என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
    விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் படம் 'லாபம்'. இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை கொடுத்து தேசிய விருது வென்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

    இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் லுக் மற்றும் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்துக்காக ஸ்ருதி ஹாசன் பாடிய ஒரு ரொமாண்டிக் பாடல் ஒன்று பதிவு செய்யப்படுள்ளது. 

    இயக்குனர், இசையமைப்பாளருடன் ஸ்ருதிஹாசன்

    இதன் வரிகளை பாடலாசிரியர் யுகபாரதி எழுதி உள்ளார். இந்த ரொமாண்டிக் மெலடி பாடலை எப்போது ரிலீஸ் செய்யப்போகிறோம் என்று ஆர்வமாக காத்திருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார்.
    இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார்.
    இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ‌ஷர்மாவிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதையை விவரித்தார்.

    டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் சைக்கிள் கடைகாரரிடம் எனது வண்டியை ரிப்பேர் செய்ய சொன்னேன். அந்த பணிக்கான பணத்தை பின்னர் தருவதாக கூறினேன். ஆனால் மறந்து விட்டேன்.

    சல்மான் கான்

    மறுபடியும் எனது சைக்கிள் டயரை சரி செய்ய மீண்டும் அவரை சந்தித்தேன். அப்போது சிறு வயதில் சைக்கிளை ரிப்பேர் செய்தீர்கள். பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு தரவில்லை. ஒரு ரூபாய் 25 பைசா பாக்கி தரவேண்டும் என்றார்.

    அந்த சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பின்னர் நான் தர வேண்டிய பாக்கியை அவரிடம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விஜய் ஒரு புத்தகம் போன்றவர், அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம் என நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். இதையொட்டி அமலா பால் அளித்த பேட்டியில் கூறியதாவது: ’என் பேவரிட் நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. 

    விஜய், அமலாபால்

    இது சாதாரண விஷயம் அல்ல.. போராட்டங்கள் அதிகம். பல விஷயங்களை இழக்க நேர்கிறது. ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான். விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் ரொம்ப ஸ்மார்ட். அதனால் தான் அவரை சூப்பர்ஸ்டார் என்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.
    அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் மாயநதி படத்தின் முன்னோட்டம்.
    ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாயநதி’. அபி சரவணன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், வெண்பா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் அஷோக் தியாகராஜன். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார்.

    வெண்பா, அபி சரவணன்

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளோம் என அவர் தெரிவித்தார். 
    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. 

    சானியா மிர்சா, கரீனா கபூர்

    இந்த வரிசையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பயோபிக் உருவாகிறது. இதனை சானியா மிர்சா சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். இப்படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்க உள்ளார். இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
    மூளையில் கட்டி ஏற்பட்டதால், பிரபல இயக்குனர் சீரியசான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வித்யாபாலன், அக்‌‌ஷய் குமார், சோனாக்‌சி சின்கா, டாப்சி, நித்யா மேனன் உட்பட பலர் நடித்த இந்தி படம் மி‌ஷன் மங்கள். இந்திய விண்வெளி வரலாற்றில் ‘மங்கள்யான்’ விண்ணில் செலுத்தப்பட்டது முக்கியமான நிகழ்வு. அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது. கடந்த வருடம் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியான இந்த படத்தை தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கி இருந்தார்.

    இவர் சீனிகம், ‌ஷமிதாப் உட்பட சில படங்களை இயக்கிய ஆர்.பால்கியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மி‌ஷன் மங்கள் படம் ஹிட்டானதை அடுத்து கவனிக்கப்பட்டார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருந்தார். இந்தியில் விஜய் நடித்த கேரக்டரில் அக்‌‌ஷய்குமார் நடிக்க இருந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதனால் ஜெகன் சக்தி அடுத்த படத்துக்கான பணிகளில் இருந்தார். 

    ஜெகன் சக்தி, அக்‌ஷய் குமார்

    இந்தநிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை அறிந்தனர். மிகவும் சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம் இயக்குனர் ஒருவருக்கு இப்படி ஆகியிருப்பது இந்தி திரை உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்நிலையில், ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஷேன் நிகம் நடிப்பதாக இருந்தது.

    மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள நடிகர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. மேலும் அவர் 2 மலையாள படங்களில் நடித்த பிறகு தான் வேறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    ஷேன் நிகம், விஸ்வா

    இதன் காரணமாக ஷேன் நிகமால் சீனு ராமசாமியின் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனது. இதனால் சீனு ராமசாமியின் படத்திலிருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாம்பியன் படத்தில் நடித்த விஸ்வா நடிப்பார் என கூறப்படுகிறது. 
    அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘நிசப்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. 

    நிசப்தம் பட போஸ்டர்

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 31-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நிசப்தம் படம் பிப்ரவரி 20-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கமல், ரஜினி, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ள நிவேதா தாமஸ், தற்போது அஜித் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார்.

    நிவேதா தாமஸ்

    கமல், ரஜினி, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் நடித்துள்ள நிவேதா தாமஸ், தற்போது அஜித் படத்தில் நடிக்க உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். 
    நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா இயக்கி இருக்கிறார். 

    குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரத்குமார் கூறியதாவது:- “சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. அண்மையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தேன். ‘வானம் கொட்டட்டும்‘ கதையை நானும், ராதிகாவும் கேட்டதும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றும் வெற்றி தோல்விகளை அவர்கள் எப்படி சந்திக்கின்றனர் என்பது கதை.

    சரத்குமார்

    இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை பின்பற்றி வருகிறேன். இதுவே நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்.

    ராதிகாவுக்கு கோபம் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி. எனக்கு ரஷ்ய மொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.” இவ்வாறு சரத்குமார் கூறினார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, சினிமாவில் நிலைத்திருக்க அதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் விஜய், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

    அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற பாகுபாடுகள் கிடையாது.

    ஸ்ரேயா

    சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க முடியாது. கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம். கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும். நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து இருக்க முடிந்தது. 

    தற்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள் சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம். வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு சினிமா மாதிரி கட்டுபாடுகள் இல்லை. நினைத்ததை காட்சிப்படுத்த முடியும். நல்ல கதை அமைந்தால் வெப் தொடர்களில் நடிப்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
    பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால் அவரது வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி. ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

    ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

    ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது. ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

    ×