search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother of Divine Providence"

    புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.
    கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் சகாய அன்னை ஆலயத்தின் 20-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு புதிய கொடிமரத்தை அர்ச்சித்தார்.

    வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ் கல்வெட்டை திறந்து வைத்தார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியோடு தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.

    தொடர்ந்து திருவிழா திருப்பலி நடந்தது. விழாவில், கோவில்பட்டி வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ், அருட்தந்தைகள் அந்தோணிராஜ், ஆரோக்கியசாமி, பிராங்களின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வேதராஜ் செய்திருந்தார்.
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழாவுக்கு அருட்பணியாளர் ஞானசேகரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்செய்தி கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    13-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, முதல்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை நியுமேன் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள். 
    ×