என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி உடற்பயிற்சி செய்ய யோசனை சொல்லியுள்ளார்.
    தமிழில் மரகத நாணயம், சார்லி சாப்ளின் 2, கடவுள் இருக்கிறான் குமாரு, யாகாவராயினும் நாகாக்க, மொட்ட சிவா கெட்ட சிவா உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி.

    இவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய, ஓர் சுலபமான வழியை கூறுகிறார். “வீட்டின் மாடிப்படிகளில், ஏறி இறங்குங்கள், நேரம் போகும் என்பதோடு, உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும் “ என்று கூறியுள்ளார்.
    விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது.

    இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,

    நடிகர் சூர்யா அறிக்கை


    'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

    இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 'மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

    பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது, அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

    மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு பிரபல நடிகை டிக் டாக் செய்து அசத்தி இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.

     ‘டிக்டாக்‘ சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஆடியது போல பலரும் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி


    இந்நிலையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் இடையே வைரலாகி உள்ளது. ஷில்பா ஷெட்டி ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பொன்மகள் வந்தாள் பட பிரச்சனையில் சூர்யா - ஜோதிகாவுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் களமிறங்கி இருக்கிறார்.
    சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடி இருப்பதால் இப்படத்தை அமேசான் பிரேமில் வெளியாக திட்டமிட்டுள்ளனர்.

    சூர்யாவின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தயாரிப்பாளர் தாணு


    அதில், பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரோனாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள்.

    அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொகையும் பல ஏழைகளுக்கு உதவும்.

    டிஜிட்டலில் படம் ரிலீஸ் ஆவதால் சினிமா அழியாது. டிவி வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள் அழிந்ததா முன்பைவிட நன்றாக இருக்கிறது.

    பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியள்ளார்.
    'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கிறார்.
    தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். 'ஓ மை கடவுளே' படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளன.

    வாணி போஜன்

    அதுமட்டுமின்றி, அவர் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த வெப்தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இந்த வெப் தொடரை ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குனர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தபின் இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட உள்ளனர்.
    அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
    பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

    படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது.  இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் அச்சுறுத்திய நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

    நிகிலா விமல், சிபிராஜ்

    முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார். 
    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானிடம், நடிகர் பிரசன்னா டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

    இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார். 

    இந்நிலையில், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட டுவிட்டுக்கு கீழ் கமெண்ட் செய்திருந்த பிரசன்னா, "மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.

    மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கி தவிக்கிறாராம்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது சகோதரர் ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படிப்பதற்காக லண்டன் சென்ற எனது சகோதரர் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டார். இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாடகை குடியிருப்பில் வசிக்கிறார். ஒரு படுக்கையுடன் கூடிய சிறிய அறை அது. அவனுடன் பயிலும் பிற நாடுகளைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளியேறியதால், அவன் தனியாக இருக்கிறான். 

    மாளவிகா மோகனன்

    லண்டனில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளதால், அது அவரை மனரீதியாக பாதித்துள்ளது. ஆதித்யாவின் அறையில் சமைக்க எந்தவிதமான வசதிகளும் இல்லை, உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்வது பாதுகாப்பானதாக இல்லை. கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவலையாக உள்ளது.

    இந்தப் பிரச்சனை எப்போ முடியும்னு தெரியவில்லை. மே 3-க்குப் பிறகாவது ஆதித்யாவால் இந்தியா திரும்ப முடியுமா? என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அவர் பலமுறை மெயில் அனுப்பியும் சரியான பதில் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார். 
    சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பாக்கெட்டில் வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்ததாக கே.ஜி.எப். நடிகர் யஷ் கூறியுள்ளார்.
    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எப். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் கன்னடம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது அதன் இரண்டாம் பாகம் அதைவிட பிரம்மாண்டமாக உருவாகிறது. 

    இந்நிலையில், நடிகர் யஷ் சினிமாவில் நுழைய எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நடிக்கும் ஆசையில் பாக்கெட்டில் வெறும் 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்தேன். இவ்வளவு பெரிய நகரத்தில் எப்படி சாதிக்க போறோம் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தது. 

    யஷ்

    முதலில் நாடக மேடைகளில் வேலை செய்தேன். டீ கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் செய்தேன்.  பின்னர் மேடை நாடகங்களில் நடித்தேன். அதில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பின்னர் சினிமாவில் நடித்தேன் என கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்திருந்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அப்படத்திற்கு வக்கீல் சாப் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார்.

    பவன் கல்யாண்

    இப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் அடுத்ததாக நடிக்கும் படத்தை கிரிஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் உள்ளன.
    கொரோனா ஊரடங்கால் நடிகை திரிஷா நடித்த திகில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
    கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு மாறி வருகிறார்கள். ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதுபோல் மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வர இருக்கின்றன. 

    திரிஷா

    இந்த நிலையில் திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். இதில் திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். திகில் படமாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த வருடமே திரைக்கு வருவதாக இருந்தது. பின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து அப்போதும் வெளியாகவில்லை. பின்னர் பிப்ரவரி 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் தியேட்டர்கள் குறைவாக கிடைத்ததால் மீண்டும் தள்ளி வைத்தனர்.
    ஜோதிகா சொன்னது சரியானது, அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து உள்ளார். 

    அவர் கூறியதாவது: ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் அவருடையை பேச்சை முழுமையாக கேட்டேன். அதில் யாரையும் புண்படுத்தும் வகையில் தவறாக பேசவில்லை, அவர் சொன்னது சரியானது. இந்த கொரோனா துயரங்களுக்கு பிறகும் பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர் மத அரசியல் செய்வது மோசமானது. 

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    ஜோதிகா தனது பேச்சில் எந்த மதத்தையும் பற்றி குறிப்பிடவில்லை. நிஜமான சமூக அக்கறை மட்டுமே அவரது பேச்சில் பிரதிபலித்தது. அவரது பேச்சில் எந்த இடத்திலும் தவறு தெரியவில்லை. சிலரை அவரது பேச்சு வருத்தப்படுத்தி இருந்தால் அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம். அவர்கள் கருத்துகளுக்கு ஜோதிகாவும் மதிப்பு அளித்து இருப்பார்.

    இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
    ×