'லியோ' படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
'லியோ' படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

லியோ போஸ்டர்

இந்நிலையில், 'லியோ' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com