என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் சீனி, இசக்கி பரத், வினோத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோலி சோடா 2’ படத்தின் விமர்சனம். #GoliSoda2
    முன்னாள் போலீஸான சமுத்திரகனி வடசென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று இளைஞர்கள் பழக்கம். இதில் ஒருவர் ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனி, அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலித்து வருகிறார். இவர்களின் காதல் விஷயம் சுபிக்‌ஷாவின் அம்மா ரோகினிக்கு தெரிய வர, ரவுடி தொழிலை விட்டு நல்ல வேலைக்கு போக சொல்லி வலியுறுத்துகிறார். பரத் சீனியும் ரவுடியிடம் இருந்து பிரிந்து நல்ல வேலை செல்ல முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ரவுடியுடன் சேரும் நிலை ஏற்படுகிறது.

    மற்றொரு இளைஞர் இசக்கி பரத், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு, கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருந்து வருகிறார். ஒரு கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும் என்பதால் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவர் கிரிஷா குரூப்பை காதலித்து வருகிறார். 

    இவர்களின் காதல் விஷயம் தெரிந்த ஜாதி தலைவரும் பக்கத்து வீட்டுக்காரருமானவர் கிரிஷா குரூப்பை அடித்து விடுகிறார். இவர் மீது புகார் கொடுக்க சென்ற கிரிஷா குரூப்பை இசக்கி பரத்தையும் போலீஸ் திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்னர், இசக்கி பரத்தை அடித்துவிட்டு, கிரிஷா குரூப்பை ஜாதி தலைவர் அழைத்து சென்று விடுகிறார்.



    மற்றொரு இளைஞர் வினோத், ஆட்டோ ஓட்டி வரும் இவர் கார் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள். இவர் கவுன்சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.

    இந்த மூன்று இளைஞர்களும் ஒவ்வொரு பிரச்சனையில் மாட்டுகிறார்கள். இவர்கள் வாழ்க்கை இதன்பிறகு எப்படி சென்றது. சமுத்திரகனி எப்படி உதவி செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் பரத் சீனி ரவுடியுடன் வலம் வருகிறார். காதலியை கரம் பிடிப்பதற்காக ரவுடியை விட்டு விலக முடியாமல், காதலியையுடனும் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. முந்தைய படத்தை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் சுபிக்‌ஷா துறுதுறு பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார்.

    இசக்கி பரத் சுறுசுறுப்பான இளைஞராக மனதில் பதிகிறார். இவருக்கு ஜோடியாக வரும் கிரிஷா குரூப்பும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல், வினோத் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 



    சமுத்திகனியின் நடிப்பு பெரிய பலம். இந்த மூன்று இளைஞர்களுக்கும் ஆலோசனை வழங்குவது, எப்படி பிரச்சனைகளை கையாளவது என்று சொல்லும் போது நமக்கே அதை ஏற்றுக் கொள்ள தோன்றுகிறது. 

    கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கும் மூன்று இளைஞர்களை இந்த சமூகம் அவர்களை வளர விடாமல் பிரச்சனைகளை கொடுக்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

    படம் ஆரம்பத்தில் மெதுவாக செல்கிறது. ஏற்கனவே பார்த்த காட்சிகள் என பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது. ஆனால், பிற்பாதியில் படம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அச்சு ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கோலி சோடா 2’ கேஸ் குறைவு. 
    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

    1173ம் ஆண்டு இங்கிலாந்தாகவும், பிரான்சாகவும் பிரிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ்க்கு பிரிக்கப்பட்ட பகுதியில் இங்கிலாந்துக்கு சொந்தமாக நகரங்கள் இருந்தது. இந்த இடத்தை வைத்து அப்பாக்கு எதிராக மகன்களை தூண்டி விட்டு பிரான்ஸ் பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க முடிவு செய்தார்கள். இறுதியில் பிரான்ஸை இங்கிலாந்து கைப்பற்றிதா என்பதே படத்தின் கதை.



    தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போன்று, ஐரோப்பாவில் நடந்த சகோதர சண்டை பற்றிய சரித்திரக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். மூன்று சகோதரர்களின் யுத்தமும், அதனால் ஏற்படும் விளைவையும் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள்.

