என் மலர்
ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலய தேர்பவனி குடந்தை பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்
பூண்டி மாதா பேராலய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. தேர்பவனியை குடந்தை பிஷப் அந்தோணி சாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
பூண்டிமாதா பேராலயத்தின் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்துசேவியர்அடிகளார் மற்றும் ராயப்பர் அடிகளார் ஆகியோருக்கு நேற்று காலை நினைவு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பேராலயத்தின் அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சூசை, சதீஸ் ஏசுதாஸ், ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் ஆகியோர் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து இரவு தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை குடந்தை பிஷப் அந்தோணி சாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story