என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மஹா போஸ்டர்

    ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு பைலட் தோற்றத்தில் இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.இரஞ்சித், புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் பா.இரஞ்சித். மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணித்து வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அரசியல் பள்ளி, சட்ட ஆலோசனை மையம், விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள், அம்பேத்கர் நூலகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம் போன்றவற்றை துவக்கி வைத்தார்.

    பா.இரஞ்சித்

    இந்நிகழ்வுகளில் கர்நாடக மற்றும் தமிழக அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த பயணத்தின் போது பா.இரஞ்சித் திறந்து வைத்த ஜெய்பீம் லா கிளினிக் (Jaibheem Law Clinic) இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது.
    காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் அடுத்ததாக பாம்பாட்டம் என்ற படத்தில் நடிக்கிறார்.
    6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

    காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

    பாம்பாட்டம்

    அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு இனியன் ஜே.ஹரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம்மாதம் நடைபெற உள்ளது.
    லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். 

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வருகிறார். 

    பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் போஸ்டர்

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் திடீரென்று வெளியிட்டிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்திருக்கிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
    சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    சூர்யாவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

    சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். தற்போது வெற்றிமாறன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த அவதார் படத்தில் நடித்தவர்கள் தமிழில் முதல் முறையாக கால் பதிக்க இருக்கிறார்கள்.
    உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.

    ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

    இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

    அவதார் நடிகர்கள் நடிக்கும் புதிய படம்

    தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.

    இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

    அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய். 4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார்கள். முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    கோலிவுட் நடிகைகளிடம் நெருக்கமான நட்பில் இருந்த நடிகர், திருமணத்துக்கு பின் பேச்சை குறைத்துள்ளாராம்.
    எல்லா கதாநாயகிகளுடனும் நெருக்கமான நட்பில் இருந்த ‘கடவுள்’ நடிகர், திருமணத்துக்குப்பின் தன் சுபாவத்தை மாற்றிக் கொண்டார். முன்னணி கதாநாயகிகளை கண்டால், முகம் திருப்பிக் கொள்கிறாராம். 

    எந்த ஒரு கதாநாயகியிடமும் அவர் முகம் கொடுத்து பேசுவதில்லையாம். இதற்கு காரணம், அவருடைய காதல் மனைவிதான் என்று கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கிறார்கள்.
    மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ’கட்டில்’. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.    

    கட்டில் படக்குழு    

    மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம், அஜித்தின் வலிமை பட சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களது திரைப்படங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியானால், அது டுவிட்டரில் டிரெண்டாவது வழக்கம். டிரெண்டிங்கில் சாதனை படைப்பது யார் என்ற போட்டி, இருவரது ரசிகர்களிடமும் உள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய்யின் 64-வது படமான ‘மாஸ்டர்’ பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

    இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக #Master என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கினர். இந்த ஹேஷ்டேக்கில் 3.43 மில்லியன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும். #valimai ஹேஷ்டேக்கில் 3.03 மில்லியன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் வலிமை படத்தின் சாதனையை மாஸ்டர் படம் முறியடித்ததாக செய்திகள் பரவ தொடங்கின. 

    அஜித், விஜய்

    இதையடுத்து அது போலியான தகவல் என கூறி அஜித் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்களும் வலிமை படத்திற்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அஜித்-விஜய் ரசிகர்களிடையே டுவிட்டரில் மோதல் நீடித்து வருகிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனிடையே மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி ஹிட் ஆனது. 

    பாண்டிராஜ்

    தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, சினிமாவில் அதெல்லாம் சகஜம் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொரு நாளும் இன்னும் நல்ல மனிதராக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேற்றை விட இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நம்முடன் நாமே போராட வேண்டும். 

    இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்து 7 ஆண்டுகளில் விதவிதமான கதைகள் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். இதன் மூலம் எனது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறது. எனது முடிவுகளையும் மாற்றி அமைத்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. எனது யோசிக்கும் தன்மையும் விசாலமாகி இருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம்.

    ராஷி கண்ணா

    இதற்கு முன்பு விமர்சனங்களுக்கு உடனே பதில் கொடுப்பேன். கருத்துகளும் சொல்வேன். படம் தோல்வி பற்றி விமர்சித்தாலோ கிசுகிசுத்தாலோ உடனே கோபம் வரும். இப்போது அது சுத்தமாக குறைந்து விட்டது. மிகவும் சாந்தமாக மாறி விட்டேன். நேற்றை விட நன்றாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். இந்த புத்தாண்டில் கூட அந்த முயற்சியில்தான் ஈடுபட்டு இருக்கிறேன்.”

    இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.
    ×