    இதில் சாண்டலர் மானஸ், மைக்கேல் லூப்ஸ் கர்டோசோ, நெய்ல் கூல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சியில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார்கள். ஸ்டெபினோ மில்லா இப்படத்தை இயக்கி இருக்கிறார். சரித்திர பின்னணியில் போர் காட்சிகள் அனைத்தையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை நாம் பார்த்துவிட்டதால் இப்படம் பார்க்கும் போது பிரம்மாண்டம் அதிகமாக தெரியவில்லை.



    டாம் கேப்யுனோவின் பின்னணி இசையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஃபேப்ரிஸியோ மெய்னார்டியின் ஒளிப்பதிவு பிரியடு பிலிம்கான உணர்வை கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ சுவாரஸ்யம் குறைவு.
    ஜே.ஏ.பயோனா இயக்கத்தில் கிறிஸ் பிராட் - ப்ரைஸ் டல்லாஸ் ஹோவார்டு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' படத்தின் விமர்சனம். #JurassicWorldFallenKingdom #ChrisPratt
    கடந்த பாகத்தில் இஸ்லா நுப்லர் தீவில் ஏற்படும் மரபணு மாற்ற டைனோசர்களால் ஏற்படும் விபத்தால் அங்குள்ள ஜூராசிக் பார்க்க மூடப்படுகிறது. இருப்பினும் பல வகையான மரபணு மாற்றப்பட்ட டைனோசர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அந்த தீவில் இருக்கும் எரிமலைகள் வெடித்துச் சிதறவிருப்பதாக அரசுக்கு தகவல் கிடைக்க, அங்கிருக்கும் டைனோசர்களை காப்பற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. 

    டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதால் அவற்றை காப்பாற்றுவதற்கான முயற்சி கைவிடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் விஞ்ஞானியின் சொத்தை பராமரித்து வரும் ரபே ஸ்பால், அங்கிருக்கும் டைனோசர்களில் மனிதர்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஊதா நிற டைனோசரை கைப்பற்றி வர நினைக்கிறார். அதற்காக அழிந்து வரும் மிருகங்களை காப்பாற்றி வரும் நாயகி ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டின் உதவியை ரபே ஸ்பால் கேட்கிறார். அந்த டைனோசர்களை காப்பாற்றி வேறு ஒரு தீவில் உயிர்வாழ வைக்க உதவி வேண்டும் என்று கேட்பதால், நாயகி அதற்கு சம்மதிக்கிறார்.



    பின்னர், சிறிய வயதில் அந்த ஊதா நிற டைனோசரை வளர்த்த நாயகன் கிறிஸ் பிராட்டும் இந்த குழுவில் இணைகிறார். அவர்களுடன் ஒரு ஹேக்கர் மற்றும் ஒரு படையே அந்த தீவுக்கு செல்கிறது. கிறிஸ் பிராட் தான் வளர்த்த டைனோசரை தேடி கண்டுபிடிக்கிறார். அதனுடன் அன்பை பரிமாற நினைக்கும் போது, அவருடன் வந்தவர்கள் துப்பாக்கி மூலம் அந்த டைனோசரை குறிவைத்து மயக்க மருந்தை செலுத்துகின்றனர். மேலும் கிறிஸ் பிராட்டையும் அடித்துவிட்டு, நாயகியையும் ஏமாற்றி விட்டு டைனோசரை அங்கிருந்து கடத்திச் செல்கின்றனர். 

    அத்துடன் அந்த தீவில் இருந்த டைனோசர்களின் மரபணுக்களையும் சேகரித்தும் செல்கின்றனர். அந்த மரபணுவை வைத்து புதிய கொடூர டைனோசர்களை உருவாக்கி போருக்கு பயன்படுத்த நினைக்கிறார் ரபே ஸ்பால். 



