என் மலர்
சினிமா செய்திகள்
தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் தன்னை பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் விவரங்களையும் தொடர்ந்து வெளியிட்டார்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை சாடினார். 3 திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் வசை பாடினார்.

இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார். இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அத்துடன் ஸ்ரீரெட்டி பேசிய ஆபாச வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.
இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகினர் மத்தியில் ஸ்ரீரெட்டி கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது மனநிலையை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக காஜல் அகர்வால் ட்விட்டர் பதிவில், ‘என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த டுவீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானியின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. அடுத்து மெஷின், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்ததுடன் தமிழ், தெலுங்கில் உருவான பரத் எனும் நான் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோயின்கள் ஒருபக்கம் திரைப்படத்தில் நடித்தாலும் வெப் தொடரிலும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் கியாராவும் வெப் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கியாரா நடத்திய போட்டோஷூட் சர்ச்சையாகி இருக்கிறது. அரை நிர்வாண தோற்றத்தில் நிற்கும் அவர் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலையை கொண்டு தனது உடலை இலைமறை காய்போல் மறைத்தும் காட்டியும் போஸ் தந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, 'இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது' என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஒரு சிலர், 'இந்திய கலாச்சாரத்தையும், மதிப்பையும் குலைக்கும் வகையில் கியாரா போஸ் அளித்திருக்கிறார்' என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில் இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவனை, பாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதே கூட்டணி ஐந்து ஆண்டு இடைவேளைக்கு பின் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
காதலர் தினத்தன்று இப்படத்தின் தலைப்பை புதுமையான முறையில் படக்குழுவினர் அறிவித்தனர். அனிருத்தின் துள்ளலான இசையுடன் கூடிய அந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் இந்த வீடியோ இருந்ததாக படக்குழுவினருக்கு கரண் ஜோகர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் தான் பாக்ஸராக நடிக்க உள்ளதாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டது.
My love for sports coming alive on screen
— Arya (@arya_offl) February 20, 2020
All set to face the boxers in the ring with @beemji sir for our next 💪 It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal 😍😍😎 @Music_Santhosh@K9Studioz#AnbuArivu#Muralipic.twitter.com/1ejKMipNYh
இந்நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படம் தனது திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும் என ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ”இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.
நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்கு தான் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.
இவ்வாறு கமல் கூறினார்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது, இனி நடக்கக் கூடாதது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்துள்ள மாஃபியா திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீகாந்த் ரெட்டி எனும் அறிமுக இயக்குனர் இயக்கும் ’அகம் பிரம்மாஸ்மி’ எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்க உள்ளார்.
ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சோழ வேந்தன், தேஜா ரெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் குட்டி தேவதை படத்தின் முன்னோட்டம்.
ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் குட்டி தேவதை. இப்படத்தில் சோழ வேந்தன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தேஜா ரெட்டி நடித்துள்ளனர். மேலும் இதில், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, வாசு விக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர் கணேஷ் இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பல முன்னணி இயக்குனர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே.அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். மு.மேத்தா, அமுதபாரதி இசையையும், நெளசத்- சூரியன் இருவரும் ஒளிப்பதிவையும், லான்சி - மோகன் இருவரும் படத்தொகுப்பையும், சதீஷ் நடனபயிற்சியையும், ஸ்பீடு மோகன் சண்டை பயிற்சியையும், சந்தோஷ் கலையையும், ஆறுமுகம் - கார்த்திக் ராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும் சி.செல்லன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர். பி.அறிவரசன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இயக்குனர் பாரதிராஜாவும், ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே ராமநாராயணன் 3 முறை தலைவராக இருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், தாணு ஆகியோர் தலைவரானார்கள். முந்தைய தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்வானார். அவரது பதவி காலம் முடிந்துள்ளது.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் அரசு நியமித்துள்ளது. வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்காக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
தேர்தலில் புதிய தலைவராக போட்டியிடுபவர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த தற்போதைய ஆலோசனை குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து அவரிடம் வற்புறுத்தி வருகிறார்கள்.
ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் திரைக்கு வந்த மெர்சல், பொதுவாக என்மனசு தங்கம், மணல் கயிறு-2, தில்லுக்கு துட்டு, ஆறாது சினம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. தலைவர் தவிர, 2 துணைத்தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.






