பேசியது.
இயேசு திரும்பிப் பார்த்தார். அங்கே ஏரிக்கரை ஓரமாக சிலர் ஏராளமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு பேய் பிடித்தவனைப் பார்த்தார்.
‘போ....’ ஆணையிட்டார்.
பேய்கள் அவனை விட்டு அகலத் துவங்கின. அவன் அலறத் துவங்கினான். அவனை விட்டு வெளியேறிய பேய்கள் எல்லாம் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தன. பன்றிகள் எல்லாம் ஆவிகளின் திடீர்த் தாக்குதலால் சரிவில் உருண்டு ஏரியில் விழுந்து மாண்டு போயின. பன்றி மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் பின் வாங்கினார்கள்.
இயேசுவின் சீடர்கள் வியந்தார்கள். மக்கள் பயந்தார்கள்.
பேய் பிடித்திருந்தவன் துவண்டுபோய்க் கிடந்தான். இயேசு அவனைத் தூக்கி நிறுத்தினார். இதற்குள் மக்கள் நாலா திசைகளிலும் ஓடிப் போய் தாங்கள் கண்ட செய்தியைப் பரப்பினார்கள்.
தாங்கள் கேள்விப்படுவது உண்மையா என்று அறிய மக்கள் ஓடி வந்தார்கள். அங்கே பேய் பிடித்திருந்தவன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார்கள். நடந்த அனைத்தையும் கண்டு ஆச்சரியப்படுவதற்கு மாறாக, அச்சமடைந்தனர்.
மக்களுக்கு மனிதனை விட்டு விட்டுப் பேய் ஓடியது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டாயிரம் பன்றிகளின் இழப்பு மாபெரும் இழப்பாய் தெரிந்தது. எனவே அவர்கள் இயேசுவைக் கழற்றி விட நினைத்தனர்.
‘இயேசுவே... நீர் உண்மையிலேயே பெரியவர். ஆனாலும் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. தயவு செய்து எங்களை விட்டுப் போய்விடும்’ அவர்கள் இயேசுவிடம் வேண்டினார்கள்.
நலம்பெற்ற அந்த மனிதன் இயேசுவிடம், ‘ஐயா.. என்னையும் இனிமேல் உம்முடன் சேர்த்துக் கொள்ளும்’ என்று வேண்டினான்.
இயேசு அவரிடம், ‘இல்லை. நீர் போய் கடவுள் உனக்குச் சொன்னதையெல்லாம் மக்களுக்கு அறிவி. அது போதும்’ என்றார்.
தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன், இயேசுவின் அற்புதத்தை ஊரெங்கும் அறிவிக்கத் துவங்கினான்.
தூய ஆவி நமக்குள் நிரம்ப வேண்டுமெனில் நமக்குள்ளிருக்கும் கெட்ட ஆவி விலக வேண்டும். பகைமை, கோபம், வெறுப்பு, சுயநலம் போன்ற பேய்களை விலக்குவோம். அன்பின் தூய ஆவியை இதயத்தில் அமர்த்துவோம்.

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு பகலில் தேர்பவனியும், மாலையில் தேரில் திருப்பலியும் நடந்தன. திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் மரையுறை, ஜெபமாலை, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.
10-ம் நாள் விழாவான நேற்று காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், மலையாள திருப்பலியும் நடைபெற்றன. பகலில் தேர்பவனியும், மாலையில் தேரில் திருப்பலியும் நடந்தன. திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் ஜே.டி.கிளாட்சன், செயலாளர் டி.அலெக் சாண்டர், துணை செயலாளர் ஜிங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ், பங்குத்தந்தை ரால்ப் கிரான்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆன்றனி ரோசாரியோ மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

பூண்டி மாதா பேராலய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. தேர்பவனியை குடந்தை பிஷப் அந்தோணி சாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
பூண்டிமாதா பேராலயத்தின் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்துசேவியர்அடிகளார் மற்றும் ராயப்பர் அடிகளார் ஆகியோருக்கு நேற்று காலை நினைவு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பேராலயத்தின் அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சூசை, சதீஸ் ஏசுதாஸ், ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் ஆகியோர் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து இரவு தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை குடந்தை பிஷப் அந்தோணி சாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூரில் உள்ள இறை இரக்க ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை குனியமுத்தூரில் இறை இரக்க ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயத்துக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். மேலும் இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணியும் நடந்தது வந்தது.
