என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஜார்ஜியார் பங்கு குடும்ப விழா நாளை தொடங்குகிறது
    X

    புனித ஜார்ஜியார் பங்கு குடும்ப விழா நாளை தொடங்குகிறது

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் பங்கு குடும்பவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நாகர்கோவில் தளவாய்புரத்தில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு திருச்செபமாலையும், 6.45 மணிக்கு அருட்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து, அருட்தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருச்செபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. 9-ந் திருவிழாவான 20-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, பங்குத்தந்தை இல்லம் மந்திரிப்பு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளில் காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு அருட்தந்தை ஞானசேகரன் தலைமை தாங்குகிறார். அருட்தந்தை ஆரோக்கிய ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×