    கடைசியில் அந்த தீவில் மாட்டிக் கொண்ட கிறிஸ் பிராட் தனது செல்ல டைனோசரை காப்பாற்றினாரா? அதன் மூலம் உருவாக்கப்படும் கொடூர டைனோசர்களை அழித்தாரா? டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? அதன் முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கிறிஸ் பிராட் அவருக்குண்டான காமெடி கலந்த பேச்சால் ரசிக்க வைக்கிறார். ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டு, ஜெஃப் கோல்ப்ளம், ஆண்ட்ரூ ஓக்கேலோ, பி.டி.வாங், டேனியல் பினேடா, டேவிட் ஓலவாலே, கார்ல் பாரர், ரபே ஸ்பால் என அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    கடந்த பாகமான ஜூராசிக் வேர்ட்டு சக்கை போடு போட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் ஜூராசிக் வேர்ட்டு ஃபாலன் கிங்டம், டைனோசர்களை போருக்கு பயன்படுத்த நினைக்கும் ஒருவரின் முயற்சி, அதனால் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது. குட்டி டைனோசர் முதல் பெரிய டைனோசர் வரை, கிறிஸ் பிராட் மற்றும் அவர் வளர்த்த ப்ளூ டைனோசர், கொடூரமான மஞ்சள் வரியுடைய டைனோசர் என ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை காட்டி, அதன் அட்டாகசங்களை ரசிக்க வைத்ததுடன் வாய் பிளக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.ஏ.பயோனா. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாகவந்திருக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் அசத்தியிருக்கிறார்கள். அடுத்த பாகம் வருதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 

    மிச்செல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஆஸ்கார் ஃபாராவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' மிரட்டல். #JurassicWorldFallenKingdom #ChrisPratt

    தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹீமா குரேசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தின் விமர்சனம். #Kaala #Rajini
    மும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. மகன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர். 

    தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.



    இதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 



    ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். 



    சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘காலா’ கிங்.
    அமர், ஜோதிஷா நடிப்பில் பா.ரஞ்சித்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பேய் இருக்கா இல்லையா’ படத்தின் விமர்சனம். #PeiIrukkaIllaya
    ஊரில் அமர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஆதரவாக யாரும் இல்லை. அதே ஊரில் இருக்கும் பொன்னம்பலம் ரவுடிசம் செய்துக் கொண்டு இருக்கிறார்.

    ஒரு நாள் நாயகி ஜோதிஷாவை பொன்னம்பலத்தின் தம்பி துரத்தி வருகிறார். இதைப் பார்க்கும் அமர் மற்றும் நண்பர்கள், பொன்னம்பலத்தின் தம்பியை அடித்து ஜோதிஷாவை காப்பாற்றுகிறார்கள். இதனால், கோபமடையும் பொன்னம்பலம், அமர் மற்றும் நண்பர்களை கொல்ல நினைக்கிறார்.

    பெரிய தாதாவுடன் பகைத்துக் கொண்டதால், தலைமறைவாக இருக்க, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தஞ்சம் அடைகிறார்கள். அதே பங்களாவில் ஜோதிஷாவும், அவரது தோழிகளும் பேய் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள். மேலும் நாடக கும்பல் ஒன்றும் அந்த பங்களாவிற்கு வருகிறார்கள்.



    பேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் அமர் மற்றும் நண்பர்கள், ஜோதிஷா மற்றும் தோழிகள், நாடக கும்பல் ஆகியோர் எப்படி வெளியில் வந்தார்கள்? அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா? தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ஓரளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நண்பராக வருபவர்கள் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக வரும் ஜோதிஷா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். வில்லனாக நடித்திருக்கும் பொன்னம்பலத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. 



    பேய் படங்கள் என்றாலே, பங்களா, பழிவாங்குவது என வழக்கமான அதே பாணியை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார். திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம். திரையில் காமெடி காட்சிகள் எதுவும் எடுபடவில்லை. கதாபாத்திரங்களிடையே நடிப்பை வரவழைக்க, இயக்குனர் சிரமப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட காட்சிகள், தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    சம்பத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். மகிபாலனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘பேய் இருக்கா இல்லையா’ சுமார் ரகம்.
    லியோ ஷாங் இயக்கத்தில் ஜாக்கி சான் - டெஸ் ஹூப்ரிச் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ப்ளீடிங் ஸ்டீல்' படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியான ஜாக்கி சானின் மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பார்ப்பதற்காக ஜாக்கி சான் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில், விஞ்ஞானி ஒருவரை அவரது குழுவுடன் சென்று காப்பாற்றி வரும்படி ஜாக்கி சானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

    அந்த விஞ்ஞானி, தான் உருவாக்கும் மரபணு இதயத்தை ஆண்ட்ரூ என்பவரது உடலில் பொறுத்துகிறார். அதனால் தாக்குப்பிடிக்க முடியாத அந்த நபர், கொடூர அரக்கன் தோற்றத்திற்கு மாறுகிறார். பின்னர் அதே விஞ்ஞானி உருவாக்கும் அழிவே இல்லாத மரபணு மாற்றத்தை தன்னுள் செலுத்தி தன் பழைய தோற்றத்துக்கு மாறவும், இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கவும் திட்டமிடுகிறார். 



