search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Thomas"

    • 8-ந்தேதி முதியோர், நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.
    • 9-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு நவநாள், திருக்கொடிப்பவனியைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் நவநாள், திருப்பலி, அருளுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 9-ம் நாள் திருவிழாவான வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.

    தேர்ப்பவனி 10-ம் நாள் திருவிழாவான 9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்த் திருப்பலிக்கு அருட்பணி மரிய செல்வன் தலைமை வகித்து அருளுரையாற்றுகிறார். காலை 7.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு ஆலஞ்சி மறைமாவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் தூய ஞானப்பிரகாசியார் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரையாற்றுகிறார். இதனை பங்கு மக்கள், பங்குப்பேரவையினர் சிறப்பிக்கின்றனர். காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், அருட் பணியாளர் கில்டஸ், பங்குப்பேரவை துணைத்தலைவர் அந்தோனி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.
    • புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

    அவினாசி – சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நேற்றுமாலை நடந்தது. முன்னதாக கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா தொடங்கியது. நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 8.30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.

    திருப்பலி முடிவில், திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பாண்டு வாத்தியம் முழங்க, புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×