என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை கஸ்தூரி
    X
    நடிகை கஸ்தூரி

    விஜய், அஜித் ரசிகர்களுக்கு கஸ்தூரி அறிவுரை

    சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மோதிக் கொண்டதற்கு நடிகை கஸ்தூரி, நல்ல காரியங்களில் கவனம் செலுத்துங்கள் விஜய், அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
    விஜய் நடிக்கும் பிகில் படத்தின் பாடல் கடந்த 23-ந்தேதி அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாடல் 4 நாட்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்தது.

    இதை தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் அடுத்த 2 நாட்களில் வெளியிடப்பட்டது. கணவன்- மனைவி உறவை வெளிப்படுத்தும் இந்த பாடல் இரண்டே நாட்களில் விஜய் படத்தின் சாதனையை முறியடித்தது.

    கஸ்தூரி ட்விட்

    இதனால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது. இந்த மோதல் 2 நடிகர்களையும் நாகரீகம் இல்லாமல் விமர்சிக்கும் அளவுக்கு இந்திய அளவில் டிரெண்டானது.

    இந்தநிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில் ‘நெகடிவ் வி‌ஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தளபதி விஜய், தல அஜித் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்’ என கூறியுள்ளார்.
    Next Story
    ×