என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செல்பி எடுத்த காரணத்தால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கு போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
    நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில், ‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். 

    சஞ்சனா கல்ராணி

    போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்கு, போலீசார், ‘நோட்டீஸ்’ அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர். சஞ்சனா படப்பிடிப்புக்காக, துபாய் சென்றிருந்ததால் கால அவகாசம் கோரியிருந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர், போக்குவரத்து போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று, இணை போலீஸ் கமி‌ஷனர் ரவிகாந்தே கவுடாவை சந்தித்தார். ‘பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு, நான் செய்திருக்கக்கூடாது’ எனக் கூறி மன்னிப்பு கோரினார். செய்த தவறுக்கு 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினார்.
    பாகுபலி படம் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், நடிகை சமந்தாவிற்காக விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
    தமிழில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அதோடு ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டினர். அந்த வகையில் இப்படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கும் நல்ல வசூல் பார்த்தது.

    இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ரிலீசாகிறது. 96 படத்தை எடுத்த பிரேம்குமார் தான் ஜானு படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜானு என்ற தலைப்பு எப்படி வந்தது என்பது குறித்த ருசீகர தகவல் வெளியாகியுள்ளது.

    சமந்தா, பிரபாஸ்


    இதே பெயரில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்து வந்தார். இதனிடையே 96 படத்தின் ரீமேக்கிற்கு ஜானு என்ற தலைப்பு தான் பொறுத்தமாக இருக்கும் என முடிவு செய்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, பிரபாசிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார். இதனை ஏற்ற பிரபாஸ் ஜானு என்ற தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார்.
    சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சிம்பு, யுவன் சங்கர் ராஜா பெயரில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

    மாநாடு படம் பற்றி சிம்பு அளித்த பேட்டியில் கூறியதாவது: “முதல்முறையாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முஸ்லிம்களை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை சிலர் வைத்தபோது அது எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால்வாசி பேர் முஸ்லிம்கள்தான். பெரியார் பாடலும் பாடுகிறேன், சபரிமலைக்கும் செல்கிறேன், முஸ்லிம் பெயரிலும் நடிக்கிறேன் என்று சிலருக்கு குழப்பம் ஏற்படக்கூடும். 

    சிம்பு - யுவன்

    எல்லாரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதைவிட முதலில் மனிதனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு பெரியாரிடம் பிடித்த விஷயங்களையும் வெளியில் சொல்வேன், எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் சபரிமலைக்கும் செல்வேன். மற்ற மதத்தை சேர்ந்து மக்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கும்போது அதற்கு குரல் கொடுப்பதற்காக முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்கு இந்த படத்தில் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
    விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
    விஜய் வீடு, அலுவலகங்களில் நடக்கும் சோதனைக்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையம் முழுக்க இதற்காக அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டரில் நாங்கள் விஜய் உடன் நிற்கிறோம் என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த டேக்கில் விஜய்க்கு ஆதரவாக பலரும் டுவிட் செய்து வருகிறார்கள். விஜய் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறார். அவரின் அரசியல் ஆசையை முடக்கும் வகையில் இப்படி செய்கிறார்கள். திட்டமிட்டு செய்யப்படும் மோசமான நடவடிக்கை இது என்று அதில் கூறி வருகிறார்கள்.

    ரசிகர்களின் ட்விட்

    விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது. வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் விஜய் வீடு முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் விஜய் ரசிகர்கள் யாரும் விஜய் வீட்டு பக்கம் வர கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி சூழ்ச்சியால் வெற்றி பெற்று விட்டார் என்று பாடகி சின்மயி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
    டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியும் சின்மயியும் தலைவர் பதவிக்கு களம் இறங்கினார்கள். சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வானார்.

    பின்னர் சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:-

    “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும். என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்தது மிகப்பெரிய சூழ்ச்சியாகவே தெரிகிறது.

    இங்கு தோற்றது நானாக மட்டும் இருந்திருந்தால் இப்போது பேச மாட்டேன். பல வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்த 10 சதவீத பணத்தை வைத்தே டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள். அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டிடம் கட்டப்பட்டது.

