search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய், சவுந்தர்ராஜா
    X
    விஜய், சவுந்தர்ராஜா

    சவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்

    பிகில் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த சவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்துள்ளார்.
    வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சவுந்தர்ராஜா. சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார். பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சவுந்தர்ராஜாவின் நற்பணிகளை புகழ்ந்து பேசியிருந்தார். 

    விஜய் பரிசளித்த ஜெர்சியுடன் சவுந்தர்ராஜா

    இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக அளித்ததாக சவுந்தர்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இந்த வருடத்தின் முக்கிய பரிசு இதுதான் என்றும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ள அவர் நடிகர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×