என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
    • சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

    2012-ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


    சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'லியோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் "வேர் ஆர் யூ'' பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.



    ஒட்னிகா-அனிருத்

    இது குறித்து ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இதை பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ படத்தின் பாடல் குறித்து எனது மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி. இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்கு நேரம் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பாகியுள்ளது. 


    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தாய்லாந்தில் நடைபெறும் இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சூர்யாவின் காட்சிகள் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

    • நடிகை அமலா பால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
    • இவர் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.


    அமலா பால் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரம்ம முகூர்த்தம்'.
    • இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார்.

    இயக்குனர் டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரம்ம முகூர்த்தம்'. விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ளார். மேலும், மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


    கே.வி. மீடியா (KV Media) தயாரிப்பாளர் பி. செந்தில்நாதன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார். ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் கலவரங்களும் அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்கள் என காமெடியுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    பிரம்ம முகூர்த்தம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருண்ராஜா காமராஜ் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இந்த வெப் தொடரில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், லேபில் என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர். இதே கேள்வியை வட சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள், "லேபில் என்பது ஒரு கெத்து. இந்த இடத்தில் யார் பெரிய ஆளோ அவரே லேபில். வட சென்னையை பொறுத்தவரை யார் லேபில் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்" என்று கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் நலன் குமாரசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து, கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'கார்த்தி 26' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் நலன் குமாரசாமி தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்.
    • என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மன்சூர் அலி கானும் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த நிலையில், லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் மன்சூர் அலி கான் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில்,

    "500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்!

    ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!

    லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல...

    அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! ..

    இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்!

    500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க...

    சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு.......

    வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த்-இன் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 33 ஆண்டுகள் கழித்து தனது வழிகாட்டியுடன் நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "33 ஆண்டுகளுக்கு பிறகு, எனது வழிகாட்டி ஸ்ரீ அமிதாப் பச்சனுடன், லைக்கா தயாரிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன்.
    • காவல் துறை அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "ஜெயிலர்". இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் விநாயகன்.

    இந்த நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மதுபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    காவல் அதிகாரி தாக்கப்பட்டதால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நடிகர் விநாயகன் காவல் நிலைய உதவியை நாடினார் என்று காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சந்திரன் தெரிவித்து உள்ளார். 

    நடிகர் விநாயகன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நயன்தாரா 75 படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
    • இந்த படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். நயன்தாரா 75 எனும் தற்காலிக பெயரில் உருவான இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

    அதன்படி நயன்தாராவின் 75-வது படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
    • லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

    தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என நீண்ட விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடினர்.

     

    இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் டீம் மாதிரி 11 பேர் இருந்தா நல்லாருக்கும் போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 




    ×