    அதற்காக அந்த விஞ்ஞானியை கடத்தி, அவர் உருவாக்கிய மரபணுவை உபயோகப்படுத்தி அவரை கொல்லவும் திட்டமிடுகிறார். இந்த நிலையில், அவரை காப்பாற்றச் செல்லும் ஜாக்கி சானுக்கும், அவரை கடத்தி கொல்ல முயற்சிப்பவர்களுக்கும் சண்டை நடக்கிறது. இதில் அந்த விஞ்ஞானியை ஜாக்கி சான் காப்பாற்றி விடுகிறார். அதேநேரத்தில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த ஜாக்கி சானின் மகளும் இறந்து விடுகிறாள். 

    தான் உருவாக்கிய மரபணு உருவாக்கத்தை தன்னை காப்பாற்றிய ஜாக்கி சானின் மகளின் உடலில் செலுத்தி அவளை உயிர் பெற வைக்கிறார் அந்த விஞ்ஞானி. இதனால் பழைய நியாபகங்களை இழந்த அவளை ஒரு ஆசரமத்தில் சேர்த்து பாதுகாத்து வருகிறார் ஜாக்கி சான். 



    இந்த நிலையில், ஜாக்கி சானின் மகளின் உடலில் இருக்கும் மரபணுவை எடுத்து தனது உடலில் செலுத்துவதற்காக ஜாக்கி சானின் மகளை ஆண்ட்ரூ கடத்துகிறார். 

    கடைசியில் அந்த மரபணுவை ஆண்ட்ரூ தனது உடலில் செலுத்திக் கொண்டாரா? ஜாக்கி சான் அதனை தடுத்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா? தனது மகளுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜாக்கிசான் வழக்கம் போல தனது காமெடி கலந்த பேச்சு, ஆக்‌ஷன் என ரசிக்க வைத்திருக்கிறார். வயதாகிவிட்டதால் பெரிய அளவிலான சண்டைக் காட்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும், ரசிக்கும்படியான சண்டைக் காட்சிகளையே கொடுத்திருக்கிறார். ஷோ லோ, ஓயாங் நானா, காலன் முல்வி, டெஸ் ஹூப்ரிச் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    வில்லனிடம் இருந்து தனது மகளை காப்பாற்றும் வழக்கமான அப்பா கதையாக இருந்தாலும், திரைக்கதையில் மாற்றம் கொண்டுவந்து அதனை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார் லியோ ஷாங். 

    ஃபெய் பெங்கின் பின்னணி இசை படத்திற்கு பலம். டோனி செங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ப்ளீடிங் ஸ்டீல்' அடிதடி கலாட்டா.  

    கொரதலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு - கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் பரத் எனும் நான் படத்தின் விமர்சனம். #BharathEnnumNaan #MaheshBabu
    அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார். 

    இதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 



    இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவெடுக்க, அவர்களுடன் மகேஷ் பாபுவும் லண்டன் செல்கிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட மகேஷ் பாபு ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பெறுகிறார். இந்த நிலையில், தனது தந்தை இறந்த செய்தியறிந்து, பல வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபு மீண்டும் சென்னை திரும்புகிறார். அவர் வருவதற்கு முன்பே சரத்குமாருக்கு இறுதிச்சடங்குகள் முடித்து வைக்கப்படுகிறது. 

    முதலமைச்சராக இருந்த சரத்குமார் இறந்ததால், அவரது கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட, யார் முதல்வராவது என்பதில் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு மீண்டும் லண்டன் செல்ல தயாராகிறார். அவரை சென்னையிலேயே தங்க சொல்லி பிரகாஷ் ராஜ் வற்புறுத்துகிறார். மேலும் கட்சி உறுப்பிகர்களை சமாளிக்க, மகேஷ் பாபுவை வற்புறுத்தி முதல்வராக்குகிறார் பிரகாஷ் ராஜ். 



