என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.
    • சினிமாவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுருதிஹாசன் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

    கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். சினிமாவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுருதிஹாசன் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். சினிமா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்ந்து கருத்துக்களை பதிவிடுவார்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகையை நண்பருடன் சேர்ந்து கொண்டாடி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது பெயரை உடலில் வரைந்து உள்ள டாட்டூ தெரியும்படி அவர் புகைப்படம் வெளியிட்டு கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் வருமாறு:-

    இந்த நேரத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து வெளியே வர விரும்புகிறேன். இந்த முறை நான் எழுந்து நின்று கத்துகிறேன். நான் விஷயங்களை என் வழியில் செய்வேன், இது என் வழி அல்லது நெடுஞ்சாலை என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.
    • திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

    80 கால கட்டத்தில் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதா. மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    கார்த்திகா 'கோ' என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கார்த்திகா போதிய பட வாய்ப்புகள் வராததால் தந்தையுடன் பிசினசில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கார்த்திகா வெளியிட்டு உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டு உள்ளது. உன்னை விரும்பியது மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

    இதையொட்டி கார்த்திகா-ரோகித் திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் இன்று பிற்பகல் நடந்தது. விழாவில் நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


    நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

    திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

    • மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திரிஷா குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

    தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    இதுகுறித்த நடிகை திரிஷா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

    உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

    திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ., எம்.பி., மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது.

    திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா..

    நன்றி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
    • நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் முன்பு முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த உலக கோப்பையை பாரீசில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் நடிகை மீனா. இன்று எல்லா வேலைகளையும் ரத்து செய்து விட்டு நடிகை மீனா தனது வீட்டில் டி.வி. முன்பு அமர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ரொம்ப பக்.... பக்... என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

    இந்தியா வெல்லும் என்ற முழு நம்பிக்கையோடு நான் உலக கோப்பையை அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி வெற்றி பெற்றதும் அந்த கோப்பையை வாங்குவதையும் இணைத்து நினைத்தது நடந்தது என்று வலைத்தளத்தில் பதிவிட ஒரு பட காட்சியையும் தயார் செய்து வைத்துள்ளேன். நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லியோ படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
    • லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ.

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் "நா ரெடி" என்ற பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

    அதன்படி, "நா ரெடி தான்" பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    • அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர் வினோத் தாமஸ்.
    • காரின் ஏசியில் இருந்து ஏதேனும் விஷவாயு கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவின் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதனை பூங்காவுக்கு வந்த பலரும் பார்த்தனர்.

    ஆனால் அந்த நபர் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்தபோது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக இருந்தது பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது. அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர் வினோத் தாமஸ். இவர் ஒருமுறை வந்து பார்த்தா, நெத்தோலி ஒரு செரிய மீன்ல்ல, ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. காரின் ஏசியில் இருந்து ஏதேனும் விஷவாயு கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகாத வினோத் தாமசின் உடல் தற்போது பாம்பாடி தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபோது திரிஷா குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்த நடிகை திரிஷா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். 

    மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
    • லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் "நா ரெடி" என்ற பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'.
    • இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது.

    நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.


    இவ்விழாவில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது,  விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குனர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தை பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்த படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி என்று பேசினார்.


    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சின்ன படமாக தான் இருந்தது. சின்ன படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப்பற்றி பேச வேண்டும் என்றாலும், ஒரு போன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்த படம் டிரைலரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பேசினார்.

    • வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகள்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகள்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


    இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, "என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


    படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'-ம் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும்.


    சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், என்ன சாருக்கு கல்யாணமா? என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் என புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24-ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று பேசினார்.

    • இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'.
    • கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வந்தது.

    நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்தொடரில் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்த வெப்தொடர் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த வெப்தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, "மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா? சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை பிரைமில் ஒகே செய்தார்கள். மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார். இதை எடுப்பது மிகக்கடினம். பிராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது.


    3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி" என்று பேசினார்.




    • தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்.
    • இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார்.

    இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.


    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, "முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினி திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். என்ன ஒரு அழகான நாள். மாதவன் உங்களை மிஸ் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    ×