என் மலர்
சினிமா செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிந்து 37 நாட்கள் ஆகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. மொத்தம் 1,604 பேர் ஓட்டுபோட்டனர். தபால் வாக்கு சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களில் இருந்த ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களிக்க இயலவில்லை.
தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்ததால் ஓட்டுகளை எண்ணுவதை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதனால் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்து 37 நாட்களாகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.

இதனால் நடிகர் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சம்பள பிரச்சினை குறித்து நடிகர், நடிகைகளால் சங்கத்தில் புகார் அளிக்க முடியவில்லை என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார். நடிகர் சங்க கட்டிட வேலையிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டு பெட்டிகளை வைத்துள்ள வங்கிக்கு ஏற்கனவே 15 நாட்களுக்கு ரூ.50 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓட்டுகளை எண்ணுவது பற்றிய முடிவை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுகள் எண்ணப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக பொதுக்குழு கூட்டப்படும். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் விழாவில் அவர் வெட்டிய கேக்கின் விலை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல்வேறு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து அங்கு முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, தனது 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் கோலாகலமாக கொண்டாடினார். அவர் கணவருடன் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அவரது கணவர் நிக், பிறந்தநாளுக்கு வழங்கிய கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 5 அடுக்குகள் கொண்ட அந்த கேக்கில் சிவப்பு நிற பிரத்யேக கிரீமும், மேலே தங்க துகள்கள் தூவப்பட்டும் இருந்தது.
பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் புகை பிடிக்கும் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று ரசிகர்கள் விளாசினார்கள்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, தனது 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் கோலாகலமாக கொண்டாடினார். அவர் கணவருடன் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அவரது கணவர் நிக், பிறந்தநாளுக்கு வழங்கிய கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 5 அடுக்குகள் கொண்ட அந்த கேக்கில் சிவப்பு நிற பிரத்யேக கிரீமும், மேலே தங்க துகள்கள் தூவப்பட்டும் இருந்தது.
பிரபல நடிகைக்கு அவரது கணவர் தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல போஜ்புரி நடிகை அலினா ஷேக். இவர் 2016-ல் முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் தன்னை முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- “எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு 8 மணிக்கு திரும்பிவிடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. எனவே கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தேன். அதன்பிறகு அவருக்கு எதுவும் ஆகவில்லை, நலமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

ஆனாலும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. 10 நாட்களுக்கு பிறகு ரூ.100 முத்திரைத்தாளில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவாகரத்தை என்னால் ஏற்க முடியாது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.
என்னை கணவர் வீட்டில் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்கள். 6 மாத கர்ப்பிணியாக இருந்ததில் இருந்து இந்த கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். அப்போதும் போலீசில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் எனது கணவர் தடுத்துவிட்டார்.” இவ்வாறு அலினா ஷேக் கூறியுள்ளார்.
‘தொரட்டி’ பட நாயகி எங்கே சென்றார்? என்று பதில் அளிக்குமாறு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தொரட்டி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்ற சத்தியகலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார்.
படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, வருகிற (ஆகஸ்டு) 2-ந்தேதி திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்தபோது, கதாநாயகி சத்தியகலா மட்டும் வரவில்லை. அவரை அவரது தந்தையும், தந்தையின் 2-வது மனைவியும் சட்டவிரோதமாக பிடித்து எங்கோ அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்டம், மகாலிங்கபுரம் போலீசில் கடந்த 25-ந்தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்கக்கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘சத்தியகலா தற்போது எங்கே உள்ளார்?’ என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விஜய், அஜித் உள்பட முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களை வெளியிட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து பங்கு பெற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும்போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிபடுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ராகவாலாரன்ஸ் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. சேலம் ஏரியாவில் வியாபாரம் ஆகாத, வெளியிட இயலாத சிறு முதலீட்டு திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் நலன் கருதி சேலம் திரைப்பட வினியோகஸ்தர்கள் கவுன்சிலே பொறுப்பேற்று 3 சதவீத சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக்கொண்டு ரிலீஸ் செய்து தருவதாக தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது".
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் புதிய படத்தில் தடம் பட நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
"பியார் பிரேமா காதல்" மற்றும் "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் "தனுசு ராசி நேயர்களே" படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான "விக்கி டோனர்" படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார்.

தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை தன்யா இதற்குமுன் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.
மிகவும் பிரபலமான சைமா குறும்பட போட்டியில் இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் சிறந்த இசையமைப்பாளராக விருது பெற்றுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.
பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார்.

ஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையிலும் இருந்தது என்று பாராட்டி இருக்கிறார்கள். தற்போது சைமா விருது பெற்றது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார்டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமெசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2, தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படக்குழு தற்போது முழு வீச்சில் மீண்டும் இந்தியன் 2 பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி பகுதியில் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனை தொடர்ந்து சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ், பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜம்வால், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்கள் பங்களிக்கின்றனர். முதன்முறையாக அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார். தற்போது சில காரணங்களால் ரவி வர்மனுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவரும், கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி, தற்போது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இவர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோரனும் ஆவார். வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கு நீண்ட நாட்களாக பெற்றோர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்கள். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை போட்டு பதிவு செய்திருக்கிறார்.
🤙🤙🤙 pic.twitter.com/64J28ia3dq
— PREMGI (@Premgiamaren) July 30, 2019
பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என்றும், திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் ரசிகர்கள் கமண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் ஆச்சரியத்துடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், படப்பிடிப்பு முடிந்தவுடன், இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம் பெறுகின்றன.
இந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ரஜினியின் தோற்றத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார்.

தற்போது மும்பையில் கடைசி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
மழை, பனி உள்ளிட்ட தட்பவெப்ப சூழலை கணக்கிட்டு, அதற்கேற்ப செப்டம்பரில் ரஜினி இமயமலைக்கு செல்ல உள்ளார் என்கிறார்கள்.
தெலுங்கில் மிகவும் பிரபலமாகி, தற்போது தமிழ் படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ராஷ்மிகா தமிழுக்கு வந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தமிழில் நடிப்பது பற்றி ராஷ்மிகா கூறியதாவது: ’கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் நான் தான் அதை ஒப்புக் கொள்வது இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் ஈகோ உள்ளது. அதனால் நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது.

ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் என் நிலையில் இருந்து யோசித்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பது புரியும். நான் வெறும் பொம்மை இல்லை. நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் சில ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடியம். நான் எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன் என்பதை தாண்டி நான் நடிக்கும் படங்களை நினைத்து பெருமைப்பட விரும்புகிறேன்.
கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேனே என்று பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை. ஒரு படத்திற்கு ஹீரோ போன்றே ஹீரோயினும் முக்கியமே. ஹீரோவும், ஹீரோயினும் ஒரே மாதிரி வேலை செய்தாலும் ஹீரோயின்கள் வெகுகாலம் நீடிப்பது இல்லை. நடிகை ஒருவர் 15 ஆண்டு காலம் திரைத்துறையில் நீடித்தாலும் அது ஒரே மாதிரி இருக்காது’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மோதிக் கொண்டதற்கு நடிகை கஸ்தூரி, நல்ல காரியங்களில் கவனம் செலுத்துங்கள் விஜய், அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் பாடல் கடந்த 23-ந்தேதி அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாடல் 4 நாட்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்தது.
இதை தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் அடுத்த 2 நாட்களில் வெளியிடப்பட்டது. கணவன்- மனைவி உறவை வெளிப்படுத்தும் இந்த பாடல் இரண்டே நாட்களில் விஜய் படத்தின் சாதனையை முறியடித்தது.

இதனால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது. இந்த மோதல் 2 நடிகர்களையும் நாகரீகம் இல்லாமல் விமர்சிக்கும் அளவுக்கு இந்திய அளவில் டிரெண்டானது.
இந்தநிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில் ‘நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தளபதி விஜய், தல அஜித் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்’ என கூறியுள்ளார்.






