என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனிக்கு, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்துள்ளதாம்.
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ரவி தேஜா நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இதில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாகவும், சமுத்திரகனி அவரை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதி மற்றும் தாதாவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடித்தார். அதனை சமுத்திரகனி இயக்கினார்.
தனது கணவர் விராட் கோலியின் உடைகளை திருடி அணிவேன் என நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். ஜீரோ படத்தின் தோல்வியை அடுத்து தற்போது லால் கப்டான், ஹவுஸ்புல் 4 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையில் அடிக்கடி தனது கணவர் விராட் கோலியுடன் சுற்றுலா சென்று வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா சர்மா, "எனது கணவர் விராட் கோலியின் உடைகளை நான் திருடி அணிகிறேன், உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் டி-சர்ட் போன்ற துணி வகைகளை அதிகமாக திருடுகிறேன். அதோடு ஒரு சில நேரங்களில் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்து அணிந்துகொள்வேன். இப்படி நான் அவரது உடைகளை திருடி அணியும்போது விராட் மகிழ்ச்சி அடைகிறார்” என கூறினார்.
சித் ஸ்ரீராம் இசையில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார்.
பிரபல படகர் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வருகிற நவம்பர் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த வேதிகா, தற்போது தி பாடி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயர். பிணவறையில் இருந்து ஒரு சடலம் திடீரென்று காணாமல் போகிறது.

அதை தேடும் பணியில் போலீசார் ஈடுபடும்போது, பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. எல் க்யூர்போ என்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வேதிகா, இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ந் தேதி படம் ரிலீசாகிறது.
சல்மான் கானின் ராதே படத்தில் தனது கதாபாத்திரம் தொடர்பாக பரவி வந்த வதந்திக்கு நடிகர் பரத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் பிரபுதேவா தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கானை வைத்து ராதே என்ற ஹிந்தி படத்தினை இயக்குகிறார். அந்த படத்தில் தமிழ் நடிகர் பரத் நடிக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அதை உறுதி செய்யும் விதத்தில், ராதே படப்பிடிப்பு தளத்தில் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பரத் தான் இந்த படத்தில் வில்லன் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மைஇல்லை என கூறியுள்ளார். “அந்த படத்தில் வில்லனாக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். நான் போலீசாக நடிக்கிறேன். அது சல்மான் சார் அருகில் பயணிக்கும் கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார். ராதே படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2020 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராதே திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
பிகில் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த சவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்துள்ளார்.
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சவுந்தர்ராஜா. சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார். பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சவுந்தர்ராஜாவின் நற்பணிகளை புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக அளித்ததாக சவுந்தர்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இந்த வருடத்தின் முக்கிய பரிசு இதுதான் என்றும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ள அவர் நடிகர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து அமலாபால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அமலாபாலுக்கு மைனா, பசங்க, வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் ஆகியவை முக்கிய படங்களாக அமைந்தன. ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவரது துணிச்சலுக்கு சிலர் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அமலாபாலை தேர்வு செய்து இருந்தனர். கதாபாத்திரத்துக்கான தோற்றத்துக்கு அவருக்கு மேக்கப் போட்டு பார்த்தபோது மணிரத்னத்துக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அமலாபாலை நீக்கி விட்டதாக தகவல் பரவி உள்ளது.

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததையும் நீக்கத்துக்கு காரணமாக சொல்கின்றனர். பொன்னியின் செல்வன் சரித்திர கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அமலாபாலுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்தும் நீக்கி விட்டனர். தயாரிப்பு நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு உடன்படாததால் அவரை நீக்கியதாக கூறப்பட்டது. அமலாபாலோ தயாரிப்பாளரின் ஆணாதிக்க மனப்பான்மையால், தான் வெளியேற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார். நிர்வாணமாக நடித்ததே படங்களில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று பேசுகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பட்டு துறை மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். சங்கரதாஸ் சுவாமிகளின் 97-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் இன்று நடந்தது.
இதில் பங்கேற்க புதுவைக்கு வந்த ஐசரி கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது. இந்த படம் திட்டமிட்டபடி வரும் 29-ந்தேதி வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல நடிகரின் சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர் லேசான காயமடைந்தார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராஜசேகர். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் பிலிம்சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இன்று அதிகாலை காரில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது காரின் டயர் திடீரென்று கழன்றது. இதனால் கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் ராஜசேகர் காயம் அடைந்தார்.

காரில் இருந்து அவரை போலீசார், பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது மனைவியும், நடிகையுமான ஜீவிதா கூறும்போது, “கார் விபத்தில் தனது கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

காரில் இருந்து அவரை போலீசார், பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது மனைவியும், நடிகையுமான ஜீவிதா கூறும்போது, “கார் விபத்தில் தனது கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
விமான நிலையத்தில் நடிகை அரைகுறை ஆடையில் காதலருடன் சில்மிஷம் செய்ததால், அவரை அதிகாரிகள் வெளியே அனுப்பினார்கள்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகை செரா நேதன். இவர் ஒரு எழுத்தாளர். சமீபத்தில் மெல்பர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்தில் தன் காதலருடன் காத்துக் கொண்டு இருந்தார். அப்போது காலியாக இருந்த இருக்கையில் அமராமல் தனது காதலரின் மடியில் அமர்ந்து கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார்.
அவர் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தார். இதை பார்த்த சிட்னி விமான நிலைய பெண் ஊழியர்கள் இருவர், செராவிடம் சென்று காலியாக உள்ள இருக்கையில் அமரும்படி கூறினர்.
ஆனால் செரா அதை கேட்காமல், தொடர்ந்து காதலர் மடியில் அமர்ந்து இருந்தார். செராவின் செயலால் ஆத்திரம் அடைந்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் பொது இடத்தில் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என மீண்டும் எச்சரித்தனர். ஆனால் அப்போதும் செரா அவர்கள் பேச்சை கேட்க வில்லை.
இதை அடுத்து மேலதிகாரியை அழைத்து செராவின் நடவடிக்கை பற்றி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நடிகை செரா உள்பனியன் போன்று மேலாடையும், டிராக் பேன்ட்டும் அணிந்திருப்பதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், அதையே காரணமாக கூறி செராவை காத்திருப்போர் அறையில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செரா, விமான நிலையத்தில் தான் அணிந்திருந்த ஆடையில் என்ன தவறு இருக்கிறது என கேட்டு, அவருடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த உடையை அணிந்ததற்காக விமான நிலைய ஊழியர்களால் பொதுவெளியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் செரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு புகார் ஒன்றையும் செரா அனுப்பியிருக்கிறார்.
அவரது புகாருக்கு பதிலளித்த விமான நிறுவனம், “உங்களைத் தரக்குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறோம். பொது இடத்தில் காதலர் மடியில் அமர்வது சரியில்லை என்று ஊழியர்கள் கருதியுள்ளனர்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார்.
2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.
தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார் காஜல் அகர்வால். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் மம்முட்டியின் தோற்றம் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.

இதில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.
படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.