இதற்கிடையே, ஆலய தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்து வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலையில் கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியின்போது புதிய ஆலய பீட அர்ச்சிப்பும் நடத்தப்பட்டது.
பின்னர் இரவில் ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் இறை இரக்க ஆண்டவரின் சொரூபம் வைக்கப்பட்டு, தேர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தேர் பவனியை ஆலய முன்னாள் பங்குகுரு ஜேசுதாஸ் தொடங்கி வைத்தார்.
ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, குனியமுத்தூர் பஸ்நிறுத்தத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஆலயத்தை வந்து அடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர்வாதத்துடன் விழா முடிந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குகுரு யேசுராஜ் மற்றும் ஆலோசனைக்குழுவை சேர்ந்தவர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டவர் நமக்குச் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடம் ஜெபம் தான். எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்கிறார்.
நம்முடைய அருமை ஆண்டவர் நமக்குச் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடம் ஜெபம் தான். எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்கிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி நாம் ஜெபம் பண்ணும்போது “நம்முடைய ஜெபத்திற்கு அவர் பதில் கொடுக்கிறார் என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்” என 1 யோவான் 5:14-ம் வசனம் சொல்லு கிறது.
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்” (மத்தேயு 21:22)
நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார் என்று நாம் கூறினாலும் சில ஜெபங்களுக்கு பதில் வராத போது உடனே நாம் சோர்ந்து போவதுண்டு. மேலும் தொடர்ந்து ஜெபிப்பதற்கு இயலாமல் ஜெபவாழ்வில் பின்னடைவை சந்திக்கிறோம்.
புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு அற்புதங்களை நாம் பெற வேண்டுமானாலும் அதற்கு நம்முடைய விசுவாசம் தான் மிகவும் அவசியமானதாய் கருதப்படுகிறது. நம்முடைய அருமை ரட்சகராகிய இயேசு கிறிஸ்து எங்கெல்லாம் அற்புதங்களைச் செய்தாரோ அங்கெல்லாம் அற்புதத்தை எதிர்பார்த்து வந்த மக்களிடம் விசுவாசத்தைத்தான் ஆண்டவர் எதிர்பார்த்தார்.
உங்கள் வாழ்விலும் உங்கள் ஜெபத்தின் மூலம் நீங்கள் அற்புதங்களைப் பெற முடியும். ‘உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
விசுவாசம் என்றால் என்ன?
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரேயர் 11:1). இந்த வசனத்தின்படி ‘நாம் பெற்றுக்கொள்ளாத, காணாத ஆசீர்வாதங்களை நிச்சயம் அடைவோம்’ என்ற நம்பிக்கையோடு காத்திருப்பது தான் விசுவாசம்.
“நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்” (ரோமர் 8:25). இந்த வசனத்தின்படி நாம் காணாததை நம்பினோம் என்றால் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களை செய்வார் என்று பொறுமையோடு காத்திருப்போம்.
ஆகவே, இதுவரைக்கும் நீங்கள் பெற்றுக்கொள்ளாத அனுபவிக்காத ஆசீர்வாதங்களை நிச்சயம் கர்த்தர் எனக்குத் தருவார் என பொறுமையோடு அவரைத் துதியுங்கள்.

“இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்” (மாற்கு11:22).
நம்முடைய தமிழ் வேதாகமத்தில் ‘தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்’ என்ற வார்த்தைக்கு வேறொரு மொழிபெயர்ப்பில் ‘தேவனுடைய விசுவாசம்’ என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் இங்கு அருமை இரட்சகர் வலியுறுத்துகிறார்.
