என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் யோகிபாபு பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. யோகிபாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தன் குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.


    இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இறைவன்'.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


    இறைவன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' திரைப்படம் 26-ஆம் தேதி நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், 'லியோ' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து 'லியோ' படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்து நடந்த இரண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் 'லியோ'வை ரசித்து கொண்டிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் பாடலுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கேம் சேஞ்சர் போஸ்டர்

    இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு - விஜய் காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


    இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் 'லியோ' படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஸ்கிரிப்ட் கேட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு வெங்கட்பிரபு கண்டீசன் ஒன்று போட்டுள்ளார். அதாவது, ஏ.ஜி.எஸ். நிறுவனம், "இன்று விஜய தசமி அந்த ஸ்கிரிப்டை கொஞ்சம் அனுப்புனா அதையும் பூஜ போட்டரலாம்" என்று வெங்கட் பிரபுவை Tag செய்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.


    இதற்கு ரிப்ளை அளித்த வெங்கட் பிரபு, "இது ஒரு நல்ல கேள்வி. சரியான கேள்வி. என் பிரச்சனை என்னனா.. கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியன் பண்ணுங்க.. ஆபிஸ்ல எங்க இருக்குனு சொல்றேன்.. ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி.. முதல் கட்ட படப்பிடிப்பே 15 நாட்கள் ஆச்சே.. இனிய விஜயதசமி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வா'வென

    வாய் பிளந்து

    வரவேற்று

    வாய் நனைய முத்தமிட்டு

    இறுதிவரை இருக்க விரும்பி

    இறுக அணைத்தாலும்…

    திட்டமிட்டபடி

    சட்டென விட்டு

    வி ல கி

    சென்றுவிடும்

    சென்ற வினாடிகள் !!!

    தும்பைப் பூவின் மீது

    தூய்மையான

    பனித்துளி படர்ந்து

    தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட

    மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்

    பூப்பதுமுண்டு!

    இசையை விட தூய்மையானது எது?

    சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்

    வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.

    இம்மான் …. இமான்!

    அபார ஞானமும்

    அயராத உழைப்புமாய்

    அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.

    மைனா'வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.

    இனி…

    இனிமை

    இசையாய்…

    Ok!

    Tittle ?

    அறிவிப்போம் விரைவில்!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘80-ஸ் பில்டப்’.
    • இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    80-ஸ் பில்டப் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 80-ஸ் கெட்டப்பில் சந்தானம் இருக்கும் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள படக்குழு 'நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா'என்று குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'டச்சிங் டச்சிங்' (Touching Touching) பாடல் வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் இந்திராவதி சவுகான் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
    • தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    'லியோ' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்த படம் குறித்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்க துவங்கி விட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 24) முதல் தளபதி 68 தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மேலும் 2024-ம் ஆண்டு தங்களுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். தெரிவித்துள்ளது. இந்த வீடியோவிலேயே படக்குழு மற்றும் நடிகர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.

    தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



    ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் இப்படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்க துர்கா பிரசாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக பரப்புரை செயல்திட்டத்தினை பிரசாந்த் மருத்துமனை நடத்தியது.
    • போட்டியில் பங்கேற்றவர்களையும், விருதுகளை வென்றவர்களையும் விக்ரம் பிரபு பாராட்டினார்.

    சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் மருத்துவமனை "இளம் இதயங்களை காப்போம்" ('Save Young Hearts') 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. மாரடைப்புகள், இதய பிரச்சனைகள், வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம் ஆண்டில் 'Save Young Hearts' பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த் மருத்துவமனை நடத்தியது.

    இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர். நடிகர் விக்ரம் பிரபு இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு 'இளம் இதயங்களை காப்போம்' என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, வயதானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்பது இல்லை தப்பான பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும். 'Save Young Hearts' என்ற விஷயம் எல்லாரையும் சென்றடைய செய்த பிரசாந்த் மருத்துவமனை மற்று குழுவிற்கு என் வாழ்த்துகள் என்று பேசினார்.

    புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை உங்கள் படங்களில் தவிப்பீர்களா என்ற கேள்விக்கு, படத்தில் எங்கே எல்லாம் சொல்ல முடியுமோ அங்கே எல்லாம் சொல்லுவோம். சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள் தான் பார்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை 60 நிமிடங்களில் சொன்னால் பார்க்கிறார்கள். அதே இரண்டு மணிநேரம் படத்தில் சொன்னால் பார்க்கமாட்டார்கள் என்று கூறினார்.

    மேலும், பத்திரிகையாளர் டாணாக்காரன் படத்தில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் பிரபு, "டாணாக்காரன் நான் செத்து பிழைத்த படம்" என்று பேசினார்.

    ×