என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது கதாநாயகனாகவும், இயக்குநராகவும் வளர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஆன்லைன் வகுப்புகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “கடந்த சில மாதங்களா நம்ம சுத்தி நடக்குற விஷயங்கள் எல்லாம் நமக்கு மன அழுத்தத்தை கொடுக்குது. அதில கடந்த சில வாரமா சின்ன குழந்தைங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் 8 மணி நேரம், 9 மணி நேரம் குழந்தைங்களுக்கு கிளாஸ் வைக்கும் போது உடல்அளவிலும், மனதளவிலும் ஏற்படுகிற அழுத்தத்தை அவங்களால எப்படி சமாளிக்க முடியும்?
இத்தனை நாளா அம்மா அப்பா, ‘போன் பாக்காத, டிவி பாக்காத’ன்னு சொல்லி வளர்த்த நிலையில இப்போ ‘போன பாரு, டிவிய பாரு’ன்னு அவங்க சொல்லும்போது மாணவர்களுக்கும் கஷ்டமா இருக்கும். பெரியவங்களுக்கே ரொம்ப நேரம் போனும், கம்ப்யூட்டரும் பார்த்து வேலை செய்தா பிரச்சினைகள் ஏற்படும்னு மனநல மருத்துவர்கள் சொல்லும்போது சின்ன குழந்தைங்க எப்படி இதை சமாளிப்பாங்க.

நாம இப்போ கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும், வருஷம் போகுதே, பாடங்களை முடிக்கணுமேன்னு பள்ளி, கல்லூரிகள் யோசிக்கிறது நியாயமா இருந்தாலும், அதுக்கு தீர்வு இதுவா? காலங்காலமா 8 மணி நேர வகுப்புன்னு ஸ்கூல்ல இருந்தத ஆன்லைன் கிளாசுக்கு நடைமுறை படுத்துறது சரியான்னு பாத்துக்கோங்க.
ஆசிரியர்களுக்குமே இது பெரிய அழுத்தம் தான். பிற மாநிலங்களில் கிளாஸ் எடுப்பதை வீடியோ ரெக்கார்ட் செய்து குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க. மாணவர்களும் விரும்பும் நேரத்தில் அதைப் பார்க்கின்றனர். மீண்டும் இது குறித்து யோசித்துப் பாருங்க” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமூக வலைத்தளத்தில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதியாசன். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 14 மில்லியனை தொட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, லாக்டவுனில் வீட்டில் சமையல் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

பலரும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது வீட்டில் சமைக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் பொறுப்புடன் சூர்யா சமைத்துக் கொண்டிருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த பெண் இயக்குனர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார் சஞ்சனா ரெட்டி. ராஜூ காடு என்கிற தெலுங்குப் படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி, அடுத்ததாக, பளு தூக்கும் முன்னாள் வீராங்கனையும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார். இந்நிலையில் சஞ்சனா ரெட்டிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த மூன்று நாள்களாக சஞ்சனா உண்டு வந்தார். இதனால் அவர் வீட்டில் மயக்கம் அடைந்துவிட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை, இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என கர்ணம் மல்லேஸ்வரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் சஞ்சனா ரெட்டியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அம்மா மூவி அசோசியேஷன் தனது உறுப்பினர்களுக்கு மூன்றாவது கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான்களை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து என்பது நாட்களை கடந்துவிட்டது. இதன் காரணமாக திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தனர்.
தற்போது உறுப்பினர்களுக்கு மூன்றாவது கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான்களை அம்மா மூவி அசோசியேஷன் வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக அம்மா மூவி அசோசியேஷன் செயலாளர் சரவணனிடம் பேசியபோது,
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் பிலிம் மீடியேட்டர்கள்.
இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது எங்களது இந்த முயற்சிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் என பலதரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.
இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ராபின் ஹுட்.

இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின் ஹுட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசங்களை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தில் ரஜினி பட ஹீரோயின் ஒருவர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் வாயிலாக கலந்துரையாடும் போது அவர் இதனை தெரிவித்தார். நடிகை ஸ்ரேயா ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய சத்ரபதி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளம் வாயிலாக நேரலையில் கலந்துரையாட உள்ளார்.
கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 11-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சமூக வலைத்தளம் வாயிலாக உரையாட உள்ளனர். தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இந்த உரையாடல் டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. இந்த உரையாடலின்போது தலைவன் இருக்கின்றான் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
I and @ikamalhaasan are coming together live on 11th June at 5 pm IST. @turmericmediaTM in association with @OpenPannaa
— A.R.Rahman (@arrahman) June 8, 2020
Moderated by @cinemapayyan#KnowMoreAboutTheLeader#ThalaivanIrukindraanpic.twitter.com/5zLsqR8Yjj
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா மீண்டும் 24 பட இயக்குனர் விக்ரம் குமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் சூர்யாவின் 24 படத்தை இயக்கினார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். சூர்யாவுக்கு தான் சொன்ன கதை பிடித்திருந்ததாகவும், 2021-ல் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

சூர்யா சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ள சூர்யா, இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், அனிருத் சமூக வலைதள பக்கத்தில் தான் ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், "சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குனாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்" என்று கமெண்ட் செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த கமெண்டை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படத்தின் இயக்குனர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை போன்று இந்தப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் இயக்குனர் விருமாண்டி அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: க/பெ.ரணசிங்கம் படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஓடிடியில் வெளிவரும். படத்தின் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என விருமாண்டி தெரிவித்துள்ளார்.