நீங்கள் விரும்புகிற எந்த அற்புதமானாலும் அதை பெறுவதற்கு உங்கள் விசுவாசத்தை தேவன் பேரில் வையுங்கள். தேவனுடைய விசுவாசம் உங்களுக்குள் கிரியை செய்ய இடம் கொடுங்கள்.
தேவனுடைய விசுவாசத்தைக் குறித்து விளக்க வேண்டுமானால், ‘ஆபிரகாம் பிள்ளை இல்லாமல் இருந்த காலத்தில் நட்சத்திரங்கள் போல உன் சந்ததி பெருகும்’ என கூறினார். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் ஒவ்வொரு பிள்ளைகளாக தேவன் கண்டார். இதுதான் தேவனுடைய விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசம் உடையவர்களாய் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.
மாற்கு11:23-ல் “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என ஆண்டவர் கூறின வார்த்தையை நீங்கள் மிகவும் எளிதாக எடுக்க வேண்டாம்.
தேவனுடைய விசுவாசம் நமக்குள் எப்படி கிரியை செய்ய வேண்டுமென்பதற்கு ஆதாரமுள்ள வார்த்தை இதுவாகும்.
உங்களுக்கு முன்பாக மலை போன்ற பிரச்சினை இருந்தால் அந்த பிரச்சினையை உங்கள் விசுவாசக் கண்களினால் முதலாவது பாருங்கள். அவ்வாறு நீங்கள் பார்க்கும் போது அவைகள் உங்களைக் கலங்கப் பண்ணுவது போல தெரியும்.
ஆனால் உங்கள் இருதயத்தில் இருக்கிற விசுவாசத்தை கண்களின் வழியாக விசுவாசப்பார்வையாக மாற்றி அவைகளைப் பார்க்க வேண்டும். அப்படியானால் உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள உங்கள் கண்கள் விசுவாசக் கண்களாய் மாற அர்ப்பணியுங்கள்.
அதே வசனத்தில் பிரச்சினைகளைப் பார்த்து பேசுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் வாய் எப்போதும் விசுவாச வார்த்தைகளைப் பேசக்கூடிய வாயாக காத்துக் கொள்ளுங்கள். அவிசுவாசமான வார்த்தை ஒருபோதும் உங்கள் நாவில் வருவதை கர்த்தர் விரும்பவில்லை.
உங்களுக்கு முன்பாக இருக்கிற பிரச்சினைகளானாலும் சரி நீங்கள் விரும்புகிற தேவைகளானாலும் சரி அவைகள் அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதற்கு அடிக்கடி விசுவாச வார்த்தைகளைப் பேசி அற்புதங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சந்தேகமில்லா விசுவாசம்
ஆண்டவராகிய இயேசு, “இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” என்று கூறுகிறதை மாற்கு 11:23-ல் நாம் காணலாம்.
ஆம், சந்தேகம் என்பது ஒரு ஆவியாகும். அது குழப்பத்தையும், கலக்கத்தையும், பயத்தையும் கொண்டு வந்து அற்புதங்களை நாம் காண முடியாதபடிக்கு நம்மை மட்டுப்படுத்தும்.
ஆகவே இருதயத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்படாமல் ‘நான் நம்புவது கர்த்தரால் வரும்’, ‘நான் நிச்சயமாய் அற்புதங்களைக்காண்பேன்’, ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார்’ என விசுவாசத்திற்கு ஏதுவான வார்த்தைகளைக்கூறி சந்தேகத்தின் ஆவியை துரத்துங்கள். உங்கள் விசுவாசத்தின்படி தேவன் அற்புதங்களைக் காண கிருபை செய்வார். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணியாளர் ஹிலரி தலைமையில் கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. அருட்பணியாளர் விக்டர் மறையுரை நிகழ்த்துகிறார். மார்னிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் பிரிம்மஸ்சிங் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில், ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி காலையில் அருட்பணியாளர் டோமினிக் கடாட்ச தாஸ் தலைமையில் திருப்பலியும், மதியம் அன்பின் விருந்தும் நடைபெறும்.
