என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை ஜோதிகாவின் பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
    நடிகை ஜோதிகா விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசும்போது கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது சர்ச்சையானது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், இன்னொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்திலும் விவாதமாக மாறியது.

    இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் மூளை அவ்வளவுதான். தி.மு.க, தி.க., நாம் தமிழர், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் ஏவலர்கள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர். 

    காயத்ரி ரகுராம்

    ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. தனது பேச்சுக்காக ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. பிரபலமாக இருக்கும் அவர் உண்மையற்ற தகவல்களை பரப்ப கூடாது. ஜோதிகா மீது எனக்கு வெறுப்பு இல்லை. மேடையில் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இந்து பற்றி பேசும்போது மற்ற மதங்களையும் உள்ளடக்கி பேசி இருக்கலாம்.”

    இவ்வாறு கூறியுள்ளார்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, கொரோனாவால் சிறுபட்ஜெட் பட அதிபர்களுக்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டதால் சினிமா துறை கடும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், திரையரங்குகள் திறக்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  "OTT, இது விஞ்ஞான மாற்றம், இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா. சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம், நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்காதே படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

    அடங்காதே பட போஸ்டர்

    சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார் என்றார்
    படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

     ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்

    தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில், “படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்.
    யூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜிவி பிரகாஷ், தூங்காமல் வேலை செய்தும் அப்போ பாராட்டு கிடைக்கல என கூறியுள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே  முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும்  செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் யூடியூபில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.

    அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், "இந்த ஸ்டுடியோவில் தான் நானும் செல்வராகவன் அவர்களும் எத்தனையோ நாட்கள் தூங்காமல் வேலை செய்தோம். அந்தப் படம் வெளியான போது பாராட்டுகளோ, விருதோ கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது சந்தோஷமாக உள்ளது. அப்போது இந்த பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருந்தால் இன்னும் எனர்ஜியாக இருந்திருக்கும். உடனே 'ஆயிரத்தில் ஒருவன் 2' செய்திருப்போம்.

    செல்வராகவன்

    அந்த சமயத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாதி நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது. அப்போது முதல் பாதி முதல் பாகமாகவும், 2-ம் பாதி 2-ம் பாகமாக வெளியிடலாமா என்று செல்வராகவன் என்னிடம் பேசினார். இறுதியில் ஒரே பாகமாக வெளியிடலாம் என்று திட்டமிட்டு வெளியிட்டோம். 

    அந்தச் சமயத்தில் 2 பாகங்களாக 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் அடுத்ததடுத்து 3 மற்றும் 4-ம் பாகங்கள் உருவாகியிருக்கும். அது ஒரு சீரியஸாக இருந்திருக்கும். செல்வராகவனுடன்  பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம். அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமையாக நினைக்கிறேன்" என கூறினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் (மே 1-ந் தேதி) நெருங்கி வருவதால், அவரது ரசிகர்கள் தற்போதிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக பொது டிபி ஒன்றை திரைப்பிரபலங்கள் மூலம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அந்த பொது டிபியை வெளியிட இருந்த பிரபலங்களில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் ஒருவர்.

    இந்நிலையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அஜித்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. கொரோனா நேரத்தில் அவரின் பிறந்தநாளுக்காக பொது டிபி வெளியிட்டு கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இது அவருடைய தனிப்பட்ட கோரிக்கை. ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்த கோரிக்கையை நான் டுவிட் செய்து விளக்கட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் சரி என்றார்கள். இந்த நேரத்தில் அனைவரும் நலமாக வாழ வாத்துவோம். தல அஜித்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.  

    ரிலீசாவதற்கு முன்பே அட்லீ படத்தை பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
    'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், அந்தகாரம் படத்தை பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: அந்தகாரம் படத்தை பார்க்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு புத்திசாலித்தனமான படைப்பை நான் சமீபத்தில் பார்க்கவில்லை. இயக்குனர் விக்னராஜனின் கதை கூறும் விதத்திற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் மிரட்டியுள்ளனர். அட்லீ, உங்கள் கையில் ஒரு வெற்றி படம் இருக்கிறது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி இடத்தை பிடித்துள்ளார்.
    நடிகர் அல்லுஅர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். 

    புஷ்பா பட போஸ்டர்

    மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரன், டிஸ்கோ ராஜா, சைஸ் ஜீரோ போன்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    விஜய் - அட்லீ கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தெறி படம், இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பிரபல நடிகர் இதில் நடிக்க உள்ளார்.
    விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக இயக்கிய படம் ‘தெறி’. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். 

    மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் மிக பெரிய வெற்றியால், ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் நடித்தார் விஜய். 

    வருண் தவான்

    இப்படத்தை பிறமொழிகளில் ரீமேக் செய்ய  போட்டி நிலவி வந்தது. அந்தவகையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை  இயக்க உள்ளதால், தெறி இந்தி ரீமேக்கை அவர்  இயக்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
    சாவித்திரியின் சுயசரிதை படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக கின்னஸ் சாதனை படைத்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கீர்த்திக்கு கிடைத்தது.

    விஜய நிர்மலா

    இந்தநிலையில், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.  மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் பயோபிக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய நிர்மலா, 250 படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், உலகிலேயே 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். கீர்த்தி சுரேஷிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். 
    தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
    மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.

     கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார். அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.

    ‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும். 6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி.
    ×