என் மலர்
சினிமா செய்திகள்
- தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
முன்னதாக பல காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் நேற்று ரிலீசானது.
உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் இது தொடர்பாக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.
இது குறித்து நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புரிந்துகொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றிகள். இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
- விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
விடாமுயற்சி அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படம் ஆகும். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக விடாமுயற்சி போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் நிகில் மேனின் தோற்றம் இடம்பெற்று இருக்கிறது.

விடாமுயற்சி படம் நீண்ட காலம் படமாக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்த அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இதில், தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களை விட ராயன் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ராயன் திரைப்படத்தன் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற 23 ஆம் தேதி அமோன் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே.சூர்யா, ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
விடாமுயற்சி படத்துக்கு அடுத்ததாக நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருகிறார். வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அஜித்துக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, அஜித்துடன் `குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் அஜித்தை எஸ்.ஜே.சூர்யா திடீரென சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் Happiest movement after so many years with my Mentor # AK The Great என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- பிரேமலு புகழ் மமிதா பைஜூ இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகியது, படத்தின் டிரைலர் இம்மாதம்17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக அமையவுள்ளது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியது.
படத்தின் அடுத்த அப்டேட் ஆக பிரேமலு புகழ் மமிதா பைஜூ இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் லுக் டெஸ்ட் பணிகள் தற்பொழுது நடந்துக் கொண்டு இருப்பதாகவும், அது முடிவடைந்த பின் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த விருந்து வழங்கும் விழாவில் எச்.வினோத் அவரே தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். நீண்ட நாட்கள் தகவலாகவும், வதந்தியாகவும் சுற்றி கொண்டிருந்த செய்தி இப்பொழுது உறுதியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டு இருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
- கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் 6 மணிக்கு ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை. இதனையடுத்து, கோட் படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். ஆனால் ட்ரைலரின் சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன ட்ரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம்"பதிவிட்டுள்ளார்.
ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் கோட் படத்தின் புதிய போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில், கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
- ரசிகர்கள் செல்பி எடுக்க போட்டி போட்டனர்.
திருப்பதி:
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
அலிப்பிரி நடப்பாதை வழியாக தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர் மகன் கவுதம், மகள் சிதாரா ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து வந்தார்.
நடைபாதையில் வந்த பக்தர்கள் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க போட்டி போட்டனர். இதனால் அலிபிரி நடைபாதையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் நடைபாதைக்கு வந்து மகேஷ்பாபு குடும்பத்தினரை பத்திரமாக திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர்.
மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இன்று காலை மகேஷ்பாபு குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவரை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.
- சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது.
இயக்குநர் சேரன் தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டர் வராதா? என்று நெட்டிசன்கள் இன்று மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர்.
ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனாலும் சிறப்பு போஸ்டர் மட்டும் தவறாமல் விடும். இந்த சிறப்பு போஸ்டர்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு போஸ்டரை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
- இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
நடிகர் அஜித் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அப்டேட் விடாமல் இருந்து வந்த விடாமுயற்சி படக்குழு தற்போது அடிக்கடி அப்டேட் கொடுத்து வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
- கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.
இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