வருகிற 16-ந் தேதி காலையில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து நேர்ச்சை விருந்து நடைபெறும். 18-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் திருப்பலியும், 20-ந் தேதி மாலை கோட்டார் மறைவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. நிகழ்ச்சியில், அருட்பணியாளர் காட்வின் செல்வ ஜெஸ்டஸ் மறையுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தூய அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெறும்.
திருவிழா இறுதி நாளான 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்குதலும் நடைபெறும். இதில் அருட்பணியாளர் பால் ரிச்சர்டு ஜோசப் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் நெல்சன் மறையுரை நிகழ்த்துகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் அருட்பணியாளர் பிரிம்மஸ்சிங், பங்குபேரவை உதவி தலைவர் மைக்கேல் ராஜன் பாபு, செயலாளர் சேவியர் ஜெஸ்டஸ் தங்கம், துணை செயலாளர் டென்னிஸ் ராஜ், பொருளாளர் மீனா ஜாக்கப் சந்திரன் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மணப்பாடு பங்குதந்தை தியோபிலஸ் அடிகள் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில், உபகார அன்னையின் பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல், திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் அருள் விழாவும் நடக்கிறது.
மாலை 3 மணிக்கு தேர்பவனியும், 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குகுரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் சபை மக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

தளவாய்புரம் புனித ஜார்ஜியார் பங்கு குடும்பவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நாகர்கோவில் தளவாய்புரத்தில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு திருச்செபமாலையும், 6.45 மணிக்கு அருட்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து, அருட்தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருச்செபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. 9-ந் திருவிழாவான 20-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, பங்குத்தந்தை இல்லம் மந்திரிப்பு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளில் காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு அருட்தந்தை ஞானசேகரன் தலைமை தாங்குகிறார். அருட்தந்தை ஆரோக்கிய ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

வழுக்கம்பாறையை அடுத்த சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
வழுக்கம்பாறையை அடுத்த சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி, இரவு 8 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் செபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை டயனீஷியஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், திருவிருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியும் கொடியிறக்கமும், நதியோர நாணல் நாடகம் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான ஜார்ஜ் வின்சென்ட், இணைப்பணியாளர் ஜோசப் செயில் சிங் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

திராட்சைக் கொடியின் தன்மையையும், அதைப் பயனாக்கும் முறையையும், ஆழமாக இயேசு பிரான், இவ்வுலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். சிந்திப்போம். செயல்படுவோம்.
இயேசு தொடர்ந்து இந்த உலகில், மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவ்விதம் உபதேசித்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் தன் சீடர்களை நோக்கி, இவ்வாறு கூறினார்:
“உண்மையான ‘திராட்சைக் கொடி’ நானே! என் தந்தையே அக்கொடியை நட்டு வளர்ப்பவர். என்னிடம் உள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும், அவர் தறித்து விடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுதியாக கனி தருமாறு ஆக்கி விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால், நீங்கள் ஏற்கனவே தூய்மையாக இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல, நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்திருந்தாலன்றித், தானாகக் கனி தர இயலாது. அதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது”.
“நானே, திராட்சைக் கொடி. நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து, உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்திராதவர், கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு, உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு, நெருப்பில் இட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடர்களாய் இருப்பதே, என் தந்தைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
இந்த உண்மையைக் கூர்ந்து கவனிப்போம். ‘தான் யார்?’ என்பதை, ஒவ்வோர் இடத்திலும், உவமைகள் வாயிலாக, இயேசு பெருமான் வெளிப்படுத்துகிறார்.
