என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை ரேகா நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'.
    • இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொண்டுள்ளார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.



    இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை ரேகா பேசியதாவது, ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம்பெறும் என்று நம்புகிறேன். 


    செல்போனில் இயக்குனர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குனருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்.. பின்னர் நான் அவனை "டேய் இங்க வாடா" என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகிவிட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது. நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை. 


    என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிரூபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்சியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்.. நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்… உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச் 234' படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி நவம்பர் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


    இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள படக்குழுவினரை தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'பயணி’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
    • இவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சுற்றுவட்டார பாதையில் உள்ள குபேரலிங்க கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    • நடிகர் சதீஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்.

    இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது.


    கான்ஜூரிங் கண்ணப்பன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • அறிமுக இயக்குனர் நிக்கேஷ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், சூர்யா 43 போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    ரெபெல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போராட்டக் களத்தின் நடுவில் ஜி.வி.பிரகாஷ் பயத்துடன் நிற்பது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள படக்குழு 'அதிகார மையங்களை அதிர வைப்பதே புரட்சி' என்று குறிப்பிட்டுள்ளது.


    • நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச் 234' படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

    இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காட்சி நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்... கொண்டாட்டம் தொடங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், 'லியோ' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், 'லியோ' திரைப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய்- பார்த்திபன்

    இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பார்த்திபன் (விஜய்) கதாபாத்திரத்தின் புகைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் அவரை tag செய்து பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், 'Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'.
    • 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

    ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள், படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


    படத்தைப் பற்றி இயக்குனர் ஆர். பிரேம்நாத் கூறியதாவது, அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது.


    'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்த படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும், மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன் என்று கூறினார்.

    • ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
    • 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.

    முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.



    பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.


    தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

    • சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.
    • சுதா கொங்கராவின் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.


    இந்நிலையில், இப்படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில், படத்தின் தலைப்பில் பாதியை மறைந்து  'புறநானூறு' என தெரியும்படி வீடியோ வெளியாகியுள்ளது.மேலும்,  ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. சூர்யா தோன்றும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
    • இவரது இசை நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை காவல் துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதித்து நிகழ்ச்சி நடந்த அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட டிக்கெட்டுகள் விற்கக்கூடாது எனவும் டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.


    20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 5 ஆயிரம் எண்ணிக்கையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை முறையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

    இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு சர்ச்சையான நிலையில் அதுபோன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×