என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    சுங்கான்கடை தூய அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணியாளர் ஹிலரி தலைமையில் கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. அருட்பணியாளர் விக்டர் மறையுரை நிகழ்த்துகிறார். மார்னிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் பிரிம்மஸ்சிங் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில், ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி காலையில் அருட்பணியாளர் டோமினிக் கடாட்ச தாஸ் தலைமையில் திருப்பலியும், மதியம் அன்பின் விருந்தும் நடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி காலையில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து நேர்ச்சை விருந்து நடைபெறும். 18-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் திருப்பலியும், 20-ந் தேதி மாலை கோட்டார் மறைவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. நிகழ்ச்சியில், அருட்பணியாளர் காட்வின் செல்வ ஜெஸ்டஸ் மறையுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தூய அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெறும்.

    திருவிழா இறுதி நாளான 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்குதலும் நடைபெறும். இதில் அருட்பணியாளர் பால் ரிச்சர்டு ஜோசப் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் நெல்சன் மறையுரை நிகழ்த்துகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் அருட்பணியாளர் பிரிம்மஸ்சிங், பங்குபேரவை உதவி தலைவர் மைக்கேல் ராஜன் பாபு, செயலாளர் சேவியர் ஜெஸ்டஸ் தங்கம், துணை செயலாளர் டென்னிஸ் ராஜ், பொருளாளர் மீனா ஜாக்கப் சந்திரன் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×