இவ்விடத்தில், தான் ஒரு தோட்டக்காரராக இருந்து பேசுகிறார். நானே உண்மையான திராட்சைக் கொடி என்கிறார். இந்தக் கொடியை நட்டவர் என் தந்தை என்கிறார். திராட்சைக் கொடியில் உள்ள அனைத்துக் கிளைகளும், கனி தரும் என்று கூற முடியாது. கனி கொடாத கிளைகளை, தந்தையானவர் தறித்து விடுவார் என் கிறார். இதோடு அவர் வேலை முடிந்தது என்று, அவர் நின்று விடுவதில்லை. கனி தரும் அனைத்துக் கிளை களையும், மிகுதியாகக் கனி தருமாறு ஆக்கி விடுவார்.
மேலும் அவர் கூறும் பொழுது, ‘என்னோடு நீங்கள் இணைந்து இருங்கள்’ என்கிறார். எப்படி? ‘நான் உங்களோடு இணைந்து இருப்பது போல’, என்று கூறு கிறார்.
சீடர்களோடு அவர் இணைந்து இருப்பதை முதலில் உறுதிப்படுத்துகிறார். அதைப்போல, உண்மையாக என்னுடன் இணைந்து இருங்கள் என்கிறார்.
கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்திருந்தால்தான், கனியைக் கொடுக்க முடியும். அதைப்போல, என்னோடு இணைந்திருந்தால், கனி தர முடியும். அதனால்தான் நானே ‘திராட்சைக் கொடி’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்துகிறார்.

என்னை விட்டுப் பிரிந்தால் எதுவும் செய்ய முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
சீடர்களுக்கு உபதேசம் செய்கின்றபொழுது, தன் தந்தையின் சிறப்பு என்ன? தந்தையானவர் என்னை எப்படி வழி நடத்துகிறார்? என்றெல்லாம் எடுத்துரைத்துப் பேசுகிறார்.
கனி தராத கிளைகளைத் தறிப்பதும், கனி தரும் கிளைகளை மிகுதியாகக் கனி தர வைப்பதும்தான், தன் தந்தையின் பணி என்கிறார். தந்தையின் பேச்சையும், செயலையும், தட்டாமல் நான் ஏற்றுக்கொள்வதைப் போல, நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.
அதனால்தான், ‘நான் உங்களோடு இணைந்திருப் பதுபோல, என்னோடு இணைந்திருங்கள்’ என்கிறார். அப்படியிருந்தால், ‘என் தந்தையைப்போல, நானும் உங்களை வழி நடத்துவேன்’ என்ற பொருள், ஆழமாகப் புலப்படுகிறதல்லவா?
ஆம்! நண்பர்களே! இந்த நற்செய்தி போதிக்கும் கருத்தை, ஆழமாகச் சிந்திப்போம். அந்தக் கருத்துக்கு, வடிவம் கொடுப்போம். அவர் போதனையை ஏற்றுக்கொள்வோம்.
இந்த வாரம் இச்சிந்தனையின் உட்பொருளை ஆராய்வோம்.
எம் மதமாக இருந்தாலும் மதம் சார்ந்து பார்க்காமல், மனம் சார்ந்து பார்ப்போம். பல்கிக்கிடக்கும் நற்கருத்துகளை ஏற்றுக்கொள்வோம். ஏதோ திராட்சைக் கொடிதானே என்று பாராமல், திராட்சைக் கொடி பற்றிய செய்திகள், நற்செய்தியில் எப்படிச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைச் செவிமடுப்போம்.
நான், உங்களுக்குள்ளும், நீங்கள் எனக்குள்ளும் இருக்கும் சிறப்பில் காணும் தத்துவத்தை எண்ணிப் பாருங்கள்.
இயேசு பெருமான், மக்களிடம் பேசுகின்றபொழுது, தன் விருப்பத்திற்குப் பேசவில்லை. தன் தந்தையின் வழி நின்று பேசுகிறார். தந்தையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, தந்தையின் செயல் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார்.
கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்து நல்ல கனிகளைத் தருவதைப் போல, என்னோடு இணைந் திருங்கள்; நற்கனியை நீங்கள் கொடுக்க முடியும் என்கிறார்.