    முதல்வராக பொறுப்பேற்ற முதலே தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களையெடுக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நாயகி கியாரா அத்வானியை சந்திக்கும் மகேஷ் பாபுவுக்கு அவள் மீது காதல் வருகிறது. 

    மகேஷ் பாபு தான் சொல்வதை கேட்டு அனைத்தையும் செய்வார் என்று பிரகாஷ் ராஜ் நினைத்த நிலையில், எது சரியோ அதை மட்டுமே செய்யும் மகேஷ் பாபு மீது பிரகாஷ் ராஜுக்கு கோபம் வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் மகேஷ்பாவுக்கு எதிராக சதி செய்கின்றன. 



    கடைசியில், எதிர்க்கட்சிகளின் சதியை மகேஷ் பாபு சமாளித்தாரா? கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார்? தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா? முதல்வராக நீடித்தாரா? கியாரா அத்வானியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு இளம் முதல்வராக, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு, தனது காதலை வெளிப்படுத்துவதும், நாயகியுடன் பழக நினைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஏற்கனவே தோனி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கியாரா அத்வானி, இந்த படத்தின் மூலம் மேலும் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ஈர்க்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியுடன் கவர்கிறார். 



    சரத்குமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். 

    பி.ரவிசங்கர், அஜய், அனிஷ் குருவில்லா, பூசாணி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. 



    மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் முதல்வரானால் என்ன செய்வார், மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார், இந்த மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் ஒரு முதல்வராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் கொரதலா சிவா. அதேநேரத்தில் தமிழக அரசியலையும் ஆங்காங்கே கலாய்த்து, பாசம், காதல், சண்டை என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல்வன் படத்தின் புதிய வெர்ஷனை பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரவி கே.சந்திரன், எஸ்.திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `பரத் எனும் நான்' முதல்வன். #BharathEnnumNaan #MaheshBabu
    சஜோ சுந்தர் இயக்கத்தில் அஜய் ராஜ் - அக்ரிதி சிங், ரியா மிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் எக்ஸ் வீடியோஸ் படத்தின் விமர்சனம். #XVideos
    படத்தின் நாயகன் அஜய் ராஜ் பத்திரிகையாளர். ஆபாச வீடியோவை தடை செய்வது பற்றி மக்களின் கருத்துக்களை அறிந்து வரச் சொல்லி அவருக்கு உத்தரவு வருகிறது. அதன்படி மக்களிடம் நேரிடையாக சென்று அவர்களது கருத்துக்களை அறிந்து வரும் அஜய் ராஜிடம், அந்த இணையதளங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என ஒருவர் கேட்க, தான் அதை பார்த்ததில்லை என்று நாயகன் கூறுகிறார். முதலில் அந்த இணையதளங்களை பாருங்கள், அதனால் எத்தனை உயிர்பலி ஏற்படுகிறது என்பது உங்களுக்கு புரிய வரும் என்கிறார். 

    இதையடுத்து ஆபாச இணையதளங்களை பார்க்கும் அஜய் ராஜ், அதில் சமீபத்தில் திருமணமான தனது நண்பனுடைய மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதுகுறித்து தனது நண்பனிடம் கேட்கும் போது, தனது மனைவியை ஆபாசமாக நான் தான் வீடியோ எடுத்தேன் என்று அவரது நண்பன் கூறுகிறார். தனது மனைவியின் அனுமதியுடன், தனது ஆசைக்காக அந்த வீடியோவை பதிவு செய்ததாக நண்பர் கூறுகிறார். 

    தான் அந்த வீடியோவை பாதுகாப்பாக வைத்திருந்ததாக கூறும் அவரது நண்பர், அந்த வீடியோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை என்று கூறுகிறார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். தனது நண்பணுக்கு நடந்தது, இன்னும் நிறைய பேருக்கு நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அஜய் ராஜ் அந்த வீடியோ எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்பதை பற்றி ஆராய ஆரம்பிக்கிறார். 

