என் மலர்
சினிமா செய்திகள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்த நடிகை லாலுவை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.
பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் மீடூ.
திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் செக்ஸ் புகார்களாக கடந்த ஆண்டு மீடூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. ஆனால் இந்தி, மலையாளம் ஆகிய திரையுலகங்களைப் போல் இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம் நீளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் அதுபற்றிய பேச்சுக்களும் குறைந்தன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஷாலு தற்போது செக்ஸ் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாலு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’சினிமாவில் நீங்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளானீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ’நானும் இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதை எப்படி கையாளவேண்டும் என்று எனக்குத் தெரியும்.
ஒருவேளை நான் புகார் அளித்து இருந்தால் அதனால் என்ன பயன்? எதிர்தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தார்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் ஆடியோ உரிமை கோடிக்கணக்கில் விலை நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.
மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்...’ பாடலை மட்டும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் கதாநாயகன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் என்பதால் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ உரிமை வாங்கப்பட்டது.

அடுத்து விஜய், ஏ.ஆர்.ரகுமான், அட்லி என இதே கூட்டணியில் ‘விஜய் 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதற்காக ஐந்துகோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
’விஜய் 63’ படத்துக்கான ஆடியோ உரிமையை விற்று அந்த பணத்தை அப்படியே ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்பளமாக கொடுத்துவிட தீர்மானித்து ஆடியோ உரிமைக்கு ரூ.5 கோடி விலையாக நிர்ணயித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. இருந்தாலும் இந்த உரிமையை வாங்க போட்டி நடக்கிறது.
தற்போது விஜய் படத்துக்கான பாடல் ரெக்கார்டிங் தொடங்கி இருக்கிறது.
நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நடிகர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.சுரேஷ் பல்வேறு சமயங்களில் விஷால் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அவர் விஷாலுக்கு எதிராக களமிறங்குவார் என்று வதந்திகள் பரவின. இதை ஆர்.கே.சுரேஷ் மறுத்துள்ளார்.
அதேசமயம் விஷாலுக்கு எதிராக தங்கள் அணியின் சார்பில் ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஐசரி கணேஷ் பொதுச்செயலாளர் பதவிக்கும், நடிகர் உதயா துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இந்த அணி சார்பில் போட்டியிட மேலும் சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நீர்வளத்தை பாதுகாக்க அதிகளவில் மரங்களை நடவேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் பேசினார்.
திருவண்ணாமலை:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை அருணை இயக்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடும் விழா திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரி முதல் குஜராத் வரை உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இந்தியாவின் கொடையாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையை இனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. அதனை முழுமையாக பராமரிக்கவில்லை.

தமிழகத்தில் அதிகளவில் மரங்களை நட்டு நீர்வளத்தையும், பசுமையையும் பாதுகாக்க வேண்டும்.
நாம் நடும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரை போல இருக்கும். நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு ஆக்சிஜன் தேவை. எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.பெ.கிரி எம்.எல்.ஏ., அருணை தூய்மை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை அருணை இயக்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடும் விழா திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரி முதல் குஜராத் வரை உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இந்தியாவின் கொடையாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையை இனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. அதனை முழுமையாக பராமரிக்கவில்லை.
தீ விபத்து, மரங்களை வெட்டுவதன் மூலம் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

நாம் நடும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரை போல இருக்கும். நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு ஆக்சிஜன் தேவை. எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.பெ.கிரி எம்.எல்.ஏ., அருணை தூய்மை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுபவர்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக 23.06.2019 அன்று நடைபெறும் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,
தலைவர் - நாசர், துணை தலைவர்கள்- பூச்சிமுருகன், கருணாஸ். பொது செயலாளர்- விஷால், பொருளாளர்- கார்த்தி.

செயற்குழு உறுப்பினர்கள்:
1.ஸ்ரீனிவாச ரெட்டி (எ) ஸ்ரீமன். 2.பசுபதி. 3.அமர்நாத் (எ) ரமணா. 4.நந்தா. 5.'தளபதி' தினேஷ் 6.சோனியா போஸ். 7.குட்டி பத்மினி. 8.கோவை சரளா 9.பிரேம் குமார். 10.ராஜேஷ். 11.மனோபாலா. 12.ஜெரால்டு மில்டன் 13.காளிமுத்து. 14.ரத்னாப்பா. 15.M.A.பிரகாஷ். 16.அஜய் ரத்தினம். 17.பிரசன்னா. 18.ஜூனியர் பாலய்யா. 19.ஹேம சந்திரன் 20.குஷ்பூ. 21.லதா. 22.நிதின் சத்தியா. 23.'பருத்திவீரன்' சரவணன் 24.ஆதி. 25.வாசுதேவன். 26.காந்தி காரைக்குடி
ஆகியோர் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுகிறார்கள்.
யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மபிரபு' படத்தின் முன்னோட்டம்.
யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் P. ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.

வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.
நிசார் சபி இயக்கத்தில் ரகுமான், ஹவிஷ், ரெஜினா, நந்திதா, அனிஷா, அதிதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘7’ திரைப்படத்தின் விமர்சனம்.
ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமிஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் நந்திதா. இதை கேட்கும் ரகுமான் அதேபோல் இன்னும் ஒரு பெண் ஹவிஷை தன் கணவர் என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் கொடுத்துள்ளதை கூறுகிறார். அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் புகார் கொடுக்கிறார்.
ஹவிஷை போலீஸ் தேடுகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் சிக்கும் ஹவிஷ் இந்த 3 பெண்களையுமே யார் என்றே தெரியாது என்கிறார். இதற்கிடையே ஹவிஷின் பெயர் கார்த்திக் அல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லும் பைத்தியத்தை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பழியும் ஹவிஷ் மீது விழுகிறது. உண்மையில் ஹவிஷ் யார்? அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா? அவர் கார்த்திக்கா? கிருஷ்ணமூர்த்தியா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

டைட்டிலுக்கு முன்பே ஒரு குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த காட்சியில் தொடங்கும் சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி முழுக்கவே திருப்பங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் நிசார் சபி.
கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி என 2 மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஹவிஷ். தமிழுக்கு நல்ல அறிமுகம். காதல் காட்சிகளிலும் தன் மீது விழுந்த பழிகளுக்கு காரணம் தெரியாமல் தவிக்கும்போதும் கவர்கிறார். நந்திதா, அனிஷா, அதிதி, திரிதா சவுத்ரி ஆகிய நால்வருமே போட்டி போட்டு கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள். இவர்களது உண்மையான பின்னணி தெரிய வரும்போது ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள்.
ரெஜினா கசண்ட்ராவுக்கு ஆச்சர்யமான வேடம். சைக்கோ வில்லி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். விரும்பியவனை அடைவதற்காக அவர் செய்யும் செயல்கள் பதற வைக்கின்றன.

ரகுமானுக்கு வழக்கமான போலீஸ் வேடம்தான். அவர் வேலை நேரத்தில் குடிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
ரமேஷ் வர்மாவின் கதை, திரைக்கதை ஒரு நாவலை படிப்பது போல் விறுவிறுப்பாக இருக்கிறது. அதை சுவாரசியமான படமாக நிசார் சபி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு மர்மமாக அவிழும் காட்சிகள் திகில் கூட்டுகின்றன.
நிசாரின் ஒளிப்பதிவும் சைத்தன் பரத்வாஜின் இசையும் படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன. கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். தெலுங்கு நாயகன் என்பதும் பிற மொழி நடிகர்களும் ஆங்காங்கே வருவதும் படத்தின் பலவீனம்.
மொத்தத்தில் ‘7’ சஸ்பென்ஸ் திரில்லர்.
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் படங்களுக்கு இசையமைத்து வரும் ரான் ஈத்தன் யோகன் இசையமைப்பாளரை பாராட்டியுள்ளார்.
சமீபகாலமாக திரில்லர் வகை படங்கள் அதிகரித்துள்ளன. இந்த வகை படங்களுக்கு இசை மிகவும் முக்கியம். அந்த வகையில் மாயா, நரகாசூரன், இறவாக்காலம், கேம் ஓவர், ஒப்பம் என்று வரிசையாக திரில்லர் படங்களின் பின்னணி இசைக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இந்த படங்களின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோகன் திரில்லர் படங்களுக்கு இசையமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். தாத்தா சேவியர், அப்பா ராஜன் இருவரும் முன்னணி இசையமைப்பாளர்களிடம் இசைக்குழுவில் வயலின், கிடார் வாசித்தவர்கள். லண்டனில் கல்லூரி படிப்பு. முதல் படமான மாயாவுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரில்லர் படங்களே அதிகம் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட படங்களுக்குள் சிக்க விரும்பவில்லை. எல்லா வகை படங்களும் இசையமைக்க விரும்புகிறேன்.

மாயா படப்பிடிப்பில் நயன்தாராவை சந்தித்தேன். அவர் என் இசையை கேட்டு வியந்தார். இப்போது கேம் ஓவர் படத்தை இந்தியில் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். அவர் படத்தை பார்த்துவிட்டு என் இசை உள்பட படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் பாராட்டினார். ஹாலிவுட் படம் அளவுக்கு இருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சவுந்தரராஜா, தனது குழுவினருடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சவுந்தரராஜா ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மக்களுக்கான போராட்டமான ஜல்லிக்கட்டில் இவர் பெரிதும் பங்காற்றினார்.
தற்போது பீச்சை சுத்தம் செய்யும் சவாலை ஏற்று, நம்ம சென்னை டாக்டர் ராஜலட்சுமி குழுவினரும், நடிகர் சவுந்தரராஜாவின் மண்ணை நேசிப்போம், மக்களை நேசிப்போம் என்ற அறக்கட்டளை குழுவினரும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் பீச்சை சுத்தம் செய்திருக்கிறார்கள்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர். 100 கிலோவிற்கு மேலான குப்பைகளை இவர்கள் அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து சுத்தம் செய்திருக்கிறார்கள்.
நாம் இருக்கும் இடத்தை வேறொருவரை எதிர்பார்க்காமல், நாமாகவே சுத்தம் செய்தால் வீடும், நாடும் வளம் பெறும் என்று நடிகர் சவுந்தரராஜா இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சீனாவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிறது நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்திருந்த மாம் திரைப்படம் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

இந்தியப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு உருவாகியுள்ள சூழலில் படத்தைக் கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டனர். 38,500 திரைகளில் திரையிடப்பட்ட அந்த திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ள நிலையில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் படத்தை சீனாவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து பரபரப்பாக இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிந்து வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சசிகுமார் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக மாரி 2, தடம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் நடிக்க இருக்கிறார்.
சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர் இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்தார்.

இதனை அறிந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமாரும் வித்யா பிரதீப்பின் திறமையை கண்டு வியந்து போக, சசிகுமாருக்கு வில்லியாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.






