என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழில் முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கண்ணாவே நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 3-ந் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
காலம் பேசாது ஆனால் அனைத்திற்கும் பதில் சொல்லும் என சாலமன் பாப்பையா எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை அதேபோல் புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை. இதனை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். மேலும் காலம் எப்போதும் பேசாது ஆனால் அது அனைத்துக்கும் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், ரஜினி முருகன், மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்துக்கு, ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’ சூட்டப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
இந்நிலையில், எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பட தலைப்பை பயன்படுத்த யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடெக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது.
கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது.
இப்படம் ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடும் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க நடிகைகள் சிலர் சென்றிருக்கிறார்கள்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தொடரில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும்.
#IndvsEng here we come Birmingham....so much fun bumping into @trishtrashers#airportdiaries muahhhhhh #bindupic.twitter.com/uNEfMKXfAf
— varalaxmi sarathkumar (@varusarath) June 29, 2019
இந்தியா அடுத்ததாக நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து இழக்கும்.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது ரஜினி படத்தின் வில்லனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. அவ்வப்போது பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பாலிவுட்டில் கமோசி என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாசுதின் சித்திக் நடிக்கும் ‘போலே சுடியான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இயக்கும் இந்தப்படத்தில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து தமன்னா கூறும்போது, ‘இந்தப் படக்கதை நன்றாக இருக்கிறது. இதில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பாலிவுட் படம் ஒன்றில் மல்டிலேயர் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமானது’ என்றார்.
'கடாரம் கொண்டான்' அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லிங்குசாமி 'ஆனந்தம்' படத்தின் மூலம் 2001-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி போன்ற தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார்.
இதையடுத்து இவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தன. இதேபோல் கடந்த 2008-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படம், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், லிங்குசாமி-விக்ரம் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' அடுத்த மாதம் வெளியாக உள்ளது. விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதன்பின்னர் லிங்குசாமியின் படத்தில் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.

என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.”
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ நடிக்கும் குறும்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கிரிக்கெட் மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக இவர் பாடிய சாம்பியன் பாடல் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இதேபோல் இவர் தமிழில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் 2-ம் பாகத்தில் "ஏன்டா" என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில், அவர் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு கோவையிலும், வெஸ்ட் இண்டீசின் டிரினிடட் அண்டு டோபாக்கோவிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும்`கடாரம் கொண்டான்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து 'ஆடை' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 19-ந் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






