என் மலர்
சினிமா செய்திகள்
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டியுள்ளனர். இதேபோல் ஏற்கனவே கபாலி படம் ரிலீசான போது விமானத்தில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே பாணியில் தர்பார் படத்திற்கும் புரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத் வரை இயக்கப்படுகிறது. தர்பார் போஸ்டருடன் கூடிய விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக விசாரணை கமிஷன் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் சிக்கினர். ஆனால் வழக்கு விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. இதே போன்று மலையாள பட உலகில் நடிக்கிற வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர். இந்த அமைப்பினர், மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பேரில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, நீதிபதி கே.ஹேமா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷனில் முதுபெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கமிஷன், மலையாள பட உலகில் உள்ள நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, பட உலகில் சந்தித்து வருகிற பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்களுடன் அறிக்கையை தயாரித்தது.

இந்த அறிக்கையை முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் நீதிபதி ஹேமா, நடிகை சாரதா, வல்சலா குமாரி ஆகியோர் சந்தித்து அளித்தனர். இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் கசிந்துள்ளன. அதில் திடுக்கிடும் தகவல்கள் பல இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பட வாய்ப்புக்காக பட உலகில் உள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் மரியாதைக்குரிய இடத்தை சினிமா உலகில் பிடிக்க வேண்டுமானால், மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டி உள்ளது என வேதனையுடன் கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்படுகிற நடிகைகள், போலீசில் புகார் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பட உலகில் உள்ள பல ஆண்களும், பெண்களும் இந்த விவகாரம் பற்றி பேசும்போது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னும் சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றன; கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர்.
இந்த அவல நிலையில் இருந்து நடிகைகளுக்கு நிரந்தர தீர்வு தேடித்தர நீதிபதி ஹேமா கமிஷன், கேரள அரசுக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. படுக்கைக்கு அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரகடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
பட உலகினருக்கு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், விதிமுறைகளை மீறுவோரை படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கேரள அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது. இந்நிலையில், நீல நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், அஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள டிரைவிங் லைசன்ஸ் மலையாள படம் திரைக்கு வந்துள்ளது.
இதையொட்டி தனது ரசிகர்களுடன் பிருத்விராஜ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்குமார் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பிருத்விராஜ் கூறியதாவது:- “அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். எனது வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை அவரிடம் இருந்தே படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா புதிய வீட்டுக்கு குடித்தனம் சென்றார். கிரகப்பிரவேசத்துக்கு என்னையும் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அஜித், கார்த்தி, மாதவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

அங்கு அஜித்தும் நானும் நீண்ட நேரம் பேசினோம். அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர் என்று தெரிந்துக் கொண்டேன். அவரது படம் பெரிய வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது. தோல்வி அடைந்தாலும் வருத்தப்படமாட்டார். இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் பின்பற்றுகிறேன். நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன்.’‘
இவ்வாறு பிருத்விராஜ் கூறினார்.
இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், இதுவரை அவரிடம் இருந்த தயக்கத்தை தற்போது போக்கி இருக்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது இல்லை. ஆனால் மாலத்தீவில் உள்ள ரிசார்ட்டில் இருந்து நீச்சல் உடையில் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார். படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார். நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருக்கும் காஜல் அகர்வால், அங்குள்ள ரிசார்ட்டில் தான் தற்போது தங்கியிருக்கிறார். ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை அவர் எடுத்துள்ளார்.
காஜல் அகர்வாலுடன் அவரது தங்கை மற்றும் தங்கையின் மகன் ஆகியோரும் உடனிருந்தனர். நீச்சல் குளத்திற்கு கருப்பு கலந்த பலவண்ண பிகினி உடை, பீச் போட்டோஷூட்டிற்கு தனி உடை என விடுமுறையை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.
அட்டு படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுகளை குவித்த ரிஷி ரித்விக், அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
அட்டு படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுகளை குவித்தவர் ரிஷி ரித்விக். அடுத்து அவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை எம்.டி.ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். `மரிஜூவானா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷா பார்த்தலோம் என்ற மாடல் நடிக்கிறார். மேலும் பவர்ஸ்டார் சீனிவாசன், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலா ரோசையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கார்த்திக் குரு இசையமைக்க, தயாரிப்பாளர் எம்.டி.விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

