நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா- வைரலாகும் சந்தானம் போஸ்டர்

இயக்குனர் கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘80-ஸ் பில்டப்’.இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா- வைரலாகும் சந்தானம் போஸ்டர்
Published on

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

80-ஸ் பில்டப் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 80-ஸ் கெட்டப்பில் சந்தானம் இருக்கும் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள படக்குழு 'நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா'என்று குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com