என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ஸ்ரீரெட்டி சந்தானத்திற்காக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1). இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அக்ரஹாரத்து பெண் ஆப்பாயில் சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ஏ1 பட டீசரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொரட்டி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சினேகன், சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய பாடலாசிரியர் சினேகன், ‘நிறைய பேர்களுக்கு தொரட்டிப் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை.
இந்தப்படம் தான் எனக்கு சேரன், அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பர்க்கக் கூட முடியவில்லை.

யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது.
இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப்படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் படைப்பாக மாற்ற வேண்டும் தொரட்டியைப் போல" என்றார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். எடிட்டிங் ராஜாமுகமது.
விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் நேற்று வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பிகில்’. இதில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியிருந்தார். பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலானது.

தற்போது இந்த பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை வெளியான பாடல் வரி வீடியோவில் சிங்கப்பெண்ணே பாடல், 17 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு...’ என்ற பாடல் 23 மணி நேரத்திலும், விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்’ என்ற பாடல் 25 மணி நேரத்திலும் 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
சமீபத்தில் தீ முகம் தான் என்ற பாடலை வெளியிட்டார்கள். தற்போது ‘அகலாதே...’ என்ற பாடலை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். மேலும் இது ரசிகர்களை மயக்கும் பாடலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#Agalaathey the mesmerising number from @nerkondapaarvai#AjithKumar and @vidya_balan song releases tomorrow at 6 PM. Watch out this combo @ZeeStudiosInt#HVinoth@vidya_balan#BayViewProjects@SureshChandraa@ShraddhaSrinath@thisisysr@nirav_dop@dhilipaction@RangarajPandeyRpic.twitter.com/M3IAwjfEJu
— Boney Kapoor (@BoneyKapoor) July 24, 2019
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
தெலுங்கில் ஜோடி படத்திலும், கன்னடத்தில் கோத்ரா படத்திலும் நடிக்கிறார். திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கதாநாயகனாக, கதாநாயகியாக வலம் வரவே விருப்பம் கொள்ளும் நிலையில் கதாநாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி அல்ல நடிகை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:- ’கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தையை பிரதிபலிக்கவில்லை. கதாநாயகன் என்றால் பலரை அடித்து நொறுக்க வேண்டும்.
கதாநாயகி என்றால் அழகாகவும், கிளாமராகவும் இருக்க வேண்டும். நான் அப்படி அல்ல. கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது. ஆனால், இப்போது அதை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் நான் நடிகை தான்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா', `காஞ்சனா 2', காஞ்சனா 3 ஆகிய பாகங்களாக இயக்கி நடித்து வெற்றி கண்டார். காஞ்சனா 3வது பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனேவிற்கு அவரது ரசிகர்கள் லுவ் ராஜன் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட அவர், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
மும்பையில் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி வாசலில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் இருவரும் சமீபத்தில் தென்பட்டனர். அந்த படம் இணையத்தில் வெளியானது. அதை பார்த்தவுடன் தீபிகா ரசிகர்கள் பரபரப்பானார்கள்.
உடனே இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி லுவ் ராஜன் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என அவர் மீது ‘மீடூ’ புகார்கள் உள்ளன.

‘மீடூ’ இயக்கத்துக்கு ஆதரவானவர் தீபிகா படுகோனே. பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்.
அப்படிப்பட்ட தீபிகா ஏற்கனவே ‘மீடூ’ புகாரில் சிக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி எதிர்ப்புகளை பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தீபிகா படுகோனே, இயக்குனர் படத்தில் நடிக்காமல் விலகுவாரா? அல்லது ரசிகர்கள் எதிர்ப்பை மீறி நடிப்பாரா என்பதுபற்றி இதுவரை தீபிகா தரப்பில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது தனது மகள் நிகிதாவை காப்பான் படத்தில் பாடகியாக அறிமுகமாக்கி இருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் ‘விண்ணில் விண்மீன்’ என்ற பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா பாடியுள்ளார்.

இசை வெளியீட்டு விழா மேடையில் இந்தப் பாடலை நிகிதா பாடவும் செய்தார். அவர் பாடி முடித்த பின், அவரது அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், என் அப்பா இசையமைத்தது எல்லாமே சிறந்த பாடல்கள் தான். மோசமான பாடல் என்று எதுவும் கிடையாது என்று பதிலளித்தார்.
காப்பான் படத்தில் சூர்யாவுடன், மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல்பிரீத் சிங் மன்மதடு-2 தெலுங்கு படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பலரும் அவரை கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்து ரகுல்பிரீத் சிங் கூறியதாவது:-
“சினிமாவில் கதாபாத்திரங்களை டைரக்டர்கள் உருவாக்கி அதில் எங்களை நடிக்க வைக்கின்றனர். படங்களில் வருவது மாதிரி நிஜ வாழ்க்கையில் நாங்கள் இருப்பது இல்லை. ஆனால் சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களை சர்ச்சையாக்குகிறார்கள்.

மன்மதடு-2 தெலுங்கு படத்தில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நடித்ததற்கு எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. நிஜ வாழ்க்கையில் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. வாரத்தில் ஒரு நாளை பிடித்த உணவு வகைகளை சாப்பிடுவதற்கு ஒதுக்குகிறார்கள். அதுகூட எனது வாழ்க்கையில் கிடையாது. என்னை பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். நான் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன். உடற்பயிற்சிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறேன் என்று அவர்கள் அறிவார்கள். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கதாநாயகன் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளன.
உடனே அவர்கள் புகைப்பிடிக்க ஊக்குவிக்கிறார்கள் என்று அர்த்தமா? சினிமாவில் செய்வதை நிஜ வாழ்க்கையில் நாங்கள் கடைபிடிப்பது இல்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை பெற்றோர்கள் புரிந்துள்ளனர். அதுபோதும்.”
இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலின் விமர்சனம்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. இதில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே பாடல் எப்போது வெளியாகும் என்று படக்குழுவினரை கேட்டு சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்.
உலகளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சிங்கப்பெண்ணே பாடல் இரவு 10 மணியளவில் படக்குழுவினர் வெளியிட்டனர். பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே பாடல் பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் இனமே பெண்களை வணங்கும். பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கும். உலகத்தில் இருக்கும் எல்லாம் வலிகளும் பெண்களின் பிரசவ வலிக்கு முன் சாதாரணம். அன்னை, தங்கை, மனைவி என்று பன்முகம் கொண்ட பெண் எதற்கும் பயப்படக்கூடாது. பெண்கள் சாதாரணமானவர்கள் இல்லை. பல திறமைகள் கொண்ட அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து துணிந்து செல்ல வேண்டும் என்று பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.
விவேக் இந்த வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. ‘எழு எழு எழு...’ என்று ரகுமான் பாடும் போது நமக்குள் ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. பெண்களுக்கான கீதமாக இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் எழுச்சி பாடலாக அமைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த பாடலை படக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.
ஏ 1 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்ட நடிகர் சந்தானம், அவர்கள் இல்லன்னா நான் இல்லை என்று பேசியிருக்கிறார்.
சர்க்கிள் பாக்ஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ஏ1. இப்படம் வரும் ஜூலை 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இப்படத்தின் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
நடிகர் சந்தானம் பேசும்போது, ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ம் ஆண்டு டீவில அறிமுகமான நான் இப்போ வரைக்கும் ஓரளவு தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கிறார்.

இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும்.
என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்" என்றார்.
பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகின் சீனியர் நடிகைகளான சிம்ரனும், திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். அதிரடி ஆக்சன் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘சுகர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்ரனும், திரிஷாவும் சகோதரிகளாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.

சரவணன் ராமசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