    முதலில் அந்த வீடியோவை பதிவிடுவது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, ஐடி ஊழியரான தனது தம்பியே இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறான் என்பது தெரிந்து அவனிடம் இதுபற்றி கேட்கிறார். ஒரே ஒரு மெயில் ஐடி கிடைத்தால் போதும், அதன் மூலம் அவரது கணினியில் இருக்கும் அனைத்து தகவல்களையும் என்னால் எடுக்க முடியும். அப்படி எடுத்தது தான் அந்த வீடியோ. அது யார் வீடியோ என்று எனக்கு தெரியாது. அந்த வீடியோவை ஒரு நல்ல விலைக்கு வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதாக அஜய் ராஜின் தம்பி கூறுகிறார். 



    இதையடுத்து அந்த வீடியோவை வாங்குபவரை பற்றி விசாரிக்கிறார். அவர் மூலம் அந்த இணையதளத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் கிடைக்கிறது. ஆபாச இணையதளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களது பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிடுகின்றனர். அப்போது பெண் ஒருவர் இதுகுறித்து புகார் அளிக்கிறார்.  

    போலீசால் கூட முடக்க முடியாத அந்த இணையதளம் கடைசியில் முடக்கப்பட்டதா? சம்பந்தப்பட்ட 5 பேரை அஜய் ராஜ் கண்டுபிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    அஜய் ராஜ், அக்ரிதி சிங், சியா மிகாஅபினவ், அபிஷேக், அஜய் தத்தா, அபர்ணா நிஷாத், அர்ஜுன், நீலம் காந்தாரி, விஷ்வந்த் என படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். 

    பொதுவாக நாம், நமது போன், நமது லேப்டாப் என ரகசியங்களை பதிவு செய்து வைக்கிறோம். அவர்கள் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கும் தகவல்கள் அவர்கள் அறிமாமலேயே அவர்களிடமிருந்து திருடப்படுவது நமக்கு தெரியவில்லை. இந்த மாதிரியான இணையதளங்கள் சமூகத்திற்கே கேடு. இதன்மூலம் பல உயிர்கள் போகிறது. பெண்கள், தனது அந்தரங்களை வீடியோவாக பதிவு செய்வது ஆபத்தானது. பெண்கள் யாருடன் பழகுகிறோம் என்பதை தெரிந்து பழக வேண்டும். 

    காசுக்காக பெண்களுடன் பழகி, அவர்களை தவறாக வீடியோ எடுக்கும் சிலரும் இருக்கின்றனர் என சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர். ஆரம்பம் முதல் முடிவு வரை படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருந்தாலும், நாயகனின் நண்பனின் மனைவி சம்பந்தபட்ட ஆபாச காட்சி உள்ளிட்ட சில காட்சிகளின் நீளம் அதிகமாக இருக்கிறது. 
    இதுபோன்ற படங்களால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் படமாக இருந்தாலும், ஒரு சில ஆபாச காட்சிகளை ஒரு படமாக எடுப்பது போல எடுத்திருப்பது நெருடலை கொடுக்கிறது. பாடல், சண்டை என எதுவும் இல்லாமல் விறுவிறுப்புடன் கொடுத்திருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள். 

    ஜோகானின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. வின்சென்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `எக்ஸ் வீடியோஸ்' பார்க்க வேண்டியது. #XVideos

    மாகாபா ஆனந்த், செண்ட்ராயன், நிகிலா விமல் நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் விமர்சனம். #Panjumittai #PanjumittaiReview
    ஊரில் மாகாபா ஆனந்தும், செண்ட்ராயனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மாகாபா ஆனந்திற்கு அதே ஊரில் இருக்கும் நிகிலா விமலுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மனைவி நிகிலாவை சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார். போகும் போது செண்ட்ராயனுக்கு சொல்லாமல் சென்று விடுகிறார்.

    மாகாபா ஆனந்த் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டு, செண்ட்ராயனும் சென்னைக்கு வருகிறார். மாகாபா ஆனந்தின் மனைவி நிகிலாவிற்கு மஞ்சள் கலர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை மாகாபா ஆனந்திடம் சொல்லுகிறார். ஆனால், இவர்களை சந்திக்க செண்ட்ராயன் மஞ்சள் கலரில் துணி அணிந்துக் கொண்டு அவர்கள் வீட்டு வருகிறார்.

