மஹத்- மீனாட்சி நடிக்கும் 'காதலே காதலே'

இயக்குனர் ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'.'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
மஹத்- மீனாட்சி நடிக்கும் 'காதலே காதலே'
Published on

ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள், படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குனர் ஆர். பிரேம்நாத் கூறியதாவது, அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது.

'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்த படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும், மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com