இணைந்திருப்பதைப் பற்றிப் பேசுகின்றபொழுது இருபுறமும் இச்செயல் இருக்க வேண்டும் என்பதை வலி யுறுத்துகிறார். அதனால்தான் நான் உங்களோடு இணைந்திருப்பது போல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள் என்று கூறுகிறார்.
தந்தையின் செயல்படி நான் இயங்குகிறேன். அதைப்போல, என் செயல்படி நீங்கள் இயங்குங்கள் என்று கூறுகிறார். இயேசுவின் உவமைகளைப் படிக்கும் பொழுது, நாம் கற்க வேண்டியவைகள் பல்கிக் கிடக்கின்றன. உவமைகள் மக்கள் மனதில் நின்று நிலைத்து விடும். சிந்திக்கத் தூண்டும். எளிய, இனிய உவமைகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். மக்களும் புரிந்து கொண்டு செயல்பட வழி வகுக்கும்.
திராட்சைக் கொடியின் தன்மையையும், அதைப் பயனாக்கும் முறையையும், ஆழமாக இயேசு பிரான், இவ்வுலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். சிந்திப்போம். செயல்படுவோம்.
செம்பை சேவியர்.

நாமும் அன்பைப் பெருக்குவோம். ஒருவரோடு ஒருவர் அன்பால் இணைந்து வாழ்வோம். இதுவே இயேசு பெருமான் மக்களுக்குக் கொடுத்த நற்செய்தி.
அந்தக் காலத்தில் இயேசு பிரான் தன் சீடரை நோக்கி, “என் தந்தை என் மீது அன்பு கொண்டது போல், நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நீங்கள் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றொருவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளையாகும்”.
“நம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு வேறில்லை. நான் கட்டளையிடுவதையெல்லாம் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்”.
“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், நம் ‘தலைவர்’ செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் ‘நண்பர்கள்’ என்றேன். ஏனெனில் என் தந்தையிடம் இருந்து கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் ‘கனி’ தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும், உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால், தந்தையிடம் கேட்பதையெல்லாம், அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்”.
இந்த நற்செய்தியைக் கொஞ்சம் அலசி ஆராய்வோம்.
‘பணியாளர்’, ‘நண்பர்’ என்ற இரண்டுக்கும் இயேசு பிரான் வேறுபாடு காட்டுகிறார்.
பணியாளர் பற்றிக் குறிப்பிடும்பொழுது, பணியாளருக்கு ‘தலைவர்’ என்ன செய்கிறார் என்பதே தெரியாது.
‘நட்பு’ என்பதும், ‘நண்பர்கள்’ என்பதும் அப்படிப்பட்டதல்ல என்கிறார். நண்பன் என்பவன், நெருக்கமானவன் ஆகி விடுகிறான். ஆகவேதான் உரிமை காரணமாக அந்தச் சொல்லை இயேசு பிரான் பயன்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக அன்பைப் பற்றி பேசுகிறார்.
‘நான் தந்தையிடம் இருந்து பெற்றவைகள் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை’.
நீங்கள் கனி தர வேண்டும். அதுமட்டுமல்ல. நீங்கள் தரும் கனியானது நிலைத்திருக்க வேண்டும்.
என் பெயரால் நீங்கள் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குப் பெற்றுத் தருவார். இதற்கெல்லாம் அடிப்படை அன்பு அல்லவா?
‘தன்னைப் போல் பிறரையும் நேசி’ என்பதுதான், இயேசு பிரானின் அடிப்படைத் தத்துவம்.
நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும். இதுதான் உண்மையான அன்பு என்று போதிக்கிறார்..

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற திருக்குறளை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
இடையில் உடுத்தி இருக்கும் ஆடை, கழன்று விடப் போகிறது என்பதை, தன்னையும் அறியாமல் உணர்ந்த கையானது எப்படி அத்துன்பத்தைக் களைய, விரைந்து செயல்படுகிறதோ, அதைப்போல தன் நண்பனுக்குத் துன்பம் என்று வந்தவுடன், உடனே ஓடிச் சென்று காப்பதே, ‘நட்பு’ என்று இதற்கு அர்த்தம்.