    சின்மயி

    47.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு யூனியன் உறுப்பினர்களின் பணத்தை கையாடல் செய்திருக்கின்றனர். இந்த ஊழலை வெளிக்கொணர தான் நாங்கள் பாடுபட்டோம்.

    எதிர்த்துப் பேசுபவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் போன் செய்து திட்டுவதுமென இருந்தபோதே 45 சதவீத வாக்குகளை பெற்று இருந்தார்கள் ராதா ரவிக்கு எதிரானவர்கள்.

    நானும் இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறேன் என்பதால் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டார்கள். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழில் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
    மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ராவ். மீண்டும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சைக்கோ படத்தில் நடித்த அதிதி அடுத்து விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 

    கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது. அடுத்தடுத்து அசுரன், பட்டாஸ் படங்களில் நடித்த தனுஷ், தற்போது சுருளி, கர்ணன் என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனால் ஏற்கனவே அவரது இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படம் இப்போதைக்கு தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

    அதிதி ராவ்

    இதுகுறித்து அதிதிராவ் கூறும்போது, ‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார்.
    வேல்ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அதையும் தாண்டி புனிதமானது' திரைப்படத்தின் முன்னோட்டம்.
    வேல்ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா, குஷி, வீன் ஷெட்டி, வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

    இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

    திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன்,  எடிட்டிங் - ஆர்.கே, இயக்கம் - ஆர்.வெங்கட்டரமணன்.
    விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    ஆனால், தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை என்றும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க விநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    ஏ.ஆர்.முருகதாஸ்

    இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

    விஜய்

    மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

    பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில், கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த கணேஷ் ஆச்சார்யா, தன் மீது பொய்யாக பாலியல் புகார் கூறிய நடன நடிகை மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

    கணேஷ் ஆச்சார்யா

    இந்த நிலையில், நடன நடிகை கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் கணேஷ் ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கணேஷ் ஆச்சார்யாவுக்கு உடந்தையாக செயல்பட்டு நடன நடிகையை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இரண்டு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரண்மனை 3-ம் பாகத்தில் இசையமைப்பாளர் மாறியிருப்பதால், சுந்தர்.சியுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு ஆதி விளக்கம் அளித்துள்ளார்.
    சுந்தர்.சி படங்களுக்கு இசையமைத்து அவருடன் நெருக்கமாக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படங்களை சுந்தர்.சியே தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. சென்னையில் நடந்த ‘நான் சிரித்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது:-

    சுந்தர்.சி - ஆதி

    “அரண்மனை 3-ம் பாகத்தில் இசையமைப்பாளர் மாறிவிட்டார் என்பதால் எங்களுக்குள் மோதல் என்ற தகவல் பரவி உள்ளது. தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி சுந்தர்.சி நல்ல நோக்கத்தில் அறிவுரை கூறினார். எனக்கு இசையும் முக்கியம். மோதல் எதுவும் இல்லை. எங்கள் உறவு உயர்வானது.

    நான் சிரித்தால் படம் சிறப்பாக வந்துள்ளது. கோபம், துக்கம் உள்பட எல்லா உணர்ச்சிகளுக்கும் சிரிக்கிற மாதிரி கேரக்டர். விதம் விதமாக சிரித்தே நடித்து இருக்கிறேன். கே.எஸ்.ரவிகுமாரும், ரவிமரியாவும் வில்லனாக வருகிறார்கள். படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது மன நிறைவு இருக்கும். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. படத்தை ராணா இயக்கி உள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்” என்றார்.
    டி.எம்.ஜெயமுருகன் இயக்கத்தில் கார்த்திக், அபிதா நடிப்பில் உருவாகி வரும் தீ இவன் படத்தின் முன்னோட்டம்.
    ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், டி.எம்.ஜெயமுருகன். ‘சிந்துபாத்’ என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு இசையமைத்திருப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டும் செய்து இருக்கிறார். படத்துக்கு, ‘தீ இவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

    அண்ணன்-தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படமாக உருவாகியுள்ள இதில் அண்ணனாக-கதையின் நாயகனாக கார்த்திக் நடிக்கிறார். அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கையாக ‘சேது’ அபிதா நடிக்கிறார். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே படங்களின் வரிசையில், இந்த படமும் இடம் பெறும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, பெரைரா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, அலிமிர்சாக் பின்னணி இசையமைக்கிறார். 
    ×