படம் பற்றி ரிஷி ரித்விக் கூறியதாவது: ‘இன்று இளைஞர்களை போதை பழக்கம் தான் பெரிதும் சீரழிக்கிறது. போதைப்பொருள் பல விதங்களில் கிடைக்கிறது. அந்த உலகத்தின் இன்னொரு பக்கத்தை படம் காட்டும். வடசென்னை பகுதி படங்களில் அதிகமாக நடிப்பதாக தோன்றுகிறது. மக்களின் வாழ்வியல் படங்கள் தேடி வருவதில் மகிழ்ச்சிதான். இந்த படத்தில் போலீசாக நடிப்பதற்காக சில போலீஸ் அதிகாரிகளுடன் பழகி அவர்களது நடை, உடை, பாவனைகளை கற்றுக்கொண்டேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படக்குழுவினரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வாழ்த்தியுள்ளார்.
விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொட்டு விடும் தூரம்’. வி.பி.நாகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜனவரி 3ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனை படக்குழுவினர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, படத்தின் டிரைலரையும் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் இயக்குனர் நாகேஸ்வரன்! தயாரிப்பாளர் ராமநாதன்!.. இணை தயாரிப்பாளர் சுரேஷ், ஆனந்த் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களை சந்தித்தது எங்களுடைய வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.
தமிழ் செல்வன் இயக்கத்தில் உதய், லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் உதய் படத்தின் விமர்சனம்.
ஓவியராக இருக்கும் நாயகன் உதய் ஒரு பெண் ஓவியத்தை வரைகிறார். அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணை நேரில் கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை நாயகி லீமாவிடம் சொல்லுகிறார். ஒரு கட்டத்தில் உதய்யின் காதலை ஏற்றுக் கொள்ளும் லீமா பாபு, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் காதலில் ஜாதி தடையாக வருகிறது. இதனால், இவர்களுடைய காதலில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பிரச்சனைகளை கடந்து நாயகி லீமா பாபுவை நாயகன் உதய் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதய், காதல், ரொமன்ஸ், சண்டைக்காட்சி என தன்னால் முடிந்தளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி லீமா பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவர்களை சுற்றியே படம் நகர்வதால் மற்ற நடிகர்களுக்கு அதிக வேலை இல்லை.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். காதல், ஜாதியை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். பல காட்சிகள் மற்ற படங்களின் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
தீபக் ஹரிதாஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘உதய்’ சுவாரஸ்யம் குறைவு.
நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தன்னுடைய காரை மர்ம நபர் சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் சில தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர்.
ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி கடந்த ஒரு வருடமாக சென்னை வளசரவாக்கம் அடுத்த அன்பு நகர் 10-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை. கடந்த 10 நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப் போகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி கோயம்பேடு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் “பங்களா வீடு” உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.
Wishing you all a year full of great moments! Here's #SooraraiPottruSecondLook#AakaasamNeeHaddhuRa#SudhaKongara@gvprakash@nikethbommi@Aparnabala2@gopiprasannaa@2D_ENTPVTLTD@rajsekarpandian@SakthiFilmFctry@guneetm@sikhyaentpic.twitter.com/JXbW2oUSPz
— Suriya Sivakumar (@Suriya_offl) January 1, 2020
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்டரை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி உள்ளார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘மாஸ்டர்’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்புக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக்கை பார்த்த இயக்குநர் கார்த்திக் நரேன், மாஸ்டர் ஸ்ட்ரோக்னா என் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தனது டுவிட்டர் பக்கத்தில் 2020 கோடை விடுமுறையை தெறிக்கவிடலாம் என கமெண்ட் செய்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் நடித்த சுனைனா, மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து பயராக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.
விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு என மாஸ்டர் டீம் அனைவருக்கும் மாஸ்டர் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லீ, மாஸ்டர் பர்ஸ்ட் லுக்கை பார்த்து வெறித்தனம் என டுவீட் போட்டுள்ளார். திருமலை படத்தில் இருந்தே நடிகர் விஜய்யும் ராகவா லாரன்சும் நண்பர்கள் தான். மாஸ்டர் பர்ஸ்ட் லுக் பார்த்த லாரன்ஸ், “நண்பா மாஸ்டர் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அருமை. மாஸ்டர் படம் வெற்றிபெற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்” என டுவீட் போட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் கோப்ரா படக்குழுவினருடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது.

இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.






