என் மலர்tooltip icon

    சினிமா

    அடங்காதே பட போஸ்டர்
    X
    அடங்காதே பட போஸ்டர்

    அடங்காதே

    அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்காதே படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

    அடங்காதே பட போஸ்டர்

    சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார் என்றார்
    Next Story
    ×