என் மலர்
சினிமா செய்திகள்
கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன் என்று நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.
நான் இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகையாக எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது. ஒரு கதையை கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீ நடிக்க போகிறாய் என்று சொன்னால் அந்த கதை முழுவதையும் படிப்பேன். அப்போதே கதாபாத்திரமாக மாறி விடுவேன். பின்னர் அதோடு ஒன்றி போய் நடிப்பேன்.

எனது நடிப்பை யார் பாராட்டினாலும் அதற்கு காரணம் நான் தான் என்று மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு படம் எப்படி தயாராக நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது. திரையில் மட்டும் என்னைப் போன்ற நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்கிறார்கள். எங்களுக்கு பின்னால் உழைப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது இல்லை. எல்லா பெருமையும் எங்களுக்குத்தான் வந்து சேர்கிறது. எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நான் மறக்காமல் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்.’’ என்று கூறியுள்ளார்.
அசுரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் என்று நடிகர் தனுஷை தயாரிப்பாளர் தாணு பாராட்டியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் திரையுலக வாழ்க்கையில் அவருடைய மிகப்பெரிய வெற்றிப் படமாக 'அசுரன்' தான் வசூல் ரீதியில் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக 'அசுரன்' தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’இந்த படத்தின் மையப்புள்ளியை இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் விவரிக்கும்போதே, படம் பெரிய வெற்றியடையும் என உறுதியாக நம்பினேன். அதற்கு கட்டியம் கூறுவது மாதிரி இந்த வெற்றியும் அமைந்துள்ளது. நாங்கள் அனைத்து வகைகளிலும் போற்றி, பாராட்டி மகிழ்கிறோம். வெற்றிமாறனுடைய முழு எண்ணத்துக்கு, உழைப்புக்கு கட்டியம் கூறுவது மாதிரி தனுஷ் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் படத்துக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தார். சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் கிடைத்துள்ளார் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம். சிவாஜி சார் இருந்திருந்தால் இந்த பிள்ளையை பார்த்து உச்சி முகர்ந்திருப்பார்" என்று தெரிவித்தார் தாணு. மேலும், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வசூல்தான் தனுஷ் படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. அதை 'அசுரன்' முறியடிக்குமா என்ற கேள்விக்கு "ஆமாம். உண்மை தான்" என்று பதிலளித்தார்.
அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நானா படேகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இப்படத்திற்கு ’ஜன கன மன’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் நானா படேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரமேஷ், நசாத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிழை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிழை. காக்கா முட்டை புகழ் ரமேஷ், அப்பா பட புகழ் நசாத், மைம் கோபி, சார்லி, கோகுல், தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டர்னிங் பாய்ண்ட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ஆர் தாமோதரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பைசல் இசையமைத்துள்ளார்.

பாக்கி ஒளிப்பதிவை கவனிக்க, ராம் கோபி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பள்ளிக்கூடம் தொடர்பான கதையை இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. அதோடு, அப்பா – மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும் இப்படம் வலியுறுத்துகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் 12ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களம் இறங்கி இருக்கிறது.
இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த போட்டி, அக்டோபர் 19,-20ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல், ஷூட்டிங் ஸ்பாட் படங்கள், படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான கால்பந்து ஸ்டேடியம் போன்றவை இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

தற்போது இந்த சோகம் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படத்துக்கும் தொடர்கிறது. படப்பிடிப்பு தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, மேள தாளத்துக்கு கும்பலுடன் நடனமாடுவது, நடந்து செல்வது என இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறது.
ரோஜா படத்தில் ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி, மதுபாலா 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட்ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அவர் நடித்து வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தலைவி படத்தில் மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாலிவுட் படம் ஒன்றிலும் இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனது பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் என்பது சாதி பெயர் அல்ல குடும்ப பெயர் என அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள நடிகைகளில் சிலர் தங்கள் பெயருடன் சாதி பெயரையும் இணைத்தே வைத்திருக்கின்றனர். அவர்களில் பூ பார்வதி மேனன் தனது பெயரில் சாதி இணைப்பு தேவையில்லை என்று கூறி மேனன் என்று கூறுவதை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் அமிதாப் பச்சனின் பெயர் பற்றி சிலர் சர்ச்சை எழுப்பினார்கள். சமூக அக்கறையோடு எல்லா விஷயங்களையும் பேசும் நீங்கள் (அமிதாப்பச்சன்) பெயருக்கு பின்னால் பச்சன் என்று சாதி பெயரை வைத்துக் கொள்ளலாமா என்று விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப்பச்சன் பங்கேற்றார். அப்போது பச்சன் பெயர் இணைப்பு குறித்து கூறினார். அவர் கூறும்போது, 'பச்சன் என்பது எனது குடும்ப பெயர். எந்த மதத்தையும், சாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது என் தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது கூட மதம் பற்றி என்னிடம் கேட்பார்கள். அவர்களிடம் நான் இந்தியன் என்று கூறுவேன். நான் எந்த மததையும் சேர்ந்தவன் இல்லை' என்றார்.
பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக தயாராகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகப் பிரமாதமாக வந்துள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் தனது முதல் காதல் அனுபவம் குறித்து சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதல் காதல் அனுபவங்கள் குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:- “எனக்கு புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகாரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை விரும்பினாள். அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக்காக காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பனை காதலிப்பதாக சொன்னேன். அவனோ என்னை பார்த்து நீ ரொம்ப சின்ன பொண்ணு என்று கூறினான்.

எனக்கு இதயமே வெடித்த மாதிரி ஆகி விட்டது. ஒரு வாய்ப்பு கொடு நான் வளர்ந்த பிறகு வருகிறேன் என்றேன். அடிக்கடி செல்போனில் தகவலும் அனுப்பினேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் சில நாட்கள் சுற்றி விட்டு பிரிந்து விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பது கூட அப்போது சரியாக தெரியவில்லை. அவனுக்கு முத்தம் கொடுக்க நினைத்து எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன். வயது குறைவு என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது.”
இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
ஆடை படத்தை தொடர்ந்து மீண்டும் அது போன்ற ஒரு சர்ச்சைக் கதையில் நடிகை அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடை படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு ஆபாச படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது.
இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது.

இந்நிலையில் இந்த வெப்சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர். இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
நடிகை தமன்னா அளித்த பேட்டியில், அவரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன், ஆனால், இன்னும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-
தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பது ஏன்?
தேவி, தேவி 2 படங்களில் நடித்த பின்னர் மீண்டும் பேய் படத்தில் நடிப்பதில் நானும் விரும்பவில்லை. ஆனால் இது தெலுங்கில் அனந்த பிரம்மோ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். கண்ணே கலைமானே, சைரா என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன்.
பெட்ரோமாக்ஸ் வசனம் பற்றி தெரியுமா?
அந்த வசனம் இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் காமெடி பற்றி ரோகின் விளக்கினார். கவுண்டமணி சாரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். அது இன்னும் நடக்கவில்லை.

முதல்முறையாக முதன்மை வேடத்தில் நடித்த அனுபவம்?
இந்த படம் என்னுடைய படம் அல்ல. தமன்னா நடிக்கும் என்ற போஸ்டரில் போடுவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணிபுரிந்த டெக்னிஷியன்ஸ் அனைவருமே ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர். எனவே அனைவருடைய படம் தான் இது.
இனி முதன்மை வேடங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா?
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். இப்போது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம். அதிலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன்.






