என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சம்பளத்தை பிச்சை எடுப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே லிபர்டி எ கால் டு ஸ்பை என்கிற ஆலிவுட் படத்தில் உளவாளியாக நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். உளவாளியாக இருக்கும் இந்திய இளவரசியாக நடிக்க நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே. இதற்கு முன்பும் ராதிகா ஆப்தே ஒரு ஆலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆலிவுட் படம் பற்றி ராதிகா பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:- ‘படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் ஹாலிவுட்டில் மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள், மேலும் சரியான நேரத்திற்கு சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் அங்கு பிச்சை எடுக்கத் தேவையில்லை’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் என ’பட்டாஸ்’ பட நடிகை தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.
தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்த மெஹ்ரின் பிர்சோடா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.

தனுஷ் ஜோடியாக நடித்து வரும் மெஹ்ரின் பிர்சோடா கூறும்போது:- எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயற்சித்து வருகிறேன். அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். எனக்கு வரும் கேரக்டரை வைத்து கிளாமராக நடிப்பதை முடிவு செய்வேன். விஜய், அஜித் உள்பட பல ஹீரோக்களின் நடிப்பை ரசிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பேருந்தில் பெண்களை உரசினேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கூறியது சர்ச்சை ஆன நிலையில், மன்னிப்பு கேட்ட அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல் ஹாசனின் உரையாடல் அமையும்.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். ஒரு டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது. இதில் சேரன் மீது தவறு இல்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசு பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். மேலும் பேசிய அவர், ‘பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டும் என்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு’ என்று கமல்ஹாசன் கூற, போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் தனது கையை உயர்த்தி ஆமோதித்தார்.
கமல்ஹாசன் உடனே ‘பாருங்கள்... சரவணன் கூட அதை கண்டித்திருப்பார் போல’ என்று கூறினார். ஆனால் சரவணனோ ‘நான் கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே சென்று இருக்கிறேன்’ என்று பொதுவெளியில் கூறினார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியானார்கள். சுதாரித்த கமல்ஹாசன், ‘சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார்’ என்று கூறினார்.
அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டினர். இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தின் மூலம் ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருக்கும் அவர், ‘பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒருவர் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள்.
A Tamil channel aired a man proudly proclaiming he used the Public Bus Transport system to molest/grope women - to cheers from the audience.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 27, 2019
And this is a joke. To the audience. To the women clapping. To the molester.
Damn. https://t.co/kaL7PMDw4u
பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பார்வையாளர்களும், பெண்களும் கைதட்டுகின்றனர்” என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சின்மயியின் கருத்துக்கு ஆதரவான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவின. சிலர் கமல்ஹாசனையும் சேர்த்தே கண்டித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்ட சரவணன், மக்கள் மத்தியில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறியதாவது: கல்லூரி பருவத்தில் பல மாணவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்திருக்கிறேன். நான் செய்த தவறை யாரும் செய்யக் கூடாது என்பதை தெளிவுப்படுத்தவே இதனை சொல்ல முயன்றேன், சில காரணங்களால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனது. நான் பேசியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என்று சரவணன் தெரிவித்தார்.
நடிகர் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த வார இறுதியில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த பொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம், அவரது சினிமா வாழ்க்கையிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதை தொடர்ந்து, அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.
சித்தார்த் நடித்துள்ள ”சிவப்பு மஞ்சள் பச்சை” படம் ரிலீசாக உள்ள நிலையில், அவர் அடுத்ததாக ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசி இயக்கத்தில் சித்தார்த்-ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ”சிவப்பு மஞ்சள் பச்சை” படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அக்கா-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சித்தார்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் சித்தார்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
'டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வந்த 'ஹீரோ' கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அடுத்ததாக 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனந்த் 'டியர் காம்ரேட்' படத்தைப்போல் இப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அண்ணாமலை இயக்கத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. பைக் ரேஸ் தொடர்பான கதை என்பதால் இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பிற்காக பெருமளவு பொருட்செலவில் படமாக்கப்பட்ட காட்சிகள் திருப்திகரமாக அமையாததால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முனுசாமி இயக்கத்தில் உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் உருவாகி வரும் `ரீல்' படத்தின் முன்னோட்டம்.
டி.என்.சூரஜ் எழுத, முனுசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ரீல்'. இந்த படத்தில் உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். கலக்கப்போவது யாரு சரத் காமெடி கலந்து குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கோவை, மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.

சந்தோஷ் சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான மல்லிகா ஷெராவத் நடிகர்கள் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத், சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தியிலும் அதிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும் ஏற்கனவே புகார்கள் கிளம்பின.
இப்போது மல்லிகா ஷெராவத்தும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “நான் கதாநாயகர்களுடன் நெருங்கி பழகுவது இல்லை. தள்ளியே இருப்பேன். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு நான் இணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

அதற்கு உடன்படாததால் நிறைய படங்களில் இருந்து நீக்கப்பட்டேன். இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு வரும்படி நேரடியாக என்னை அழைக்காவிட்டாலும் அவர்கள் எதிர்பார்ப்பை புரிந்து நடக்காததால் வெளியேற்றினர். நான் துணிச்சலான பெண். என்னை படுக்கைக்கு அழைத்தால் பிரச்சினை வரும் என்று அவர்களுக்கு தெரியும்.
அதனால் நேரடியாக அணுகவில்லை. ஆனாலும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்காத காரணத்தால் படங்களில் இருந்து வெளியேற்றினர். மீ டூ இயக்கம் பெண்களுக்கு அவசியமானது. பல பெண்கள் மீ டூவில் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் ஓரளவு பாதுகாப்பு கிடைத்து உள்ளது.” இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.
நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர், ஏ.இருதயராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விக்ரம். இவரின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர், புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் பற்றி டைரக்டர் இருதயராஜ் கூறும்போது, “பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர். இதற்கு ‘எப்போ கல்யாணம்’ படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது” என்றார்.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 8-ம்தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது AK 60 என்று தற்காலிமாக பெயர் வைத்துள்ளார்கள்.
A big thank you to the entire unit of #NerkondaPaarvai for working towards August 8th release. Happy to announce our next AK60 with #AjithKumar#HVinoth and @ZeeStudios will start with Pooja end August 2019.@SureshChandraa@DoneChannel1
— Boney Kapoor (@BoneyKapoor) July 29, 2019
ஆக்ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து உருவாகும் என்றும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்க படவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பார்க்காத துரோகமும் இல்ல, எதிரிகளும் இல்ல என்று அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து டிரெண்டாக்கினார்கள். இது விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்தது. மேலும் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் பார்க்காத துரோகமும் இல்ல...
— Sanjeev (@SanjeeveVenkat) July 29, 2019
விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேண் என்ன நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay :)) #LongLiveVIJAY 😇 pic.twitter.com/spzmX9ba69
இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay #LongLiveVIJAY’ என்று பதிவு செய்திருக்கிறார்.