    இதைப்பார்த்து மாகாபா ஆனந்த் கடுப்பாகிறார். இவர்கள் வீட்டிலேயே தங்க செண்ட்ராயன் முயற்சிக்கிறார். ஆனால், மாகாபா அவரை வெளியே அனுப்பி விடுகிறார். பின்னர், தன் மனைவி மஞ்சள் கலர் பிடிக்கும் என்று என்னிடம் தான் சொன்னார். அவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமடைகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார்.



    இதனால் சில நாட்கள் மனைவியை பிரிகிறார். பின்னர், சமாதானம் ஆகி, எனக்கு மஞ்சள் கலர் இனிமேல் பிடிக்காது. புளு கலர்தான் பிடிக்கும் என்று மாகாபாவிடம் கூறுகிறார். மறுநாள் செண்டராயன் புளு கலரில் துணி அணிந்து வருகிறார்.

    இந்த விஷயம், செண்ட்ராயனுக்கு மீண்டும் எப்படி தெரிந்தது என்று இவர்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இனிமேல் எனக்கு கலரே பிடிக்காது என்று நிகிலா சொல்ல, கலரே இல்லாமல் வெள்ளை கலரை செண்ட்ராயன் அணிந்து வருகிறார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. 

    இதன் காரணமாக மாகாபா ஆனந்திற்கும், செண்ட்ராயனுக்கும் நட்பு முறிகிறது. இதன் பின், சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் செண்ட்ராயன். 



    இறுதியில் செண்ட்ராயன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மாகாபா ஆனந்த், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பா, மனைவியா என்று குழப்பத்திலும், கோபத்திலும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவராக நடித்திருக்கிறார். செண்ட்ராயனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலராக வருவதும் சரி, பிற்பாதில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சரி நடிப்பால் மனதை கவர்ந்திருக்கிறார். 

    நாயகியாக வரும் நிகிலா விமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். எப்போ பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டு, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனநல மருத்துவராக வரும் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மிளிர்கிறார்.



    குறும்படமாக வெளியான இந்த கதையை, தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன். படத்தின் கடைசி 20 நிமிடம் தவிர படத்தை மற்ற காட்சிகளை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார். மகேஷ் கே தேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பஞ்சுமிட்டாய்’ சுவை குறைவு.
    லால், ரேகா, நிஷாந்த், விஷாலி நடிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆண்டனி’ படத்தின் விமர்சனம். #Antony #AntonyReview
    கொடைக்கானலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் லால், தனது மனைவி ரேகாவிற்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அவருக்கு துணையாக இருக்க போலீஸ் பணியை விட்டு அவருடன் இருந்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் நிஷாந்த். இவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது.

    நிஷாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் நாயகி விஷாலியை காதலித்து வருகிறார். இந்த காதல் விஷயம் அம்மா ரேகாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு அப்பா லால் துணையாக நிற்கிறார்.

    இதனால், லால் துணையுடன் நிஷாந்தும் விஷாலியும் ரேகாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி காலையில், விஷாலியும், அப்பா லாலுவும் பதிவு திருமண அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். ஆனால், நிஷாந்த் சொன்ன நேரத்தில் வரவில்லை. நிஷாந்த் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருடன் சிக்கிக் கொள்கிறார்.



    நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வராததால், அவருக்கு என்ன ஆனது என்று லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்த் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா, யாராவது எதிரி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார். 

    இறுதியில், லால் தனது மகனை கண்டுபிடித்தாரா? மண்ணுக்குள் சிக்கி இருக்கும் நிஷாந்த் உயிருடன் வெளியில் வந்தாரா? நாயகியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், திறமையாக நடிக்க முயற்சித்திருக்கிறார். போலீசாக கம்பீரமாகவும், மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் இளைஞனாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் விஷாலி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.



    நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் லால், மகனுக்கு என்ன ஆனது? எப்படி கண்டுபிடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனை தேடுவதற்கு இவர் சிகரெட் பிடித்து இறந்து விடுவாரோ என்று திரையில் பார்க்கும் போது பயம் ஏற்படுகிறது. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் ரேகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கொடைக்கானலில் ஏற்படும் நிலச்சரிவை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் குட்டி குமார். நல்ல கதையை கையில் எடுத்தாலும் அதை படமாக்கிய விதம் சற்று சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணுக்குள் போராடும் நாயகன் மீது பரிதாபம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக படத்தின் முக்கிய காட்சி எந்தவித உணர்வையும் ஏற்படுத்தாதது பலவீனமாக அமைந்திருக்கிறது. 

    சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஒரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘ஆண்டனி’ சுமாரானவன்.
    முளையூர் ஏ.சொனய் இயக்கத்தில் புரூஸ் - ரசியா நடிப்பில் உருவாகி இருக்கும் `புதிய புரூஸ்லி' படத்தின் விமர்சனம். #PuthiyaBrucelee #Bruce
    நாயகன் புரூஸ் மலையோர கிராமம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். தனது ஊருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று அதனை சமாளிக்கும் ஒருவராக, அந்த ஊரை காத்து வருகிறார். அந்த ஊர் மக்கள் அனைவருமே, அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் புரூஸை அணுகுகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வாழ்ந்து வரும் குடிசையில் தீப்பிடித்து புரூஸின் அம்மா இறந்துவிடுகிறார். 

    அம்மாவை இழந்து தவிக்கும் புரூஸை அவரது மாமாவான தென்னவன் துரைசாமி கொஞ்ச நாள் தன்னுடன் இருக்கும்படி அழைத்துச் செல்கிறார். புரூஸ் தான் தங்களுக்கு காவல் தெய்வம் என்று அவரை சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படி அந்த ஊர் மக்கள் சொல்லி அனுப்புகின்றனர். 

    மதுரையில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருக்கும் தென்னவன் துரைசாமி, தான் வாங்கிய இடம் ஒன்றை தனது நண்பனிடம் விற்க முயற்சி செய்கிறார். ஆனால் மற்றொரு தொழிலதிபர் ஒருவரும் அந்த இடத்தை அடைய நினைக்கிறார். 



    அதற்காக தென்னவன் துரைசாமிக்கு அவர் தொந்தரவு கொடுக்கிறார். இதற்கிடையே நாயகன் புரூஸ்க்கு தனது மாமா மகளான நாயகி ரசியா மீது காதல் வருகிறது. ஆனால் ரசியாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது வீட்டில் பேசி முடிவு செய்கின்றனர். இதற்கிடையே அந்த தொழிலதிபர் ஆட்கள் பலரை அனுப்பி இவர்களை மிரட்டுகிறார். 

    கடைசியில், தனது மாமாவின் பிரச்சனையை புரூஸ் தீர்த்து வைத்தாரா? தனது மாமா மகளை திருமணம் செய்தாரா? தனது ஊருக்கு திரும்பிப் போனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    படத்தின் நாயகன் புரூஸ், புரூஸ்லி போன்ற தோற்றம் மட்டுமில்லாமல், சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். அவரது நடை, பார்வை என ஒவ்வொரு அசைவிலும் புரூஸ்லியை நினைவுபடுத்துகிறார். நாயகி ரசியா, தென்னவன் துரைசாமி, சுரேஷ் நரங் என மற்ற துணை கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    புரூஸ்லியை நினைவுபடுத்தும்படியாக சண்டையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் முளையூர் ஏ.சொனய். குறைவான வசனங்களுடன் பார்வை, நடையிலேயே நாயகனின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தின் துவக்கத்தில் புரூஸ்லியை நினைவுபடுத்தியிருப்பது சிறப்பு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் புரூஸ்லி பற்றிய படங்கள் வருவது அவரது நீங்கா புகழை காட்டுகிறது.

    சவுந்தர்யனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் சிவசங்கர் புரூஸ்லியை நினைவு படுத்துகிறார். 

    மொத்தத்தில் `புதிய புரூஸ்லி' வரவேற்க்கத்தக்கது. #PuthiyaBrucelee #Bruce #Raziya
    எம்.நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன் - தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாகி இருக்கும் `காலக்கூத்து' படத்தின் விமர்சனம். #Kaalakkoothu
    பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார். 

    ஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம் தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.



    மற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் திருமணம் செய்துக் கொள்கிறார். கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

    இறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா? கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.

    மற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    முதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது போல் தோன்றுகிறது.



    மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக வேகம் எடுத்திருக்கிறது. பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘காலக்கூத்து’ ஆடியிருக்கலாம். #Kaalakkoothu #KaalakkoothuReview #Prasanna #Kalayarasan

    ×