search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brucelee"

    முளையூர் ஏ.சொனய் இயக்கத்தில் புரூஸ் - ரசியா நடிப்பில் உருவாகி இருக்கும் `புதிய புரூஸ்லி' படத்தின் விமர்சனம். #PuthiyaBrucelee #Bruce
    நாயகன் புரூஸ் மலையோர கிராமம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். தனது ஊருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று அதனை சமாளிக்கும் ஒருவராக, அந்த ஊரை காத்து வருகிறார். அந்த ஊர் மக்கள் அனைவருமே, அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் புரூஸை அணுகுகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வாழ்ந்து வரும் குடிசையில் தீப்பிடித்து புரூஸின் அம்மா இறந்துவிடுகிறார். 

    அம்மாவை இழந்து தவிக்கும் புரூஸை அவரது மாமாவான தென்னவன் துரைசாமி கொஞ்ச நாள் தன்னுடன் இருக்கும்படி அழைத்துச் செல்கிறார். புரூஸ் தான் தங்களுக்கு காவல் தெய்வம் என்று அவரை சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படி அந்த ஊர் மக்கள் சொல்லி அனுப்புகின்றனர். 

    மதுரையில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருக்கும் தென்னவன் துரைசாமி, தான் வாங்கிய இடம் ஒன்றை தனது நண்பனிடம் விற்க முயற்சி செய்கிறார். ஆனால் மற்றொரு தொழிலதிபர் ஒருவரும் அந்த இடத்தை அடைய நினைக்கிறார். 



    அதற்காக தென்னவன் துரைசாமிக்கு அவர் தொந்தரவு கொடுக்கிறார். இதற்கிடையே நாயகன் புரூஸ்க்கு தனது மாமா மகளான நாயகி ரசியா மீது காதல் வருகிறது. ஆனால் ரசியாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது வீட்டில் பேசி முடிவு செய்கின்றனர். இதற்கிடையே அந்த தொழிலதிபர் ஆட்கள் பலரை அனுப்பி இவர்களை மிரட்டுகிறார். 

    கடைசியில், தனது மாமாவின் பிரச்சனையை புரூஸ் தீர்த்து வைத்தாரா? தனது மாமா மகளை திருமணம் செய்தாரா? தனது ஊருக்கு திரும்பிப் போனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    படத்தின் நாயகன் புரூஸ், புரூஸ்லி போன்ற தோற்றம் மட்டுமில்லாமல், சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். அவரது நடை, பார்வை என ஒவ்வொரு அசைவிலும் புரூஸ்லியை நினைவுபடுத்துகிறார். நாயகி ரசியா, தென்னவன் துரைசாமி, சுரேஷ் நரங் என மற்ற துணை கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    புரூஸ்லியை நினைவுபடுத்தும்படியாக சண்டையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் முளையூர் ஏ.சொனய். குறைவான வசனங்களுடன் பார்வை, நடையிலேயே நாயகனின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தின் துவக்கத்தில் புரூஸ்லியை நினைவுபடுத்தியிருப்பது சிறப்பு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் புரூஸ்லி பற்றிய படங்கள் வருவது அவரது நீங்கா புகழை காட்டுகிறது.

    சவுந்தர்யனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் சிவசங்கர் புரூஸ்லியை நினைவு படுத்துகிறார். 

    மொத்தத்தில் `புதிய புரூஸ்லி' வரவேற்க்கத்தக்கது. #PuthiyaBrucelee #Bruce #Raziya
    ×