என் மலர்
சினிமா செய்திகள்
நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கிறார்.
இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ’நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை. எப்போது வாய்ப்புகள் இருக்கும், எப்போது இல்லாமல் போகும் என்று தெரியாது. நல்ல படங்கள் அமைந்தால் நடிகையாக இன்னும் கொஞ்ச காலம் எங்களை ஞாபகம் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி படங்கள் அமையாவிட்டால் மறந்து விடுவார்கள். நான் சினிமா துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த காலகட்டத்தில் சினிமா, தொடர்கள், சர்வதேச படங்களில் எனது திறமையை வெளிப்படுத்தி நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் தொழில் ரீதியாக எப்போதும் பயந்து கொண்டேதான் இருக்கிறேன். நாளை எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்களை கடத்துகிறேன்.

வாய்ப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத துறை எங்களுடையது. எப்போது எங்கள் கதை முடியும் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் புதிய கதைகள் கதாபாத்திரங்கள் கிடைத்து அவற்றில் நடிப்பது என்பது கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி நல்ல கதைகளுக்காகத்தான் காத்து இருக்கிறேன்.
நல்ல கதைகள் கிடைக்காவிட்டால் என்னை மறந்து விடுவார்கள் என்ற பயமும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது”
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
ரஜினி நடிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசையை வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். மேலும் டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது டைட்டில் லுக் வீடியோவின் பின்னணி இசையை இமான் வாசிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#ANNAATTHE#DImmanMusical
— D.IMMAN (@immancomposer) February 26, 2020
Title Motion Poster BGM!
Praise God! pic.twitter.com/JfrmW0NGTU
கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அப்படத்தின் அடுத்த கட்ட பணிக்கு அவர் சென்றிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டப்பிங் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. மாஸ்டர் படத்தின் டப்பிங்கை விஜய் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதால், படத்தை விரைவில் முடித்து, கோடையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குனர் சங்கர் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் 2 படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது கடந்த 19ம் தேதி இரவு கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசனும், தயாரிப்பு நிறுவனம் லைகாவும் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் மிகவும் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.

அதில், ‘படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் இருந்து நான் அதிர்ச்சியில் உள்ளேன். என் உதவி இயக்குனர் உள்ளிட்டோர் இழப்பால் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். அந்த கிரேன் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் ‘பேசாதே மொழியே...’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலை பிப்ரவரி 28ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தர் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
'நறுவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், அந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் என்று பேசியிருக்கிறார்.
ஒன் டே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நறுவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குனர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன்.

நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன். இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும்.
இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன், என்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த 'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வரனே ஆவஷ்யமுண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மரைக்காயர்' படத்தில் மோகன்லாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அந்த அனுபவம் குறித்து கூறும்போது, "அப்பாவுடன் பணியாற்றினால் நான் அதிகம் பயப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். அவரது படத்தில் நான் சில நாட்கள் கவுரவ வேடத்தில் நடித்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சில வசனங்களே எனக்குக் கஷ்டமாக இருந்தன.
என்னை எப்படி இயக்குவது என்பது அவருக்கும் பிடிபடவில்லை. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி நடிப்பது என்பது எனக்கும் புரியவில்லை. நான் வசனங்களை மறந்துவிட்டேன் என்று சத்தம் போட்டார். ஆனால் நான் வசனங்களை மறக்கவில்லை. பதற்றம்தான். 'உன் முதல் ஐந்து படங்கள் வரை நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றக் கூடாது. ஏனென்றால் அது உனக்கு அதிக அழுத்தத்தைத் தரும்' என்றார். அவர் சொன்னது இப்போது எனக்குப் புரிகிறது" என்றார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினி, தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபலமாகி இருக்கும் மஞ்சு வாரியரை பாராட்டி இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார்.
மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார்.

அதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்சிவன்.
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்), கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷும், விஷாலும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் சக்ரா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இப்படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படமும் அதே தினத்தன்று ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






