என் மலர்tooltip icon

    சினிமா

    தம்பியுடன் மாளவிகா மோகனன்
    X
    தம்பியுடன் மாளவிகா மோகனன்

    லாக்டவுனால் லண்டனில் சிக்கிய தம்பிக்கு மன அழுத்தம் - மாஸ்டர் நடிகை கவலை

    மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கி தவிக்கிறாராம்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது சகோதரர் ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படிப்பதற்காக லண்டன் சென்ற எனது சகோதரர் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டார். இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாடகை குடியிருப்பில் வசிக்கிறார். ஒரு படுக்கையுடன் கூடிய சிறிய அறை அது. அவனுடன் பயிலும் பிற நாடுகளைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளியேறியதால், அவன் தனியாக இருக்கிறான். 

    மாளவிகா மோகனன்

    லண்டனில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளதால், அது அவரை மனரீதியாக பாதித்துள்ளது. ஆதித்யாவின் அறையில் சமைக்க எந்தவிதமான வசதிகளும் இல்லை, உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்வது பாதுகாப்பானதாக இல்லை. கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவலையாக உள்ளது.

    இந்தப் பிரச்சனை எப்போ முடியும்னு தெரியவில்லை. மே 3-க்குப் பிறகாவது ஆதித்யாவால் இந்தியா திரும்ப முடியுமா? என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அவர் பலமுறை மெயில் அனுப்பியும் சரியான பதில் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×