நட்பின் வலிமை பற்றி பேசாத இலக்கியங்கள் கிடையாது. நட்புக்கு ஈடு இணை கிடையாது என்பதை உணர்ந்துதான், ‘நண்பர்கள்’ என்ற வார்த்தையை இயேசு பிரான் பயன்படுத் துகிறார். தலைவரின் எண்ணமும் செயலும் நண்பர்கள்தான் அறிவார்கள். பணியாளர்கள் அறிய மாட்டார்கள்.
நட்பு ஆழமானது; புனிதமானது. நாமும் நட்பின் மேன்மையைப் புரிந்து கொள்வோம். நட்பின் புனிதத்தைப் பிறரிடமும் பகிர்ந்து கொள்வோம். நட்பின் ஆழத்தை உணர்ந்து நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம். நட்பு என்பது இரு பக்கமும் அதாவது நட்பைப் பெறுவோரும், நட்பை வழங்குவோரும் நாணயத்தின் இரு பக்கமாய் இருந்து வாழ வேண்டும். நட்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைத் தத்துவம்.
நட்புக்கு அடித்தளமாக அமைவது அன்பு ஆகும். அன்பானது அகத்தில் இருந்து வெளிவர வேண்டும். நண்பர் களுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு வேறு கிடையாது என்று கூறுகிறார். அதற்காக இயேசு பெருமான் சொல்லும் வார்த்தையைக் கவனியுங்கள்.
‘நான் கட்டளையிடுவதையெல்லாம் செய்தால், நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்’ என்று கூறுகிறார்.
பணியாளருக்கும், நண்பர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறார். முதலில் நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறார். அதற்கு அடுத்தாற்போல் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
‘என் தந்தையிடம் இருந்து கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். ஆனால் நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ என்றும் கூறுகிறார்.
தலைவர், பணியாளர் என்ற உறவு, நெருக்கம் காரணமாக இருக்க முடியாது. நட்பு ஒன்றுதான் நெருக்கம் காரணமாக இருக்க முடியும். ஆகவே பணியாளர், தலைவர் என்ற உறவை ஏற்படுத்த இயேசு பெருமான் விரும்பவில்லை. நண்பன் என்ற உறவைத்தான் ஏற்படுத்த விரும்புகிறார்.
உரிமை காரணமாக வருவது, அன்பு. அந்த அன்பில் விளைவது நட்பு. உண்மையான நட்பு, பகை கொள்ளாது. வேறுபாடு காட்டாது. அன்பை மேலும் மேலும் செழிக்கச் செய்யும். அன்பால் விளையும் அந்த நட்பு உயிரையும் கொடுக்க துணையாக அமையும்.
இந்த நற்செய்தியைப் படிப்போர் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாமும் அன்பைப் பெருக்குவோம். ஒருவரோடு ஒருவர் அன்பால் இணைந்து வாழ்வோம். இதுவே இயேசு பெருமான் மக்களுக்குக் கொடுத்த நற்செய்தி.
- செம்பை சேவியர்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித தோமையார் சொரூபம் தாங்கிய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலையில் அருள் தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை முக்கிய நிகழ்வான புனித தோமையார் சொரூபம் தாங்கிய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் தங்கசாமி தொடங்கி வைத்தார்.
இதில் வாணதிரையான்பாளையம், புதூர்பாளையம், திருவள்ளுவர்நகர், கோவண்டாகுறிச்சி, வடுகர்பேட்டை, விரகாலூர், நத்தம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் கொடியிறக்கம் மற்றும் அன்னதானம் நடைபெறும்.
திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை பர்னபாஸ், அருட்சகோதரிகள், கிராம பட்டையதாரர்கள், புனித தோமையார் அந்தோணியார் பேரவையினர் செய்திருந்தனர்.